• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, பிப்ரவரி 20, 2016

  எனது முதல் ராயல்டி

  'ராயல்டி' என்பதெல்லாம் பெரும் வார்த்தை. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அது கிடைக்காது என்றே நினைத்திருந்தேன். ஆனால், எனக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருக்கிறது போலும். இன்று எனக்கும் முதல் ராயல்டி கிடைத்திருக்கிறது. 

  இரண்டாம் பதிப்பு புத்தகம்
  இந்த வருடத்தின் முதல் நாள் அதாவது புத்தாண்டு தினத்தில் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து 108 பேருக்கு விருது வழங்கப்பட்டது. விவசாயத்தில் சாதனைப் படைத்தவர்களுக்கு அந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதில் எனக்கும் 'சிறந்த விவசாய பத்திரிகையாளர்' என்ற விருது ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது. இதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். 


  இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எனது முதல் புத்தகமான 'நம்ப முடியாத உண்மைகள்' முதல் பதிப்பு புத்தகம் முழுவதும் விற்பனை ஆகிவிட்டது என்றும், இரண்டாம் பதிப்பு பொங்கலன்று வெளிவருகிறது என்ற தகவலும், இந்த வருடத்தை மேலும் இனிமையாக தொடங்கி வைத்தது.  


  இப்போது முதல் ராய்ல்டிக்கான காசோலை வந்திருக்கிறது. நண்பர்களோடு இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 'பகிர்ந்த துன்பம் பாதியாகிறது. பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது' என்பது உண்மைதானே!  52 கருத்துகள்:

  1. மிகப்பெரிய சாதனைதான். தங்களின் தங்கமான எழுத்துக்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் அங்கீகாரம் இது. தங்களின் வெற்றிக்கான முதல்படி இது. மென்மேலும் இதுபோன்ற வெற்றிகள் தொடரட்டும். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  2. இந்த இனிய செய்தியும் எனக்கு தங்களின் நூல் தலைப்புபோலவே
   ’நம்ப முடியாத உண்மைகள்’ ஆகத்தான் உள்ளன. வாழ்த்துகள் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  3. இந்த இனிய செய்தியும் எனக்கு தங்களின் நூல் தலைப்புபோலவே
   ’நம்ப முடியாத உண்மைகள்’ ஆகத்தான் உள்ளன. வாழ்த்துகள் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  4. வாழ்த்துக்கள் செந்தில்குமார் மேலும் உயரம் தொடுவீர்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. வாழ்த்துகள். மிகப் பெரிய அங்கீகாரத்தின் அடையாளம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  6. எழுத்துக்களுக்காக - அதுவும் தமிழில் - ராயல்டி வாங்குவது என்பது சாதனையான விஷயம்தான். உங்களுக்கு எனது பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. வாழ்த்துக்கள் திரு செந்தில் குமார், தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி சுரேந்திரன் குண்டூர்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேந்திரன்!

    நீக்கு
  8. நம்ப முடியாத உண்மைதான்...வாழ்த்துகள் சார்.

   பதிலளிநீக்கு
  9. ராயல் சல்யூட் செந்தில் குமார் ஜி !அடுத்த ராயல்டியும் விரைவில் பெற வாழ்த்துக்கள் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி பகவான்ஜி!

    நீக்கு
  10. வாழ்த்துக்கள். தங்களின் சாதனைகள் தொடரட்டும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  11. இரண்டு நல்ல செய்திகள் நண்பரே! ஒன்று உங்கள் புத்தகம் விருதுபெற்றதோடு, ராயல்டியும் பெற்றுத் தந்தது, இரண்டாவது அதை நேர்மையாகத் தினத்தந்தி தந்ததும் நீங்களும் அதை நேர்மையாக வெளிப்பட எழுதியதும்.. வாழ்த்துகள், தொடர்ந்து சிறப்பாக எழுதி, விருதுகளோடு ராயல்டியும் குவித்திட வாழ்த்துகிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா! விருது புத்தகத்திற்காக வழங்கப்படவில்லை. அது எனக்கு பத்திரிகையாளர் என்ற முறையில் வழங்கப்பட்டது. மீண்டும் நன்றி அய்யா!

    நீக்கு
  12. எமது மனப்பூர்வமான வாழ்த்துகள் நண்பரே
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  13. மிக்க மகிழ்வு தரும் செய்தி
   சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  14. நன்று. நன்று. ஸிறப்பு. ஸிறப்பு. உற்சாகம்.
   வாழ்த்து. பாராட்டு.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  15. வாழ்த்துக்கள் நண்பரே
   வாழ்த்துக்கள்
   தங்களின் எழுத்துலகப் பயணம்
   உச்சங்களைஎட்டட்டும்

   ராயல்டி வரவில்லை என்று கூறுவோரை
   எழுதுவோரைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன்
   முதன் முறையாக ராயல்டி வந்ததை அறிவித்திருக்கிறீர்கள்
   தஙகளுக்கும் தினத் தந்திக்கும் வாழ்த்துக்கள் நண்பரே
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் மனம் திறந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  16. பதில்கள்
   1. தங்களின் மனம்நிறைந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  17. அன்புள்ள அய்யா,

   ராயல்டி பெற்ற தாங்கள் தொடர்ந்து ராயல்டி பெற்றுக் கொண்டே... ராயல்சாமியாக வாழ்க!

   நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

   நன்றி.

   த.ம. 15

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  18. இரு நல்ல விஷயங்களுக்கும் சேர்த்து, இன்னும் நிறைய உயரங்களைத் தொடவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் செந்தில்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்