Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

புலி எங்கள் செல்லம்


ம்ம வீட்டு செல்லப் பிராணியாக நாய் வளர்க்கலாம், பூனை வளர்க்கலாம்! யாராச்சும் புலி வளர்பார்களா..? 


வளர்க்கலாம் என்கிறார்கள் பிரேசிலை சேர்ந்த போர்கேஸ் குடும்பத்தினர். இவர்கள் இரண்டு புலிகளை தங்கள் செல்லங்களாக வளர்த்து வருகிறார்கள். பிரேசிலில் உள்ள மரிங்கா நகரில்தான் இந்த குடும்பம் வாழ்கிறது. 

இதற்காக தங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிறிய சரணாலயம் அமைத்துள்ளார்கள். போர்கேஸ் தனது இரண்டு மகள்களுடனும் மூன்று பேரக் குழந்தைகளுடனும் வசித்து வருகிறார். 


இவரது பேத்திகளுக்கு புலி முதுகில் சவாரி செய்வதுதான் பிடித்தமான பொழுது போக்கு. ஜாலியாக வீட்டுக்குள் கம்பீர நடைபோடும் இந்த புலிகளுக்கு பசி வந்துவிட்டால் சமையல்கட்டு கதவருகே வந்து நின்று ஏக்கமாக பார்த்துக் கொண்டே இருக்கும். 

உடனே இரண்டு வயதே நிரம்பிய பேத்திகள் தங்களது பிஞ்சுக் கைகளால் மாமிசத்தை எடுத்து புலிகளுக்கு ஊட்டிவிடுவார்கள். வயிறு நிறைந்ததும் நாவால் அந்த பிஞ்சுக் கைகளை வருடிவிட்டு புலிகள் சென்றுவிடும். 


"இவைகளை பார்த்து எங்களுக்கு கொஞ்சம் கூட பயமில்லை. இவைகளும் எங்கள் குடும்பத்தில் ஒன்றாக மாறிவிட்டன. இவைகளை பிரிந்து எங்களால் இருக்க முடியாது." என்று கூறுகிறார்கள். 

மனிதன் காட்டை அழித்து அவைகளின் வசிப்பிடத்தில் வாழும்போது, அவைகள் நம் வீடுகளில் வசிப்பதும் ஒரு சமத்துவம்தானே..!!   




36 கருத்துகள்

  1. புலி எங்கள் செல்லம்
    எப்படி நண்பரே?
    புலி எங்களை கொல்லும் என்றுதான் சிலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்.
    இது எப்படிங்க?
    ஒருவேளை புலிக்கு கூட்டாஞ்சோறு போட்டு பழக்கப் படுத்தி இருப்பார்களோ?
    துணிவே துணை! சிறப்பு பதிவு!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டாஞ்சோறு போட்டால் போட்டவர்களை குதறிவிடும் நண்பரே, மனிதன் தனது ஆறாவது அறிவின் மூலம் எப்படிப்பட்ட கொடிய விலங்குகளையும் பழக்கிவிடலாம் என்பதற்கு இதுவொரு சாட்சி!
      வருகைக்கு நந்தி நண்பரே!

      நீக்கு
  2. வீட்டிற்குக்கொரு விலங்குகளை வளர்க்கலாம் அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே எதுவுமே அது பிறக்கும் முதல் பழகிக் கொடுக்கும் பழக்கம்தான் வேறென்ன ? இவர்கள் பழகி கொடுத்தது இப்படி... அவ்வளவுதான்
    சரி இவர்கள் வீட்டில் சமையலுக்கு புளி உபயோகப்படுத்த மாட்டார்களா ?
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மைதான். பழக்கினால் புலி கூட புல்லைத் திங்கும்! புளி இருக்கா இல்லையா என்பது தெரியாது. புலி கட்டாயம் இருக்கிறது.

      நீக்கு
  4. படிக்கவும்
    படங்களைப் பார்க்கவும் வியப்பாக இருக்கிறது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. ஆச்சர்யத்தை உண்டாக்கிய பதிவு. நம்ப முடியவில்லை. இருந்தாலும் புகைப்படங்கள் மூலமாக நம்பவேண்டியிருக்கிறது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படங்கள்தான் சாட்சி! இல்லையென்றால் நம்ப முடியாதுதான்.

      நீக்கு
  6. வணக்கம்

    படத்தையும் சொல்லிய தகவலையும் பார்த்தவுடன் வியப்பாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி... த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. ஆச்சர்யப் படவைக்கும் தகவல். பிறவிக்குணம் தலை காட்டாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கும் வாய்ப்புண்டு என்கிறார்கள் விலங்கியல் மருத்துவர்கள்.

      நீக்கு
  8. நானும் புலி வளர்க்கலாம் என்று இருக்கிறேன் ,தைரியமாய் யாரும் வீட்டில் வந்து 'டேரா' போட மாட்டார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பதிவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். கும்பலாக வந்து டேரா போடுவோம் ஜி!

      நீக்கு
  9. பாம்புக்குப் பால் வார்த்தவனும்
    பாம்பாலே சாகிறான் என்றால்
    புலியை வீட்டுக்குள்ளே
    வளர்த்தவர் நிலை என்னவாகும்?
    சிந்திக்க வைக்கிறியளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருக்கும் ஒரு வெடிகுண்டு போலத்தான் இப்படி கொடிய மிருகங்களை வீட்டில் வளர்ப்பதும். எப்போது வேண்டுமானாலும் அதன் இயல்பு வெளிப்படலாம்.

      நீக்கு
  10. காட்டில் வாழும் விலங்குகளுக்கே உரிய வேட்டையாடும் குணமும் குரூரமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். அது வெளிப்படும் தருணம் நேராதவரை நமக்கும் நல்லது.. புலிக்கும் நல்லது. அதே சமயம் அன்பினால் கொடூர விலங்குகளையும் செல்லப்பிராணிகளாக மாற்றமுடியும் என்பதையும் உணரமுடிகிறது. வியப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு
  11. காட்டில் வாழ வேண்டியவை நாட்டில் வாழுவது நல்ல சமத்துவம்தான்...

    பதிலளிநீக்கு
  12. நெஞ்சுரம் மிக்க தம்பதியினர்தான்.. விக்க்ரமதித்யனின் கவிதை ஒன்று உண்டு.
    கூண்டுப் புலிகள்

    நன்றாகவே பழகிவிட்டன
    நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
    பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
    நேரத்துக்கு இரை;
    காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
    குட்டி போட சுதந்திரம் உண்டு;
    தூக்க சுகத்துக்கு தடையில்லை;
    கோபம் வந்தால்
    கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;
    சுற்றிச் சுற்றி வருவதும்
    குற்றமே இல்லை;
    உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;
    முகம் சுழிக்காமல்
    வித்தை காண்பித்தால் போதும்;
    சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
    நடந்து கொண்டால் சமர்த்து;
    ஆதியில் ஒரு நாள்,
    அடர்ந்த பசியக்காட்டில்
    திரிந்து கொண்டிருந்தனவாம்;
    இந்தக் கூண்டுப் புலிகள்!

    பதிலளிநீக்கு
  13. துளசி: நண்பரே வியப்பான தகவல்தான். செய்தித் தாளில் படிக்க நேர்ந்திருந்தாலும் வியப்பாகத்தான் இருக்கின்றது...கொஞ்சம் பயமாகவும் இருக்கின்றது...

    கீதா: இது பயிற்சியின் மூலம்....புலி, குட்டியாக இருக்கும் போதே வளர்க்கத் தொடங்கினால் . இவர்களைப் போன்று மேல்நாடுகளில் இன்னும் சிலர் இருக்கின்றனர். புலியுடன் விளையாடுபவர்கள், அதன் அருகே படுப்பவர்கள் என்று ஒரு புலி என்றில்லை 2, 3 புலிகளுடனும் விளையாடுபவர்கள் இருக்கின்றார்கள். சரணாலயம் வைத்துக் கொண்டு.

    ஆனால் எப்போது அதன் ஒரிஜினல் குணம் வெளியாகும் என்பது தெரியாது. மனித இரத்தம் அறிய நேர்ந்தால் இயற்கையாக புலிகளின் இன்ஸ்டிங்க்ட் எழும்பிவிடும்....அபாயம் உள்ளது. ஆனால் அவற்றையும் அன்பினால் வசப்படுத்த முடியும் பயிற்சியினாலும்...என்றாலும் அபாயம் மறைந்துதான் உள்ளது.

    டெல்லி புலி கூட முதலில் அந்த மனிதனை ஒன்றும் செய்யவில்லை....அதன் கோபத்தைக் கிளறிய போது கூட அது அந்த மனிதனை அவை கவ்வுவது போல கவ்வித்தான் சென்றது அல்லாமல் அடிக்க வில்லை. ஆனால் மனிதனுக்கு புலியின் பற்ககளைத் தாங்கும் உடற்கூறு அமைப்பு கிடையாதே...மிருகக் காட்சிச் சாலையில் உள்ள புலிகளைக் கூட அதாவது அங்கு பிறந்து வளர்பவை...அவற்றை வேட்டையாடப் பழக்குகின்றார்கள். அதன் ஒரிஜினல் குணம் வேண்டும் என்று...ஆனாலும் அவை காட்டில் சுதந்திரமாக வேட்டையாடும் புலிகளை மிஞ்ச முடிவதில்லைதான்...

    இது போன்று லண்டனின் இளைஞர்கள் இருவர் ஒரு சிங்கத்தைச் சிறுவயது முதல் வளர்த்து பின்னர் அது வயதிற்கு வந்ததும் வீட்டில் வைத்துக் கொள்ள தடை வந்ததும், ஆப்பிரிக்க சரணாலயத்தில் கொண்டு விட்டனர். பின்னர் ஒரு வருடத்திற்குப் பிறகு அதைக் காண அவர்கள் சென்ற போது அந்தச் சிங்கம் இவர்கள் வருவதை அறிந்து அருகில் சென்றதும் கொஞ்சித் தீர்த்ததாம்....

    இதோ அதன் சுட்டி...https://www.youtube.com/watch?v=TslctTvHaqc

    சிங்கங்களுடன் விளையாடுவதைப் பாருங்கள் இந்த மனிதருக்கு தில் அதிகம் தான்...

    https://www.youtube.com/watch?v=rxPaUUaxGlM

    https://www.youtube.com/watch?v=XnLsCSFfWJo

    https://www.youtube.com/watch?v=op0cn5lCPTs

    அருமையான சுட்டிகள். நாங்கள் - நானும் மகனும் இது போல் நிறைய பார்ப்பதுண்டு. (உங்களின் இந்த புலி கூட) இங்கு சில பகிர்ந்துள்ளேன். மனிதனும் விலங்குகளும், அன்பும் என்று ஆதிகால மனிதன் எப்படி விலங்குகளோடு வாழ்ந்தான் என்பதிலிருந்து ஆரம்பித்து பதிவாக வைத்திருந்த சுட்டிகள் தான் இவை. நிறைய பார்த்தாலும் ஏனோ எனக்கு அதைப் பதியத் தெரியவில்லை..ஹஹ்ஹ நீங்கள் அழகாகப் பதிந்துள்ளீர்கள். நிறைய விட்யங்களை எழுதாமல் அப்படியே வைத்து விடுகின்றேன்...

    அழகான எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சிங்கத்தைப் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதையும் விரைவில் பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  14. அதிசயமான தகவல்! எம்.ஜி ஆர் கூட புலி வளர்த்தார் என்று எதிலோ படித்த நினைவு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னப்பா தேவர் கூட வளர்த்ததாக சொல்வார்கள். அவர்கள் எல்லாம் கூண்டுக்குள் அடைத்து வைத்துதான் வளர்த்தார்கள். இவர்களைப் போல் வீட்டுக்குள் குழந்தைகள் மத்தியில் ஒரு நாயை போல யாரும் வளர்த்ததில்லை.

      நீக்கு
  15. நன்றியோடு இருக்கும் நாய்களே சில நேரங்களில் வளர்ப்போரை கடித்துவிடுவதுண்டு. அதுபோல் புலிக்கும் ஒரு வேளை கோபம் வந்தால் இரை போடும் மனிதனே இரையாகலாம். தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. சிலர் - குறிப்பாக வெளிநாட்டினர் இப்படி புலி, சிங்கம், முதலை என்று செல்லப் பிராணி வளர்ப்பதிலும் வித்தியாசமாக இருக்கிறார்கள்....

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்றும் இருக்கிறது நண்பரே, மதுரையில் தெருவில் வீசியெறியும் குழந்தைகளை எடுத்து ஒரு அமைப்பில் வளர்க்கிறார்கள். அவர்கள் அந்த குழந்தைகளை தத்துக் கொடுக்கிறார்கள். இந்தியர்கள் அழகான சிவப்பான குழந்தைகளைதான் தத்தெடுப்பார்கள். ஆனால் வெளிநாட்டினர் கருப்பான அவலட்சணமான மற்றவர்கள் ஒதுக்கிய குழந்தைகளை தத்தெடுப்பார்கள்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை