Full Width CSS

குழந்தைகளை ஊனமாக்கும் குமட்டல் மாத்திரை


ரு பெண்ணின் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்பது கர்ப்பம் தரிப்பதுதான். அந்த பெண்ணை மட்டுமல்லாது, அவளின் குடும்பத்தையே சந்தோஷப் படவைக்கும் சங்கதி. அந்த கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் குமட்டலும் வாந்தியும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்கடித்துவிடுகிறது. 


கர்ப்பிணிகளுக்கு இம்சைதரும் இந்த குமட்டலை கட்டுப்படுத்துவதற்காக 1957-ல் 'தலிடோமைட்' என்ற மாத்திரை அறிமுகப்படுத்தப் பட்டது. தொடக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக கருதப்பட்ட இது சிறிது காலத்திலேயே மோசமான விளைவுகளை தரத் தொடங்கியது. 

இந்த மாத்திரையை உபயோகித்த தாய்மார்களின் குழந்தைகள் பெரும்பாலும் கை கால் ஊனத்துடன் பிறந்தன. 1950-களின் இறுதியிலும் 60-களின் தொடக்கத்திலும் 46 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்புக்குள்ளாயின. இது தவிர கணக்கில் வராத குழந்தைகளின் எண்ணிக்கை ஏராளம். 

மாத்திரையின் வீரியம் கண்டு 1961-ல் இதன் உபயோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. சிறிது காலம் கடந்தப் பின் வேறு சில நோய்களுக்கு 'தலிடோமைட்' கொடுக்கத் தொடங்கினர். கேன்சர் நோய்க்கும் வலி நிவாராணியாகவும் அது பயன்ப்பட்டது.

இந்த மாத்திரை குழந்தைகளை ஊனப்படுத்த என்ன காரணம் என்று இங்கிலாந்தில் இருக்கும் அபிர்தீன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவில் தலிடோமைட் மாத்திரை ரத்தக் குழாய்களை அதிகமாக பாதிக்கிறது என்று கூறியது.

ஒரு பெண் கர்ப்பம் ஆக ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களுக்குத்தான் குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் அதிகம் இருக்கும். அப்போதுதான் இந்த மாத்திரையை அவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கை கால்கள் வளர தொடங்கும் நேரம். எனவே, தலிடோமைட் நேரடியாக அதை பாதிக்கிறது. அதனால்தான் பிறக்கும் குழந்தைகள் கை கால் வளர்ச்சி இன்றி பிறக்கின்றன என்று கண்டறிந்தார்கள். இருந்தாலும் தொழுநோய்களுக்கு தலிடோமைட் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்று கூறியது. 


இந்த மாத்திரை குழந்தைகளை அரைகுறையாக பிறக்க வைப்பது மட்டுமல்ல. வேறு சில கேடுகளையும் உருவாக்குகின்றன. மலச்சிக்கல், நரம்பு பாதிப்பு, கால்களில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து போதல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானிகள் இந்த மருந்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். 

இங்கிலாந்தில் உள்ள பிரிங்க்டனை சேர்ந்த ஜான் ராபர்ட் இவருக்கு 48 வயது ஆகிறது. இவருக்கு காது வளரவே இல்லை. இவரின் தாயார் இவர் கருவில் இருக்கும் போது தலிடோமைட் மாத்திரையை உட்கொண்டாராம். 

ராபர்ட்டுக்கு இப்போது கண்களும் சரியாக தெரிவதில்லை. கண்ணாடி போட வேண்டும். கண்ணாடி போட காதுகளும் வேண்டுமே அது இல்லாததால் தனது டிஜிட்டல் கேமரா வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார். 

ஒரு நோய்க்கு தரும் மருந்து மற்றொரு நோய்க்கு காரணமாவது ஆங்கில மருத்துவத்தின் எழுதப்படாத விதி.46 கருத்துகள்

 1. அதிர்ச்சியான தகவல் நண்பரே! விஞ்ஞானத்தில் ஒருபுறம் அசுரவளர்ச்சியில் போவது மறுபுறம் வளர்ச்சியை முடமாக்குவது! என்னதான் தீர்வு!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஞ்ஞானத்திற்கான விலை என்றுதான் சொல்லவேண்டும். வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 2. சைடு எப்பெக்ட் மிகவும் கொடூரம்தான் ,நாம் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு எலியா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாட்டு முதலாளிகளுக்கு நாம் எலிகள்தான். ஆனால், இந்த பாதிப்பு உலகம் முழுவதுமே உள்ளது.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
  2. நாம் ஒரு சில மருந்துகளுக்கு எலிகள் மட்டுமல்ல, ஒழிவாக்கப்படும் மருந்துகளின் சந்தையாகிப் போனோம், நமது மருத்துவ உலகின் கருணையற்ற செயல்களால். இதற்கு இல்லை பகவான் ஜி.....நண்பர் செந்தில் சொல்லுவது போல் உலகம் முழுவதும் இந்தப் பாதிப்பு உண்டு. பல நாடுகளில் இது கொடுக்கப்படுவது தவிர்க்கப்படுகின்றது. மிக மிகத் தேவையானால் மட்டுமே கொடுக்கப்படுகின்றது.

   கீதா

   நீக்கு
 3. என்ன கொடுமைங்க இது... ஒவ்வோர் நாளும் அவர்கள் படும் வேதனை தான் எத்தனையோ...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கை முழுவதும் நரக வேதனைதான்.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 4. கொடுமை நண்பரே
  ஒரு நோக்குத் தரப்படும் மருந்து வேறொரு நோய்க்குக் காரணமாவது கொடுமை அல்லவா?
  தமிழ் முறை சித்த மருத்துவம் இருக்கவே இருக்கிறது
  ஆனால் நம்மவர்கள் நம்ப மறுக்கிறார்கள்
  என்ன செய்வது
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் இமெயிலை கண்டுபிடித்த சிவ அய்யாதுரை சொன்னார். ஆங்கில மருத்துவத்துக்கு அதிகபட்சமாக 200 வருட பாரம்பரியம் தான் உள்ளது. சித்த மருவத்துக்கு 5,000 வருட பாரம்பரியம் உள்ளது. எத்தனை வகையான சோதனைகளை கடந்து வந்திருக்கும் என்று கூறினார். அது சரியாக முறைப்படுத்தப் படாததாலே பெரிய வளர்ச்சி பெறாமல் இருக்கிறது.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 5. தாலிடோமைட் குழந்தைகள் பற்றி அறிந்திருந்தாலும் படங்களும் ,பதிவும்,மனதைப் பிசைகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவமானவர்கள்தான் அந்தக் குழந்தைகள்.
   வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 6. அதிகம் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு மாற்று இல்லையர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது குறைந்திருக்கிறது. இருந்தாலும் பெண்கள் குமட்டலுக்கு மாத்திரைகளை சாப்பிடாமல் தவிர்ப்பதே நல்லது.
   வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 7. பதிவு அதிர்ச்சி அளிக்கின்றது நண்பரே
  த.ம- 7

  பதிலளிநீக்கு
 8. இதுவரை அறியாத அதிர்ச்சியூட்டும் தகவல்
  அருமையான விழிப்புணர்வுப் பதிவுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. ஆங்கில மாத்திரை என்றாலே.. ....இப்படியான அதிர்ச்சியான பின் விளைவுகள்தான் நண்பரே....

  பதிலளிநீக்கு
 10. ஆங்கில மாத்திரை என்றாலே.. ....இப்படியான அதிர்ச்சியான பின் விளைவுகள்தான் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிச் சொல்வதிற்கில்லை நண்பர்களே. மருந்து என்றால் அது எந்த மருந்து என்றாலும், 100% பக்கவிளைவுகள் இல்லை என்ற உத்தரவாதமுள்ள மருந்துகள் என்று இல்லை. ஒவ்வொருவருடைய உடலின் ஏற்பு சக்தியைப் பொருத்தே உள்ளது.

   நீக்கு
 11. அன்புள்ள அய்யா,

  அலோபதி மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் இது போன்ற கொடுமைகள் நிகழ்வதை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது. காலமெல்லாம் கஷ்டம்தானே அந்தப் பிஞ்சுகளுக்கு!

  த.ம. பத்துப் போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா, அலோபதி என்றாலே ஆபத்து என்றுதான் அர்த்தம் போல!
   வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 12. வணக்கம்
  தகவல் வியப்பாக உள்ளது தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்..
  த.ம 11
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
   தங்களின் நினைவுக் கீற்றுகள் கவிதை படித்தேன். மிக அருமை!

   நீக்கு
 13. இப்படி சிசுவைச் சிதைக்கும் மருந்துக்கு ஏன் தடை விதிக்காமல் இருக்கிறார்கள். கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த மாத்திரை மற்ற சில நோய்களையும் குணமாக்குவதால் தடை செய்யப்படவில்லை. அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இதை கொடுத்துவிட வாய்ப்பதிகம். அதனால் பெண்கள் குமட்டல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
   கருத்துக்கு நன்றி சகோ!

   நீக்கு
 14. படங்களைப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. இந்த மருந்தை இன்னும் தடை செய்யாமல் இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த மாத்திரை மற்ற சில நோய்களையும் குணமாக்குவதால் தடை செய்யப்படவில்லை. அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இதை கொடுத்துவிட வாய்ப்பதிகம். அதனால் பெண்கள் குமட்டல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
   கருத்துக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 15. முதலில் தாலிடோமைட் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைக்கு உங்களுக்கு ஒரு பூங்கொத்து.

  பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்கள் எடுத்துக் கொள்ள நேரிட்டாலும் இதே விளைவிகள்தான் என்றாலும் ஆண்கள் உடலுறவு கொள்ளும் நேரத்தில் ஆணுறை அணிந்து அதைத் தவிர்க்கலாம்.

  பெண்கள் என்றால் அவர்கள் ஒருவேளை இந்த மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், முதலில் அவர்கள் குழந்தை பெறும் பேருடைய வட்டத்திற்குள் இருந்தால், கருவுற்றிருக்கின்றார்களா என்பது சோதிக்கப்படுகின்றது/பட வேண்டும். உடலுறவு கொள்ளுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லை என்றால் அதற்காக தடைகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை விட ஆணும் சரி பெண்ணு, சரி சற்று நல்ல நோக்குடன், கருணை உள்ளத்துடன் விலகி இருந்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதை தவிர்க்கலாம்

  இல்லை என்றால் ஒரு வருடமேனும் மாதாந்திர வருகை வராமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் கர்பப்பை அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

  ஆணானாலும், பெண்ணானாலும் மாத்திரை எடுத்துக் கொள்ளும் காலத்தில் இரத்த தானம் அளிக்கக் கூடாது.

  பாலூட்டும் அம்மாக்கள் இதை எடுக்க வேண்டிய சூழல் வந்தால் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

  மனஅழுத்தத்திற்கான மாத்திரைகள் உட்கொள்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

  சீஷர் வருபவர்களாக இருந்தாலும் அதைப் பற்றி மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

  உங்கள் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருக்கின்றதா என்பதை செக் செய்தாக வேண்டும் இதை எடுத்துக் கொள்ள நேரிட்டால். குறைவாக இருந்தால் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

  மது அருந்துபவர்களுக்கு பக்க விளைவுகள் அதிகம், விபரீதம்.

  இந்த மாத்திரைகள் (காப்சுயூல் வடிவம்) உபயோகப்படுத்தும் போது மட்டும்தான் வெளியில் எடுக்க வேண்டும். ஒருவேளை அது திறந்து அந்தப் பொடி நம் தோலில் கையில் பட நேர்ந்தால் உடன் கையை பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.

  மருத்துவர்கள் கூட தாலிடோமைட் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளை பரிசோதிக்க நேரிட்டால் நோயாளிகளின் ரத்தத்தில் அது இருந்தால், நோயாளிகளின் உடலிலிருந்து வெளியாகும் திரவங்கள், சீழ்கள் போன்றவற்றை தொடாமல் இருக்க கையுறை அணிந்து கொள்வது அவசியம். பொதுவாக மருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள்...ஆனால் நோயாளிகள் தாங்கள் தாலிடோமைட் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதை மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

  இம்மருந்து நேரடியாகவோ பிற மருந்து (பெயர்க்ள் இங்கு குறிப்பிடப்படவில்லை...) காம்பினேஷனிலோ, சிலவகை கான்சர், குறிப்பாக போன்மாரோ கான்சர் நோய்களுக்கு அளிக்கப்படுகின்றது. எனவே மேற் சொன்னவற்றை பின்பற்ற வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகனிடமிருந்து அறிந்தவற்றை இங்கு கொடுத்துள்ளேன் நண்பரே.

   கீதா

   நீக்கு
  2. பதிவைவிட பின்னூட்டம் நீளமாக இருக்கிறது. மகன் டாக்டர் என்பதால் ஏராளமான தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் மூலமாக அவற்றை தெரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றோம். கூடுதலாக பல தகவல்களை தங்களின் கருத்துரை தந்தது.
   நன்றி கீதா மேம்!

   நீக்கு
 16. அதிர்ச்சியாக இருக்கிறது! இன்னும் இந்த மாத்திரைகளை பலர் சாப்பிடுகின்றனர்! நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. கொடுமை......

  பக்க விளைவு ஏற்படும் எனத் தெரிந்தே பல மாத்திரைகளை இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.... அப்போதைய பாதைக்கு தீர்வு கிடைப்பதால் மக்களும் அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.....

  பதிலளிநீக்கு
 18. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
  பயனுள்ள உளநல வழிகாட்டல்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 19. மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் தரக்கூடிய தகவல். ஊனமுற்றுப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கைப் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் அதற்கு காரணமான தாய்க்கும் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வு இருந்துகொண்டே இருக்கும். மசக்கை சமயங்களில் குமட்டலும் வாந்தியும் தாங்க முடியாதுதான். ஆனால் அதைத் தடுக்கும் மாத்திரையால் குழந்தைக்கு இப்படியொரு உடல் ஊனம் உண்டாகுமென்று அறிந்திருந்தால் நிச்சயமாக அம்மாத்திரைகளைத் தவிர்த்திருப்பாள் எந்தத்தாயும்.. தலிடோமைட் மாத்திரை பற்றி இதுவரை அறிந்திராத தகவல். நன்றி செந்தில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறியாமையில் நிகழ்வதுதான் இந்த தவறு. அம்மாக்களை குறை சொல்ல முடியாது.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 20. வணக்கம் சகோ,
  இதன் பக்க விளைவுகள் மருத்துவர் அறிவார்கள் தானே,,,,,
  புகைப்படங்கள் மனதை வருத்துகின்றன,
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவார்கள். இதே காம்பினேஷனில் வேறு வேறு பெயர்களில் மாத்திரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. எச்சரிக்கையாக இருக்கும் காலம் இது.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை