• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, பிப்ரவரி 19, 2016

  சைக்கிளுக்காக ஒரு பாலம்

  பிரமாண்டமான சைக்கிள் பாலம்
  ம் நாட்டில் சைக்கிள் ஓட்டுபவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. அது ஏழைகளின் வாகனம். அதை ஓட்டுபவன் ஏழை என்ற எண்ணமே இதற்கு காரணம். 

  ஆனால், மேலைநாடுகளில் சைக்கிள்களைக் கொண்டாடுகிறார்கள். சுற்றுச்சூழலை கெடுக்காத ஒரு வாகனம் என்பதால் அதற்கு ஏகப்பட்ட மவுசு. மேலும் அதை ஓட்டுபவர்களுக்கு நல்ல ஆரோக்கியம். செலவு வைக்காத வாகனம் என்று பல நன்மைகள் அதில் இருப்பதால் வெளிநாடுகளில் சைக்கிள்களுக்கு நல்ல மரியாதை.


  பல நாடுகள் சைக்கிள்களுக்கு என்று தனியாக சாலைகளை அமைத்துள்ளன. அந்த நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சைக்கிள்கள் செல்வதற்கென்றே மிகப் பெரியப் பாலத்தை கட்டி முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு திறந்துவிட்டிருக்கிறது பெல்ஜியம் நாடு.

  ப்ருகேஸ் பாரம்பரிய நகரம்
  பெல்ஜியம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று ப்ருகேஸ். இது ஒரு பழமையான நகரமாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதி பட்டியலில் இந்த நகரமும் உண்டு. இங்கு வாழும் மக்கள் ஒரு சைக்கிள் பிரியர்கள். இந்த நகரின் மொத்த பரப்பளவு 138.4 சதுர கி.மீ. ஆகும். இங்கு 1,17,000 மக்கள் வாழ்கிறார்கள். இங்கு 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்கள், கட்டிடங்கள் என்று பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இவற்றைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.


  அவர்களில் பலரும் சைக்கிளில் நகரை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு வசதியாக பல பாதைகளை அமைத்துள்ளனர். அதில் சமீபத்தில் இவர்கள் அமைத்துள்ள சைக்கிள் பாலம் அதற்குள் உலக அளவில் புகழ்பெற்று விட்டது. கீழே ஒரு நெடுச்சாலை, அதன்மீது ஒரு சுற்றுச்சாலை என்று சிக்கலான இந்த சாலைகளை மணிக்கு 300 கார்களும், 300 பைக்குகளும் கடந்து போகும் இந்த சாலையை ஒரு சைக்கிள் ஒட்டி கடப்பது கடினம்.


  இந்த கார்களுக்கு இணையாகவே இங்கு சைக்கிள்களும் அதிகமாக இருக்கின்றன. இவர்கள் சுலபமாக கடந்து போவதற்காக சைக்கிள்கள் மற்றும் நடந்து செலபவர்களுக்காக பிரமாண்டமான ஒரு பாலத்தை அமைத்திருக்கிறது பெல்ஜிய அரசு.


  நம் நாட்டில் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் இருவருக்குமே மதிப்பில்லை. ஆனால், இங்கும் சைக்கிள்களைக் கொண்டாடும் காலம் விரைவில் வரும். சுற்றுச்சூழல் அதைக் கொண்டு வரும்.
  30 கருத்துகள்:

  1. பெல்ஜியம் நாட்டு மக்களுக்கு பிடித்தது சைக்கிள் பெல் சத்தம்தாம் போலிருக்கே !சுற்றுச் சூழலைச் மாசு செய்ய எண்ணாத அவர்கள் எண்ணம் .பாராட்டுக்குரியது :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பகவான்ஜி!

    நீக்கு
  2. உண்மைதான் நண்பரே ஜெர்மனியில் சைக்கிள் செல்வதற்காகவே தனி ட்ராக் ரப்பர் சாலை அமைத்து இருக்கின்றார்கள்
   ரயிலில்கூட சைக்கிளை நிறுத்துவதற்காக தனி பெட்டிகள் இருக்கின்றது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதனால்தான் வெளிநாடுகளில் சைக்கிள்களை கொண்டாடுகிறார்கள் என்று சொன்னேன். வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  3. அந்நாட்டை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது நண்பரே
   தம +1

   பதிலளிநீக்கு
  4. பதில்கள்
   1. கண்டிப்பாக..!
    நீண்ட நாட்களுக்குப் பின் வருகைதந்து கருத்திட்டு தங்களுக்கு நன்றி!

    நீக்கு
  5. கலிபோர்னியாவில் உள்ள பெரிய பெரிய பல்கலையில் உள்ளவர்கள் நோபெல் பரிசு பெற்றவரக்ள் சைக்கிளில் தான் செல்வார்கள்-மழை நாட்கள் உள்பட. இங்கு சைக்கிள்களுக்கு தனி ரோடே இருக்கு; நடுவில் பிரிக்கும் மஞ்சள் கோடு உள்பட இரண்டு வழிப்பாதை. பதினாலு வழி விரைவு சாலையைக் கடக்க சைக்கிள்களுக்கு , நடையில் செல்பவர்களுக்கு என்று தனிப் மேம்பாலம் உண்டு.

   எங்கள் வீட்டில் ஐந்து சைக்கிள்கள் இருக்கு! ஹி! ஹி! ஆனால், ஹெல்மெட் போடணும் இல்லாவிட்டால் போலீஸ் பிடிக்கும். மூன்று வயது குழந்தைகள் சைக்கிள் ஓட்டினாலும் ஹெல்மெட் போடணும்! குடும்பமாக வம்பு பேசிக்கொண்டு சைக்கிள் சவாரி செய்வது மாதிரி ஆனந்தம் ஏதும் இல்லை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வெளிநாடுகளில் நிலவும் குளிரும் சைக்கிள் ஓட்டுவதற்கு சாதகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எனது வீட்டுக்கும் என் அலுவலகத்துக்கும் 5 கி.மீ. தூரம் இருக்கிறது. சைக்கிளில் ஒரு வாரம் சென்று பார்த்தேன். வெயிலில் தொப்பலாக வியர்த்துவிடுகிறது. கசகசவென்று இருக்கிறது. குளிக்காமல் வந்ததுபோல் உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. வியர்வையில் ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இங்கு நிலவும் வெப்பம் கூட சைக்கிள் ஓட்டுதலுக்கு எதிராக இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட என்னாலே முடியவில்லை என்றபோது பெருமைக்காக வாழும் மனிதர்கள் எப்படி சைக்கிளில் போவார்கள்?
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
   2. இங்கு குளிர் கம்மி; மழை தான். ஸ்னோவும் கிடையாது. கோடையில் தினமும் 100 சர்வசாதாரணம்! 105க்கு மேல் ஒரு பத்து நாள்; 110 ஒரு பத்து நாட்கள். அப்படியும் ஹெல்மெட் போட்டு தான் ஓட்டனும். சொட்டை விழும் என்பது உண்மையல்ல. அப்படி விழுந்தாலும் தலை மேலே இருப்பதை விட உள்ளே இருப்பது தான் முக்கியம் என்று போலீஸ், அரசு, மக்கள் எல்லோரும் நினைக்கிறார்கள். ஜலதோசத்திற்க்கு காரணம் அது அல்ல. அது தவறான கருத்து. இங்கு குளிர் பிரதேசங்களிலும் இங்கும் 365 நாட்கள் ஐஸ்க்ரீம் அதே விற்பனை தான்.

    நீக்கு
   3. இங்கு கோடை பகல் நேரம் ஐந்து முதல் இரவு 9 மணி வரை! A/C இல்லாவிட்டால் வீட்டில் ஆள் வாழமுடியாது. ஆள் காலி. மர வீடு என்பதால் சூடு அதிகம்!

    நீக்கு
   4. நம்பள்கியின் கருத்தை வழிமொழிகின்றேன் சகோ! சொல்ல வந்ததை நம்பள்கி அவர்களே சொல்லிவிட்டார்கள்.

    கீதா

    நீக்கு
  6. அட சைக்கிள் செல்ல பாலம்... சூப்பர்ல்ல...
   இங்கும் பெரும்பாலான சாலைகளில் நாம் நடந்து செல்ல ஒரு பாதை... சைக்கிள்களுக்கு என்றே பிரத்யோக பாதை இருக்கு...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இந்தியாவில் இன்னும் அப்படிப்பட்ட சாலைகள் வரவில்லை. வந்தால் நன்றாக இருக்கும்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  7. இங்கே ஆஸியிலும் சைக்கிள்களுக்கென்று தனித்த பாதைகளும் சாலைகளும் உள்ளன. பாதசாரிகளுக்கென்று தனியாக வசதியான நடைபாதைகள்... அதாவது குழந்தைக்கான தள்ளுவண்டி, முதியவர்களுக்கான மெதுவண்டி போன்றவற்றை நடைபாதையில் ஏற்றவும் இறக்கவும் ஏதுவான சரிவுகளுடன் அமைக்கப்படுகின்றன. நீங்கள் சொல்வது போல் பாதசாரிகளையும் மிதிவண்டியில் செல்பவர்களையும் ஒரு பொருட்டாகவே மதியாத சூழல் இருக்கும்வரை இதெல்லாம் நம் நாட்டில் சாத்தியமில்லை. அப்படியே நடைபாதைகள் அமைக்கப்பட்டாலும் பொதுமக்களும் முறையான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. உடனேயே நடைபாதைக்கடைகள் முளைத்து நடப்பவர்களை சாலையில் தள்ளிவிடுகின்றன.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  8. தில்லியிலும் சைக்கிளுக்காகவே சில இடங்களில் தனி சாலைகள் அமைத்தார்கள் - ஆனால் அதில் சைக்கிளை விட பைக், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்கள் தான் அதிகம் செல்கிறது - அதில் பயணிக்கும் ஒன்றிரண்டு சைக்கிள் ஓட்டிகளை இடித்துத் தள்ளியபடி! :(

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சென்னையில் கூட இப்படி தனி டிராக்குகள் அமைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். நாளடைவில் அது அப்படியே மறைந்து போனது. நம் நாட்டில் மக்களும் மோசம்தான்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  9. சைக்கிள் பற்றிய பதிவைக்காட்டிலும்... படங்கள் அற்புதம் அய்யா...

   பதிலளிநீக்கு
  10. நான் சென்ற வெளிநாடுகள் பலவற்றிலும் சைக்கிள் பயணம் செல்ல பாதையே கண்டேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம் நாட்டிலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும்!
    வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  11. அழகான தகவல்கள். பல ஆங்கிலத் திரைப்படங்களிலும் கண்டதுண்டு. தெரிந்து கொண்டதும் உண்டு. நம் நாட்டிலும் இப்படி வராதா என்ற ஏக்கமும் வந்ததுண்டு.

   கீதா: சகோ! மேலை நாடுகளில் சைக்கிளைக் கொண்டாடுவார்கள். இங்கு சைக்கிளில் சென்றால் அவமானம். ஆனால் செல்ல முடியாது என்பது வேறு விஷயம். ஹெல்மெட் மேலைநாடுகளில் மிகவும் அவசியம். சைக்கிளுக்கும். ஆனால் இங்குதான் அந்த வழக்கம் இல்லையே. இங்கு இரு சக்கரமும் நான்கு சக்கரங்களும் செல்லவே இடம் இல்லாமல் இருக்கும் கேப்பிலும் விரைந்து விபத்துகளை ஏற்படுத்திக்கொண்டுச் செல்லும் போது "சைக்கிள் காப்பில்" கூட சைக்கிள் செல்ல முடியாதது அவஸ்தையே. விபத்து ஏற்பட்டால் தலை போச்சு. இங்கு சென்னையில் கூட தனிப்பாதை எல்லாம் கொண்டுவந்தார்கள். ஆனால் எந்தப்பயனும் இல்லை. சைக்கிள் காரர்களே அதை உபயோகிப்பது இல்லை மட்டுமல்ல அவர்களும் பலவண்டிகளுக்கும் இடையில்தான் புகுந்து செல்லுகின்றார்கள். மேலை நாடுகளில் நடப்போர், சைக்கிளில் செல்வோர்கள் சாலையக் கடக்க நேரிட்டால் வாகன்ங்கள் நின்றே ஆக வேண்டும். நிற்கவும் செய்வார்கள். நம்மூரில்?????? சென்னை ட்ராஃபிக்கில் சைக்கிள் ஓட்டுபவர்கள் சர்க்கஸ் வித்தைக்காரர்கள் போல் கயிற்றில் கூட ஓட்டிவிடமுடியும்!!! அந்த அளவிற்குத்தான் காப்!!

   இங்கு வரும் வெளிநாட்டவர்கள் பலர் சைக்கிளுக்கான ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிளில் காலையில் (நடைப்பயிற்சி போன்று) செல்வதைக் காணலாம். அவர்களே சைக்கிளையும் பிரித்துக் கொண்டு வந்துவிட்டு இங்கு வந்து அதனை சேர்த்துக் கொள்கின்றார்கள். பாவம் முதலில் கஷ்டப்பட்டாலும் ஒரேவாரத்தில் பழகிக் கொண்டு விடுகின்றார்கள் இங்குள்ள் தாறுமாறான போக்குவரத்திற்கும் விதிகளுக்கும்!!!   பதிலளிநீக்கு
  12. வணக்கம்

   தாங்கள் சொல்வது போல எந்த வித நோயும் நம்மை அனுகாது சைக்கில் ஓட்டினால் ஆனால் நமது நாட்டில் சைக்கில் ஓட்டினால் பிச்சைக்காரன் அடைமொழிதான் வரும்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் மிக அழகு.
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  13. உங்க கண்ணுக்கு பயிற்சிகள் என்ற பதிவை படித்த போது recommended for you என்று சைக்கிள் பதிவு வந்தது. அருமையான பதிவு. நான் வெளிநாட்டு தெருவில் சைக்கிளில் போகும் போது வேறு யாரவது இந்தியர்கள் என்னை கண்டால் ஒரு பரதேசி ஒன்று போகின்றது என்ற மாதிரி பார்ப்பார்கள்.
   அவர்களுக்கு ஆடம்பர கார்,அது ஓட்டை உடைசலாக இருந்தாலும் பரவாயில்லை அதில் தான் பயணிக்க வேண்டும்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்