Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்

ந்த தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். அழிக்கப்பட வேண்டிய நோட்டுக்களாகத்தான் 500 மற்றும் 1000 நோட்டுகள் இருக்கின்றன.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க வேண்டுமா? அல்லது சீரழிக்க வேண்டுமா? வேறொன்றும் செய்ய வேண்டாம், கொஞ்சம் கள்ள நோட்டுக்களை அச்சடித்து மக்கள் மத்தியில் புழங்க விட்டால் போதும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு விடும். நிதிநிலை சரிந்து விடும்.

அதனால்தான் பகை நாடுகள் எதிரி நாட்டின் கரன்சியை தங்கள் நாட்டில் அச்சடித்து விநியோகிக்கின்றன. அப்படிதான் பாகிஸ்தானில் இருந்து எராளமான 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் வருகின்றன.

எப்போதும் ஒரு நாட்டின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளே கள்ளப் பணமாக அச்சடிக்கப் படுகின்றன. இதற்கு காரணமும் இருக்கிறது. கள்ள நோட்டை ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அதில் நிறைய 'ரிஸ்க்' உள்ளது. 500 ரூபாய் என்றாலும் 50 ரூபாய் என்றாலும் ஒரே 'ரிஸ்க்'தான்.

பெரும் தொகையுள்ள பணத்தை ரிஸ்க் எடுத்து மாற்றி விட்டால் லாபம் அதிகம். அதனால்தான் கள்ள நோட்டுகள் பெருந்தொகை உள்ளதாகவே உள்ளன.


கள்ள நோட்டுக்கு மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்துக்கும் பெரும் மதிப்புள்ள நோட்டுக்கள் துணை போகின்றன. இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே  500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெரிதாக பொருளாதரத்தில் வளர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இன்றைக்கும் 70 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அப்படியொரு ஏழை நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும். மொத்த ரூபாய் நோட்டுக்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 76.5 % உள்ளன. இந்த நோட்டுகளில் 70% மேல் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் 350 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. 100 கோடிக்கு மேல் 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இது ஒரிஜினல் நோட்டுக்களின் புள்ளி விவரம். கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. அது தனி கணக்கு.

அதிக மதிப்புள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. என்பது பெருமைப்படக்கூடிய விஷயமில்லை. அது பயன்படும் விதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நோட்டுகளை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் அதிகம் வசிக்கும் ஏழைகள் அல்ல. இந்த நோட்டுக்கள் ஊழலுக்கு மிகவும் வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை வளர்க்கவும் செய்கின்றன.

கறுப்புப் பண பரிமாற்றத்துக்கும், வெளிநாடுகளுக்கு பணத்தைக் கடத்துபவர்களும் இந்த நோட்டுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதை எடுத்துச் செல்வது எளிது. அதனால்தான் இந்த நோட்டுக்களை 'கறுப்பு பொருளாதாரத்தின் முதுகெலும்பு' என்று கூறுகிறார்கள்.

இது நல்ல பணம்
உதாரணமாக ஹவாலா பணம் ஒரு கோடி ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களாக அதை எடுத்துச் சென்றால், அதன் எடை 50 கிலோ வரை இருக்கும். அதையே 500 ரூபாய் நோட்டுக்களாக கொண்டு சென்றால் வெறும் 2 கிலோதான் இருக்கும். 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றால், ஒரு கிலோவுக்கு சற்று கூடுதலாக இருக்கும்.

பெரிய மதிப்பிலான நோட்டுக்களோடு ஒப்பிடும்போது சிறிய மதிப்பிலான நோட்டுக்களை எடுத்துச் செல்வதற்கும், கண்ணில் படாமல் தப்பிப்பதற்கும் ஏற்படும் பிரச்சனைகள் மிக மிக அதிகம்.

நியாயமான முறையில் நடைபெறும் பணப் பரிமாற்றத்திற்கு பெரும்பாலானவர்கள் காசோலை, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். வரி ஏய்ப்பு செய்பவர்களும் சட்ட விரோத செயல்களை செய்பவர்களும், பினாமி பெயரில் சொத்து வாங்குபவர்களும் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு பணம் வழங்குவதற்குமே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகிறார்கள். இதே போன்ற செயல்களுக்கு குறைந்த மதிப்பிலான நோட்டுக்களை பயன்படுத்துவது முட்டாள்தனமான செயல் என்பது அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியும்.

அதனால்தான் பெரிய மதிப்புள்ள நோட்டுக்களை அரசு திரும்பப் பெறும்போது, கறுப்பு பொருளாதரத்திற்கு பெரிய அடி விழுகிறது. பெரும்பகுதி ஒழிக்கப்பட்டு விடுகிறது. வெளிநாடுகள் பலவற்றில் பெரிய மதிப்பிலான நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒருகாலத்தில் 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டு வந்தன. ஆனால் இப்போது அந்த நோட்டுகளை எல்லாம் ஒழித்துவிட்டார்கள். இப்போது 100 மதிப்புள்ள நோட்டுக்கள்தான் அங்கு அதிக மதிப்புடைய நோட்டுக்கள்.

இதனால் அந்த நாடுகளில் நிலவிவந்த சட்டவிரோதமான பணப்புழக்கம் குறைந்தது. ஆனால் நமது நாட்டில் நிலைமையே வேறு. கடந்த 10 ஆண்டுகளில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது 17 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவின் கிராமங்களில் இன்றைக்கும் 500 ரூபாய் நோட்டுக்களைப் பார்ப்பது குதிரைக்கொம்புதான். 1000 ரூபாய்க்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகள்தான். ஆனால் 500 ரூபாய் தாராளமாகக் கிடைக்கும் வேளையில் சிறிய மதிப்பிலான ரூபாய்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.

இது கள்ளப் பணம் மதிப்பு ரூ.6 கோடி
இப்படி அதிக மதிப்பிலான நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் இப்போது 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது நிதி அமைச்சகத்தின் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் 500 ரூபாய் நோட்டுக்களில் 60.74 சதவிகிதம் கள்ள நோட்டுகள். 1000 ரூபாய் நோட்டுகளில் 4 நோட்டில் ஒன்று கள்ள நோட்டாகும்.

கொஞ்சம் பணக்காரர்களும், நிறைய ஏழைகளும் கொண்ட ஒரு நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தேவையற்றவை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். உண்மைதான். சாமான்ய மக்களைவிட கருப்பு பண முதலைகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சட்டவிரோதிகளுக்கும், பணக்கடத்தலுக்கும்தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதன் மூலம் கறுப்பு பொருளாதாரத்தையும், கள்ள நோட்டையும் ஒழித்து வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

====

61 கருத்துகள்

  1. இங்குள்ள அனைத்து சட்டங்களும், நியதிகளும் தாங்கள் சொன்ன பண முதலைகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சட்டவிரோதிகளுக்கும் தான் பின்னே எப்படி இருக்கும்.
    வளமான இந்தியாவை நாம் கனவில் தான் காண வேண்டும் நண்பரே,
    தங்கள் பதிவு சிற்திக்கச் சேய்யும் ஒன்று. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ, இதெல்லாம் ஒழிக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம். அவர்களுக்குத்தான் இது போன்ற நோட்டுக்கள் அதிகமாக தேவைப்படுகிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. விளக்கமான நல்ல பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறையாக எனது பதிவிற்கு வந்து பாராட்டியதற்கு நன்றி அய்யா!

      நீக்கு
  3. அரசாங்கம் தீவிரமாக சிந்தித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடவடிக்கை எடுத்தல் கொஞ்சமாவது ஊழலை கட்டுப்படுத்தலாம். செய்வார்களா? பொறுத்திருந்து பார்போம்!
      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. தங்கள் கண்டுபிடிப்பை வரவேற்கிறேன்.
    தொடர்புடையவர்கள்/சம்பந்தப்பட்டவர்கள்
    கருத்திற்கொள்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்தில் கொண்டால் நல்லது. பார்ப்போம்!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. இந்தியாவில் பயணிக்கும்போது சின்ன மதிப்புள்ள நோட்டுகளைக் கத்தை கத்தையாகக் கொண்டுபோகவே ஒரு ஸூட் கேஸ் வச்சுக்கணுமோ:(

    நல்லதும் கெட்டதுமான மனம் யோசிக்குதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூட்கேஸ் தேவைப் படாது. பெரிதாக செலவு செய்யும் எல்லாவற்றையும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் தந்து விடலாம். இன்று நடுத்தர ஹோட்டல்களில் கூட கார்ட் பெற்றுக் கொள்ளகிறார்கள். மிகச் சிறிய கை செலவுக்கு மட்டுமே பணம் வைத்துக் கொண்டால் போதும்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  6. நல்ல கருத்து! கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறும் மத்திய அரசு முதலில் இக் கள்ளப் பணத்தை ஒழிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கள்ளப் பணத்தை கண்டுபிடித்து ஒழிப்பது சிரமம். அதனால்தான் தீடிரென்று பெரும் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டாலே கள்ளப் பணம் ஒழிந்து விடும்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. சகோ! இந்திய பொருளாதாரம் அறிந்துதான் இந்த பதிவை வெளியிட்டீர்களா?அந்நிய செலவாணியில் 10.50.100 ரூபாய் நோட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?இந்தியா இன்னும் வறுமையான நிலையில் இருந்தாலும் முந்தைய காலத்தோடு ஒப்பிடும் போது பொ.ருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது எனலாம்.பட்டு,நகைகள்,உணவகங்கள் என நகரங்கள் கலைகட்டுகின்றன. அமெரிக்கன் டாலருக்கில்லாத போட்டியா உலக சந்தையில் இந்திய பணத்திற்கு உள்ளது? தற்போதைய இணைய வளர்ச்சியில் பண வர்த்தனைகள் வங்கி சார்ந்து ஊக்கிவிக்கப்பட வேண்டும்.இப்பொழுது ஆதார் கார்டு உருவாகியுள்ளன.PAN card எண்கள் உள்ளன.சட்ட முறைகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஏமாற்றுவது எப்படியென்ற நேர்மையற்ற தனம் அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பவர்களிடம் இருக்கிறது.காலை சாமிக்கு பூசை போட்டுவிட்டே தவறுகளை செய்யும் மனபாவம் மக்களுக்கு இருக்கிறது.எனவே அரசு இயந்திரம் செயல்படுவதையும் திட்டங்கள் கொண்டு வருவதிலும் 500,1000 தவறுகள் இலலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ,
      இங்கு நான் குறிப்பிட்டது இந்த நோட்டுக்கள் எதற்காக உபயோகப்படுகின்றன என்ற விதத்தைதான். டாலரின் மதிப்பையோ அன்னிய செலவானிப் பற்றியோ பேசவில்லை. நேர்மையான வர்த்தகம் என்றால் நீங்கள் கார்டு மூலமே செய்யலாமே.. அது நீங்கள் 10 லட்சத்திற்கு நகை வாங்குவதாக இருந்தாலும்.. !
      ஆனால், நேர்மையற்ற முறையில் வர்த்தகம் நடைபெறும் போது பணப் பரிமாற்றம் பில் இல்லாமல் இரண்டாம் கணக்கு வர்த்தகமாக நடைபெறும். தெரியாமலா 10,000 டாலர் வரை நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இப்போது 100 டாலரோடு நிறுத்திக் கொண்டன. அதிலும் இங்கிலாந்தில் 50 பவுண்ட் ஸ்டேர்லிங் மேல் புழக்கத்தில் இல்லை. 100 பவுண்ட் ஸ்டேர்லிங் அதிகமான உபயோகத்தில் இல்லை. அது மிக குறைந்த அளவே அச்சிடப் பட்டு வெளியிடப் படுகிறது.
      எதற்கெடுத்தாலும் வெளிநாட்டை பின் பற்றும் நம்மவர்கள் இந்த பண விஷயத்தில் அவர்களின் நடைமுறையை பின் பற்றினால் என்ன..?!

      நீக்கு
  8. அருமை நண்பரே சமூக பயனுள்ள பதிவு விரிவாக அலசியுள்ளீர்கள் வாழ்த்துகளோடு நன்றியும் காரணம் மேலே எனக்காக தாங்கள் வைத்திருக்கும் நல்ல பணத்தில் 4 கட்டு மட்டும் எடுத்துக்கொண்டேன் அதற்க்கு பகரமாக
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நாலு கட்டோடு ஏன் நின்று விட்டீர்கள் எல்லாமே உங்களுக்குத்தான். மேலே உள்ள பணத்தை எடுத்தால் கீழே உள்ள பணம் இணைப்பாக தருவோம்.

      நீக்கு
  9. எழுபது சதவீதம் கள்ள நோட்டுக்களா
    வியப்புதான மேலிடுகிறது நண்பரே
    தங்களின் கருத்து அரசால் அவசியம் பரிசீலிக்கப் பட வேண்டிய
    கருத்துதான் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசுக்கு தெரிந்தே இவ்வளவு கள்ளப் பணம் இருக்கிறது. ஆனாலும் தங்கள் பண வெறிக்கு பாதகமாக இருக்கும் என்று எந்த அரசியல்வாதியும் மூச்சு விடுவதில்லை.
      வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. ஒழியத்தெரியாதவன் என்ற பழமொழியை போலுள்ளது ,இங்கிருக்கும் பண முதலைகள் பெரிய நோட்டுகளை ஒழிப்பார்கள் என நினைப்பது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி! இவர்கள் ஒழிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை!

      நீக்கு
  11. நடத்துனரிடமோ வேறு யாரிடமோ ஒரு 500 ரூபாய்த் தாளையோ 1000 ரூபாய்த் தாளையோ கொடுத்துவிட்டு அவர்கள் அதை உள்ளே வைப்பதற்குள் நாம் அனுபவிக்கும் அவஸ்தை இருக்கிறதே... அப்பப்பா. அவசியம் அழிக்கப் பட வேண்டியவையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தோழரே!
      சில சமயங்களில் அழுக்காக இருக்கிறது, மை பட்டிருக்கிறது என்று அதை திருப்பி தரும்போது மனம் பாடாய் படும். அடுத்து எங்காவது அந்த நோட்டை மாற்றும் வரை வேறு சிந்தனையே வராது.
      வருகைக்கு நன்றி தோழரே!

      நீக்கு
  12. நூறு ருபாய் நோட்டுக்கு மேல் தேவையே இல்லை , ஐநூறும் ....ஆயிரமும் குழபத்தையும் ...லஞ்சத்தையும் ....பதுக்களயும்.....ஹவாலாவையும்தான் பெருக்கும் .உங்களின் பதிவை எல்லா மக்களும் சிந்திக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே!
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

      நீக்கு
  13. முன்பு வங்கியில் என்றாவது ஒரு நாள்... யாரிடமாவது ஒரு தாள்...

    இன்று தினமும் + பலரிடமும்... பணம் கட்டுவதற்குள் நேரம் அதிகம் + பயம் அதை விட...!

    அரசு உடனே சரி செய்ய வேண்டிய விசயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் டிடி சார்!
      வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  14. கொஞ்சம் பணக்காரர்களும் நிறய அரசியல் வாதிகளும் உள்ள நாட்டிற்கு இது தேவைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயமாக, அப்போதுதானே அவர்களால் பணத்தை பதுக்க முடியும். கோடி கோடியாக பணத்தை லஞ்சமாக பெறமுடியும்.

      நீக்கு
  15. லஞ்சஊழல் அதிகம் என்று பார்த்தால் இது வேறயா நாட்டை உருப்படவே விடமாட்டாங்களா.
    இதை எல்லாம் யாரிடம் முறையிடுவது.ம்..ம்..ம் நல்ல அலசலும் பதிவும்.
    தொடருங்கள் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியவாதிகளின் பண வெறி மோகம் மாறினால் தான் இதுவும் மாறும். அதுவரை நாம் விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டே இருப்போம். சகோ!

      நீக்கு
  16. உண்மைதான் நண்பரே இங்கு கனடாவில் இருபது டோலர்தான் சாதாரணமாக் புழக்கத்தில் .
    அதற்கு அடுத்து50.100 dolar இவற்றை பொதுவாக காணமுடியாது தேவைபட்டால் வங்கியில் வங்கிக்கொள்ளலாம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி நண்பரே!
      கனடாவில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் எல்லாவற்றிலுமே இதே நிலைதான். அங்கு நாம் ஐந்து ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் கூட பணத்துக்குப் பதிலாக கார்ட் கொடுக்க முடியும். பல இடங்களில் கரன்சியை வாங்க மாட்டார்கள். கார்டுதான் கேட்பார்கள். அங்கு 100 % வர்த்தகத்தை கணக்கில் கொண்டுவர நினைக்கிறார்கள். நம் நாட்டிலோ நிலைமையே வேறு. மக்கள் விழிப்படையாமல் அரசு மாறுவதில்லை.

      நீக்கு
    2. பதிவர் கரிகாலன்,
      //இங்கு கனடாவில் இருபது டோலர்தான் சாதாரணமாக் புழக்கத்தில் //
      உங்க ஊரு 20 கனடா டாலர் இங்கே 1000 ரூபாய் நோட்டுகளாக மாறிடும். அதை கவனியுங்க.
      அப்புறம் ஒரு veggie உணவு சாப்பிட இங்கு மிக குறைந்தது 200 ரூபாய் வேண்டும்.

      நீக்கு
  17. ஊழல் பெருச்சாளிகளின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு தூங்கும் பெரிய நோட்டுக்கள் மிக அதிகம் இந்தியாவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கார்த்திக். நான் தங்கள் தளத்தில் இணைந்திருக்கிறேன்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  18. சொன்ன விஷயமும்
    சொல்லிச் சென்றவிதமும் அருமை
    கோடிக்கால் பூதம்
    ஆனால் அதற்குக் காதுதான் கிடையாது
    என்று அரசைச் சொல்வார்கள்

    அதனால்தான் பல நல்ல விஷயங்கள்
    அதற்குத் தெரியாமலே போகிறது

    பயனுள்ள பகிர்வு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோடிக்கால் பூதம்
      ஆனால் அதற்குக் காதுதான் கிடையாது
      என்று அரசைச் சொல்வார்கள்.//

      இதுவரை நான் கேள்விப் படாத உவமை.
      தங்களின் முதல்முறை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  19. அருமையான பதிவு! கலக்கல்! பொருளாதாரத்தில் இதை அறிந்திருந்தாலும் நீங்கள் மிகவும் அழகாகத் தொகுத்திருக்கின்றீர்கள் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில். இடையில் நீங்களும் பார்த்திருப்பீர்கள் நோட்டு கள்ள நோட்டா இல்லையா என்று அறிய என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைகள்.....

    கள்ள நோட்டு பணக்கார முதலைகளுக்குத்தான்....அதில் அவர்கள் கொழிக்க......ஏழைகள், மட்டும் நம்மைப்போன்ற சாமான்யர்கள் சில்லறைக்குக் கூடத் தட்டித்தடவ வேண்டி உள்ளது....நமக்கு நட்டம் ஏற்படும் வகையில்....ஒரு நாளைக்குக் குறைந்தது 15 ரூபாய் நாம் இழக்க நேரிடுகின்றது ஒரு ரூபாய், 2 ரூபாய் தட்டுப்பாட்டினால்.......கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.....கிராமங்களில் கூட அவர்கள் சில்லறை இல்லை என்றால் கிடைக்கும் போது கொடுத்து சமாளிக்க முடிகின்றது ஏனென்றால் கடைக்காரர், மக்கள் ஒருவருக்கொருவர் தெரிந்த அதே ஊரைச் சேர்ந்த தெருவைச் சேர்ந்திருப்பதால்....ஆனால் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் வசிக்கும் மக்கள்??!!

    கேவலம்! ஊழல் பெருகி இருப்பாதால்....யார் பூனைக்கு மணிகட்டுவது?!!!! பொதுமக்கள் நினைத்தால் புரட்சி செய்ய முடியும் ஆனால் அதற்கும் ஒரு தலைவர் வேண்டுமோ?!!! என்னவொ போங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //.ஒரு நாளைக்குக் குறைந்தது 15 ரூபாய் நாம் இழக்க நேரிடுகின்றது ஒரு ரூபாய், 2 ரூபாய் தட்டுப்பாட்டினால்.......கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.....//

      சத்தியமான வார்த்தைகள். பதிவின் பொருளை ஆழமாக உணர்ந்து பின்னூட்டம் இட்டது அருமை. வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  20. மற்ற பதிவுகளை வாசிக்க பின்னர் வருகின்ரோம் நண்பரே! கொஞ்சம் வேலைப்பளு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நண்பர்களே! கருத்துரைக்காக காத்திருக்கிறேன்.

      நீக்கு
  21. கருத்தும் அதன் விளக்கங்களும் வியப்பிலாழ்த்துகின்றன!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் முறை வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  22. சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி நமது நாட்டிலும், பத்தாயிரம், ஐந்தாயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. ஒருமுறை ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அறிவிப்பு செய்தார்கள்.பெரும் முதலைகள் தப்பி விட்டனர். 1000, 500 செல்லாது என்று இப்போது சொன்னால், இன்றைய இந்தியாவில் அதிகம் பாதிக்கப் படுவோர் நடுத்தர மக்களாகவே இருப்பர். எனவே இதில் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

    (நேரம் இருக்கும் போது எனது “ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு)” என்ற எனது பதிவினைப் படித்துப் பாருங்கள். http://tthamizhelango.blogspot.com/2013/06/101.html )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுத்தர மக்கள் பணத்தை வங்கியில் மாற்றிக்கொள்ள கால அவகாசம் கொடுப்பார்கள். அதில் அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்ற முடியாது. அதனால்தான் கருப்புப்பணம் ஒழிகிறது. கண்டிப்பாக நடுத்தர மக்களை பாதிக்காது.

      நீக்கு
  23. அரசாங்கத்திற்கு இந்தவிஷயம் தெரிந்திருந்தும் மக்களிடம் நாடகம் ஆடுகிறார்கள். இந்தியாவில் எல்லா அரசியல்வாதிகளும் கருப்பு பணத்தை பதுக்கிகொண்டு இருக்கும்போது அரசியல்வாதிகளின் கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் இருப்பதாக கூறுவது கப்ஸாவா டுபாக்கூறா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் அரசு நடவடிக்கை எடுத்துவிட்டதே. சிரமங்கள் கொஞ்சம் இருந்தாலும் மிக நல்ல நடவடிக்கை.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  25. உங்களுக்கு கருநாக்கூகூகூகூகூகூகூ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்வழிச் சாலை அமைய வேண்டும் என்றும் எழுதினேன். அதுவும் அமைந்தால் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். கருநாக்கூ ... என்பதை...!
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  26. ஆனால் இரண்டாயிரம் ரூபாய் அச்சடித்து தருப்படுகின்றதே. நீங்கள் கூறும் நல்லது நடக்க வாய்ப்பு இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் மீண்டும் ஒரு கறுப்புப் பண சாம்ராஜ்யம் அமைய அரசே வழிவகுத்து கொடுத்திருக்கிறது. இது பற்றி ஒரு பதிவு எழுதவுள்ளேன். 2000 ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாய் கொண்டு வந்திருக்கலாம். ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. பொறுத்துப் பார்ப்போம்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  27. தங்களின் பழைய கட்டுரையையும் படித்தேன். ‘எண்ணம் போல் வாழ்க.’ என்பார்கள். அதுபோல உங்கள் எண்ணம் போல் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. நல்லது நடக்கும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் கருப்பு பணம் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது பெருமளவு புழக்கத்தில் கலந்திருந்த கள்ளப்பணம் ஒழிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
    2. Looks like they are taking some time to get it cool..... hence they are releasing 2000 Notes.. .. After two/three years.. they can simply say 2000 notes are void and get it changed as 100 notes. Simple.

      நீக்கு
    3. சரியாக சொன்னீர்கள்!
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  28. இந்தியாவில் 500 ரூ, 1000 ரூ 2000 ரூ நோட்டுகளை நிறுத்திவிட்டு, 300 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 30 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளை அதிகம் வெளியிட வேண்டும். பணத்தின் உச்ச மதிப்பு 300 ரூபாய் போதும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை