• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

  ஆவிகள் நகரில் உலாவ ஆசையா..!

  விகள் உலகில் இருக்கிறதா..? இல்லையா..? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஆனால் நகரம் முழுவதும் ஆவிகள் உலாவுவதாக பரவிய புரளியால் சில நகரங்கள் 'ஆவிகளின் நகரம்' என்றே பெயரெடுத்திருக்கின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதே வேளையில் பகுத்தரிவாலார்கல்ளும்  ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களும் தொடர்ந்து குவியும் இடமாக இது இருக்கிறது. இப்படி ஆவிகள் பிடித்தாட்டும் நகரங்களின் பட்டியல் இதோ..

  1. எடின்பர்க்


  எடின்பர்க் ஸ்காட்லாந்த் நாட்டின் தலைநகரம். பழமையான இந்த நகரம் பிளேக் நோயாலும், நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளாலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இழக்க வைத்திருக்கிறது. அவர்களின் ஆவிகள் இன்னமும் வீதிகளில் அலைவதாக நம்பிக்கை.


   நம்மூரைப் போல தலையில்லா முண்டம், கொள்ளிவாய்ப் பிசாசு போன்ற நம்பிக்கைகள் ஏராளமாய் உள்ளன. இங்கு பிசாசுகள் போக ஹோலிரூட், பேலஸ், தேசிய அருங்காட்சியகம், கேஸில் போன்ற இடங்கள் சுற்றிப் பார்க்க ஏற்றவை.

  2. ஸ்வானா  அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரம்தான் ஸ்வானா. இங்கிருக்கும் எமர்சன் வில்லியம்ஸ் ஹவுஸ், போனோவேன்ச்சர் சிமிட்டிரி என்ற இரண்டு இடங்களும் ஆவிகளுக்கு பிடித்த இடங்கள் என்று கூறுகிறார்கள். ஊரில் இருக்கும் ஆவிகள் எல்லாம் இங்குதான் கூடி கும்மி அடிப்பதாக  ஒரு நாவலில் பிரபலமான எழுத்தாளர் எழுதிவிட, அதை அப்படியே நம்புகிறது இந்த ஊர்.

  ஆனாலும் ஸ்வானாவில் சுற்றுலவாசிகளைக் கவரும் இடங்கள் உள்ளன. போர்சித் பார்க், செயின்ட் ஜான்சன் கதிட்ரல், போனோவேன்ட் கல்லறை, ஆப்பிரிக்கா பாப்பிஸ்ட் தேவாலயம் ஆகியவை பார்க்கக்கூடிய இடங்கள்.

  3. நீயூ ஆர்லியன்ஸ்


  கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் மாண்ட நகரம் இது. அவர்களின் ஆவி நூற்றாண்டுகள் கடந்தும் இங்கு உலாவுவதாக நம்பிக்கை. அந்த நம்பிக்கை போய்விடக்கூடாது என்பதற்காக நாள்தோறும் புதிது புதிதாக கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.


   அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்த நகரம் உள்ளது. பிரஞ்ச் குவார்டர், ஜாக்சன் ஸ்கொயர், சிட்டி பார்க், அடுபோன் மிருகக்காட்சி சாலை என்று சுற்றுலாப் பயணிகளுக்கு தீனிப் போடும் இடங்கள் இங்கு ஏராளம்.

  4. கால்வெஸ்டன்


  இதுவும் அமெரிக்க நகரம்தான். 1900-ல் வீசிய பெரும்புயல் நகரின் பாதி மக்கள் தொகையை காணாமல் செய்து விட்டது. மழைக்கும் புயலுக்கும் பயந்து பெரிய கட்டடத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கூரை இடிந்து விழுந்து நூற்றுகணக்கானவர்களை பலி கொண்டது. இப்படி ஒரே ஒரு புயல் மொத்த நகரையும் சின்னா பின்னப்படுத்தியதால் இங்கு ஆவிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக நம்புகிறார்கள்.


   விமான அருங்காட்சியகம், ரயில் மியூசியம், மோடி கார்டன்ஸ், வரலாற்று நினைவு சின்னம் ஆகியவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள்.

  5. சான் பிரான்சிஸ்கோ  இந்த அமெரிக்க நகரில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் தரைமட்டமாயின. இதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கோல்டன் பாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவிகள் குடியிருப்பதாகவும், அது காரில் போவோர்களை போலீஸ் வேடத்தில் வந்து வழிமறிப்பதாகவும், அதனால் உண்மையான போலீஸ் இந்த பாலத்தில் நின்றால் கூட ஆவிதான் என்று பயந்து ஓடுகிறார்கள். கலிபோர்னியாவில் இருக்கும் இந்த நகரம் சுற்றுலாவுக்கு பெயர்பெற்றது. கோல்டன் பாலம், கோல்டன் கேட் பார்க், சைனா டவுன், அல்கட்ராஸ் தீவு, தீ யங் போன்ற இடங்கள் ரசனை மிக்கவை.


  இதை படித்ததும் வளர்ந்த நாடுகளின் மீது  இருக்கும் இமேஜ் சரிகிறதா..! நமது நாட்டில் கூட புயல்கள் அடித்திருக்கின்றன, நிலங்கள் நடுங்கியிருக்கின்றன, மழைகள் பொழிந்திருக்கின்றன, நோய்கள் வந்திருக்கின்றன மக்கள் லட்சம் லட்சமாக இறந்திருக்கிறார்கள். அதற்காக அவற்றை பேய் நகரம் என்று நாம் ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால், அவர்கள் அப்படியில்லை.  14 கருத்துகள்:

  1. எங்கும் மூட நம்பிக்கைகள் உண்டு என்பதற்கான உதாரணங்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மெத்த படித்த இடங்களிலும் மெத்த நாகரிகம் இருக்கும் இடங்களிலும் மிக அதிகமாக இருப்பதுதான் வினோதம்.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி டிடி சார்!

    நீக்கு
  2. வியப்பாக இருக்கின்றது நண்பரே
   இக்காலத்தில் பேய் நகரம்,அதை நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே
   வியப்பாகத்தான் இருக்கிறது
   நன்றி நண்பரே

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வெளிநாடுகளில் உலாவும் பேய்க் கதைகள் நம் நாட்டு கற்பனை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும். அவ்வளவு செழுமையான கற்பனை அது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. பல மனிதர்கள் சொல்லக்கேட்டு இருக்கிறேன் நண்பரே நான் பேய் கூடத்தான் வாழ்கிறேன் என்று மிரண்டு போய் பார்த்தால் என் மனைவிகூட வாழ்வதைத்தான் சொல்கிறேன் என்கிறான் கூலாக....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆஹா..! கில்லர்ஜியிடம் பகவான்ஜி சாயல் தெரிகிறதே..!

    நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   பதிலளிநீக்கு
  5. வணக்கம்

   ஏதோ ஒரு வகையில் காரணப் பெயர் வந்து விட்டதால் இந்த இடங்கள் சிறந்து விளங்குகிறது..
   ஆவிகளின் வாழ்விடம்அன்று
   இன்று அனைவரின் பார்வையிடமாக மாறிவிட்டது. அழகிய படங்களுடன் விளக்கம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
   த.ம5

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் ரூபன் நண்பரே,

    எனது வலைபதிவுக்கு முதன் முதலில் வருகை தரும் தங்களை வரவேற்கிறேன்.

    இந்த நகரங்கள் எல்லாமே வெறும் ஆவிகளால் மட்டுமே புகழ் பெற்றதாக கூறவில்லை. ஆவிகள் பற்றிய ஏகப்பட்ட கதைகள் உலாவுவதாக கூறப்பட்டது.

    வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  6. ஆவிகள் உலாவும்நகரில் உலாவ ஆசையா?!! ஆம்! நிச்சயமாக! யாராவது டிக்கெட் போட்டுக் கொடுத்தா...என்ன சொல்றீங்க நண்பரே! கில்லர் ஜி ஊர்ல எதுவுமே இல்லையே...இருந்திருந்தா அவர் த்லைல கட்டிட்டு போயிட்டு வந்துரலாம்...தகவல்கள் அருமை!

   (கீதா: இந்த ஊர்கள் எல்லாம் அறிந்தாலும்...எல்லாம் என் மகனின் உபயம்தான். நாங்க ஒரு வருடன் அமெரிக்காவில் இருந்தப்ப ஹாலோவீன்ஸ் டே வருமே அக்டோபரில் அப்போ ஹாலிடே வொர்க் அவனுக்கு உலகில் உள்ள பேய்கள் உலாவும் ஊர்கள் என்று நம்பப்படுபவை. அப்படி அறிந்தவைதான். ஆனால் போனது ..... என்னடா இது நம்ம நண்பர் நாம் போகாத ஊராவே சொல்றாறேன்னு கொஞ்சம் மண்டை குடைசலா இருந்தாலும் ஆஹா நம்ம இருந்த ஊர் கலிஃபோர்னியாவாச்சே எங்கடா சான்ஃப்ரான்ஸிஸ்கோவை விட்டுட்டாரு ..."ஹப்பாடா " நமக்கு புதுசா ஒண்ணைப் பெருமையா சொல்லிக்க லாம் அப்படினு வந்தா ..ஹஹ்ஹஹ நீங்க சொல்லிட்டீங்க. பார்த்திருக்கின்றோம். ஆனா எந்தப் பேயும் இல்லைங்க. ..!!.)

   தகவல்கள் அருமை. மிக்க நன்றி நண்பரே! சுவையாக எழுதுவதற்கு.

   அது சரி அப்படினா, நம்ம ஊர்ல சுனாமி அடிச்சப்ப ஊரெலாம் பேயூரா மாறி இருக்கணுமே...இலங்கை கிழக்குப் பகுதிகள் உட்பட...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் நண்பர்களே,

    எப்போதும் உங்கள் கருத்துக்கள் எனக்கு புத்துணர்வூட்டும். இப்போதும் அப்படிதான். ஆவிகள் பற்றி கீதா அவர்கள் எழுதிய விதம் அருமை.
    மரணம் நிகழாத ஒரு இடத்தை உலகில் சொல்ல முடியுமா..! அப்படிப் பார்த்தால் உலகம் முழுவதுமே ஆவிகள் உலாவிக்கொண்டு திரிய வேண்டுமே..! ஆனால் இங்கு கற்பனை வளம் மிக்க மக்கள் எங்கிருக்கிறார்களோ அங்குதான் ஆவிகளும் அதிகம் உலவுகின்றன. அவர்கள் கதைகள் மூலம்.

    கில்லர்ஜி ஊரில் நாம்தான் ஆவிகள் கதையை உருவாக்கி பரவ விட வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    நீக்கு
  7. ஆவிகள் உலகம் என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன் சில கேட்ட பார்த்தநிகழ்ச்சிகள் அடிப்படையில் . அதில் ஆவியாய் வந்தவரின் குரல் பதிவு செய்யப்பட்டதாக எழுதி இருந்தேன் அது ஒரு நண்பரின் மனைவி எனக்குக் கொடுத்த தகவல் அடிப்படையில் என்னை பொறுத்தவரை ஆவி என்பதெல்லாம் பயம் சம்பந்தப் பட்ட விஷயம்

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்