Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எவ்வளவு சரக்கு அடித்தாலும் அசராதவர்கள்..!


ம்மூர் குடிமகன்கள் எப்போதும் படு 'தில்'லானவர்கள். அவர்களுக்குள் போட்டியென்று வந்துவிட்டால் அவ்வளவுதான். அந்த பாரே அல்லோகலப்படும். எவ்வளவு குடித்தாலும் நான் ஸ்டெடியாக நிற்பேன் என்ற டயலாக் எல்லா குடிகாரர்களிடமும் இருக்கும். மது குடிப்பவர்களிடம் நடைபெறும் மிகப் பெரும் போட்டியே இதுதான். அதாவது எவ்வளவு மது அருந்தினாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்பது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த ஸ்டெடி மனிதர்கள் எவ்வளவு அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. 

இப்படி மல்லுக்கட்டி மதுவை குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல்  உழைத்துக் கொண்டிருக்கும். உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல். 


மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. 

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். 


இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப் படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்லவதற்கு. ஆமாம், ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறினால் அடுத்த நொடி மரணம் தான்.  

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். இது மட்டும் கெட்டுவிட்டால் அந்த விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சேர்க்கும். 

புகைப்பிடிக்கும் ஆணுக்கு இதயமும், மது அருந்தும் பெண்ணுக்கு கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் படம். மூன்றாவதாக பழங்களை சாப்பிடும் பெண்ணுக்கு அனைத்து உறுப்புகளும் நன்றாக இருக்கிறது என்பதை சொல்லும் படம்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால்  அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. 


கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கல்லீரல் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான் அதன்பின் அது எழுந்திருக்கவே எழுந்திருக்காது. அதனால் மதுவை மறந்து கல்லீரலை காத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம் என்கிறது அந்த ஆய்வு. 

மது வேண்டவே வேண்டாம் !


34 கருத்துகள்

  1. வாழ்க கல்லீரல்! அது வாழ்வதும் வீழ்வதும் மனிதன் கையில்தான்!

    தம +1

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள்..... மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமே....

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு ஐயா.படங்கள் அனைத்தையும் பார்த்தலே குடிப்பதற்கு சிலர் யோசிப்பார்கள் ஐயா.தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எழுதவும் ஐயா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சுருக்கமாக சொல்லி இருந்தாலும் விளக்கம் நச்...

    பதிலளிநீக்கு
  5. நான் இந்தியாவில் வசிக்கவில்லை என்பதால் எனது கல்லீரலுக்கு சேதம் இல்லை.....இல்லையென்றால் இந்நேரம் சேதம் அடைந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த நாடாக இருந்தாலும் ஆல்கஹால் வேலை ஒன்றுதான். வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு


  6. கல்லீரல் ஒரு நல்ல ஈரல் என்றும் அதுதான் நம்மைக் காக்கிறது என்றும் எனவே அதை நாம் காக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு தரும் தகவலை தந்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. நல்லதொரு விடயம்தான் நண்பரே இதை குடிகாரர்கள் உணர்வதில்லையே என்ன செய்வது.
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
  8. கல் ஈரலைப் பற்றி சொன்னது சரி ,அடுத்து மண் ஈரலைப் பற்றியும் சொல்லுங்களேன் :)

    பதிலளிநீக்கு
  9. அடிமட்டத்தில் அடிபட்டால் தான் அவர்கள் திருந்துவார்கள். தானாகத் திருந்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. கொடுமை பாருங்கள்..அதற்குப்போய் கல்லீரல் என பெயர் வைத்திருக்கிறார்கள்.. உயிர் காக்கும் அதற்கு வீறு பெயர் அல்லவா வைத்திருக்க வேண்டும்..
    நன்றி செந்தில் சார்...

    பதிலளிநீக்கு
  11. தேவையான பதிவு குடிகாரர் கள் அறிய வேண்டிய செய்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக அய்யா! தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  12. அருமையான பதிவு சகோ. இதயத்தை விடவும் கல்லீரம் முக்கியம்தான்...என்பான் மகன். மஞ்சள் காமாலை வந்தாலும் சில சமயம கல்ல்லிரலே பாதிக்கப்பட்டுவிடும்....குடி குடியைக் கெடுக்கும் முதலில் கல்லீரலைக் கெடுத்துவிட்டு..நல்ல பதிவு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை