Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பூஜ்யம் தந்த இந்தியா

பூஜ்யத்தை உலகுக்கு அளித்தது இந்தியாதான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பூஜ்யத்தை இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர். பூஜ்யத்தை சூனியம் என்று அழைத்தனர். தொடக்கத்தில் நடுவில் ஒரு புள்ளியை மையமாக கொண்ட வட்ட வடிவமே பூஜ்யமாக குறித்து வந்தனர்.


அரேபியர்கள் இந்தியாவுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். வணிகர்களுடன் ஒரு சில அரபு அறிஞர்களும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்கள் புதிய பிரதேஷங்களின் அறிவு பொக்கிஷங்களை கற்றறிந்தனர். இவர்கள் இந்திய எண் முறையையும் பூஜ்யத்தையும் அரபியர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

அல்-கொவாரிஸிமி என்ற அரேபிய கணித அறிஞர் இந்திய எண் முறையின் எளிமையையும், அதைக் கொண்டு இந்திய கணித அறிஞர்கள் வேகமாக கணக்கிடுவதையும் கண்டார். இவரே இந்திய எண் முறையையும், பூஜ்யத்தையும் அரேபியில் புழக்கத்திற்கு கொண்டு வந்தவர். பின்னாளில், இந்த எண் முறைகள் இந்தோ-அரேபிய எண்கள் என பெயர் பெற்றது.


கிரேக்க எண்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள்  இந்த எண் முறையில் உள்ளன என்பதை அரேபியர்கள் அறிந்து இருந்தனர். அதனால், இந்தோ-அரேபிய எண்களை ஐரோப்பாவுக்கு தெரிவிக்காமல் ரகசியமாக பாதுகாத்து வந்தனர். இந்த முறையில் உள்ள சிறப்பு அம்சத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டது.

12-ம் நூற்றாண்டில் அடிலார்ட் என்ற பாதிரியார் ஒருவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு, கார்டோவா என்ற அரேபிய பள்ளியில் சேர்ந்தார். அவர் அங்கு இந்தோ-அரேபிய எண் முறையையும் கணித நுணுக்கங்களையும் கற்றார். அல்-கொவாரிஸிமியின் கணித நூலை லத்தீனில் மொழி பெயர்த்தார். இந்தோ-அரேபிய எண்ணையும் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினர். இப்படியாக நமது பூஜ்யம் ஐரோப்பா சென்றடைந்தது.


லியனார்டோ பிபோனாக்கி என்ற இத்தாலிய கணித அறிஞரே இந்தோ-அரேபிய எண்களை தற்போதைய புழக்கத்திற்கு கொண்டு வந்தவர். பல இடங்களுக்கு பயணம் செய்த இவர் அங்கெல்லாம் நிலவிய எண் முறையைவிட இந்தோ-அரேபிய எண் முறை சிறந்தது என்று கண்டார். இந்த முறையில் கணக்குகளை எளிதில் தீர்த்துவிட முடிவதையும் அறிந்தார்.

கி.பி.1202-ல் 'லிபர் அபாஸி' என்ற புத்தகத்தை பிபோனாக்கி எழுதினார். அதில் இந்தோ-அரேபிய எண் முறையையும், அதை உபயோகித்து கணக்கிடும் முறையையும் விளக்கினார். ஐரோப்பியர்கள் இந்த எண் முறையை பின்பற்றும்படியும் வேண்டினார்.

15-ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் நிகழ்ந்த மறுமலர்ச்சி இயக்கம், இந்தோ-அரேபியா எண்முறையை உபயோகத்தில் கொண்டு வர தூண்டுகோலாய் அமைந்தது. அச்சு முறையும் இதற்கு உதவியது. ஐரோப்பா முழுவதும் இந்த எண்முறையே பரவியது. கணிதம், அறிவியல் வரலாற்றில் இந்தோ-அரேபிய எண்கள் குறிப்பாக பூஜ்யம் ஒரு மைல் கல்லாகும். 



14 கருத்துகள்

  1. பூஜ்யத்தின் பயணத்தை விளக்கமாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. 0 பற்றிய அருமையான கட்டுரை. 0 இல்லாமல் கணிதமே இல்லை என்பார்கள். சீரோ மட்டுமல்ல 0-9 எண்கள் கூட இந்திய வடிவங்கள்தாம். முஸ்லிம் படையெடுப்பில் அரேபியா சென்ற பல இந்திய பொக்கிஷங்களில் இந்த எண்களும் ஒன்று. அரேபிக் நியூமரல்ஸ் என்ற வார்த்தைப் பதமே தவறு என்பது என் எண்ணம். எனவே இந்தோ அரபிக் என்று சொல்லாமல் இந்திய எண்கள் என்றே அழைக்கலாம். அரேபியாவிலிருந்து ஐரோப்பா சென்றதினால் ஐரோப்பியர்கள் இதை அரேபிய எண்கள் என்று தவறுதலாக கருதியதாக வரலாறு இருக்கிறது. 0-9 நமது இந்திய எண்களே. அவற்றை அப்படி அழைப்பதுதான் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  3. The zero and numerals were used by tradesmen of Tamil origins. Not only, millions billions trillions and beyond these measures to higher measures are found in Tamil elalkyam. Normally North Indians assume all the developments of Tamil culture as thier own and call it 'Indians'. Tamils travelled across the globe selling cotton, clove, pearls, gem stones, silk etc to Egypt, China, Malaya, Mexico etc. Arab also came to Pumbuhar Thon I, Musiri, Arikmamedu for trade from time unknown. Without efficient numerical system no trade was possible. King Solomon sent vessels to fetch gold from Malabar. I do not understand why Indian Government hide these facts.Tamil has had developed sea routes all around the world following turtles. Their Sea routes are available in Madras University Library. It is dastardly wrong to assumes they are Indians. When Srilanka killed Indian fishermen it is said TamiI fishermen are killed Tamls had civilized society and not the intended Hindus or Indians. The Hindus were barbarians as reported by their own puranas. They invaded into and hyjacked our culture as their own. Now they try to enslave us saying they are superior their language is superior. It is a blatant.lie. From zero to .multiples of trillions single words are available in Tamil and no other language I the world ha.s this benefit. Multiplication division methods (non metrics) are available in our very old ilakiyams. Not knowing these facts we have let Tamil to die a hard death.

    பதிலளிநீக்கு
  4. The zero and numerals were used by tradesmen of Tamil origins. Not only, millions billions trillions and beyond these measures to higher measures are found in Tamil elalkyam. Normally North Indians assume all the developments of Tamil culture as thier own and call it 'Indians'. Tamils travelled across the globe selling cotton, clove, pearls, gem stones, silk etc to Egypt, China, Malaya, Mexico etc. Arab also came to Pumbuhar Thon I, Musiri, Arikmamedu for trade from time unknown. Without efficient numerical system no trade was possible. King Solomon sent vessels to fetch gold from Malabar. I do not understand why Indian Government hide these facts.Tamil has had developed sea routes all around the world following turtles. Their Sea routes are available in Madras University Library. It is dastardly wrong to assumes they are Indians. When Srilanka killed Indian fishermen it is said TamiI fishermen are killed Tamls had civilized society and not the intended Hindus or Indians. The Hindus were barbarians as reported by their own puranas. They invaded into and hyjacked our culture as their own. Now they try to enslave us saying they are superior their language is superior. It is a blatant.lie. From zero to .multiples of trillions single words are available in Tamil and no other language I the world ha.s this benefit. Multiplication division methods (non metrics) are available in our very old ilakiyams. Not knowing these facts we have let Tamil to die a hard death.

    பதிலளிநீக்கு
  5. தகவல்கள் அருமை! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஏற்கனவே அறிந்த விடயமாயினும் கூடுதல் தகவல் அறிந்தேன் நாம் எழுதும் எண் பெயர் அரபிக்எண் தான் தமிழ் எண்களை நாம் மறந்து விட்டோம் ஆனால் அரேபியர்கள் அரபுஎண் தான் உபயோகப்படுத்துகின்றார்கள்
    தாங்கள் சொன்ன புள்ளி இன்றுவரை அரபு மொழியில் பூஜ்யமாக உபயோகத்தில் உள்ளது ஸஃபர் என்று சொல்வார்கள்
    த.ம - 3

    பதிலளிநீக்கு
  7. இந்தியர் என்று பெருமைப்படுவோம்
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  8. சைபர் இல்லாமல் எப்படி கணக்கு போட்டார்களோ ,நினைத்துப் பார்க்க முடியலே :)

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு. பூஜ்யம் இல்லாத கணக்கே இல்லை! இந்தப் பூஜ்யத்தின் பெருமைகளைப் பற்றி பள்ளியில் படிக்கும் போது படித்ததுண்டு. கணக்கு ஆசிரியை இதைப் பற்றியும், வாழ்க்கையின் தத்துவத்துடன் இணைத்தும் கிட்டத்தட்ட 4 நாட்கள் உரையாற்றினார். அப்போது தெரிந்து கொண்டவற்றை இப்போது மீண்டும் உங்கள் வழி நினைவு படுத்திக் கொண்டேன். அவர்கள் சொன்னது படி 0-9 வரையே இந்தியர்கள்தான் மூலகாரணம் என்று. 0 தான் தொடக்கமே.

    அருமையான பதிவு

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சுழியம் பற்றிய தகவலுக்கு நன்றி! மேலதிக தகவல்களைத் தந்த திரு பழனிவேல் அவர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. பூஜ்யம் என்றால் ஒன்றுமில்லை என்பதுதான் பொருள்!அதைப் பற்றியே ஒருபதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. பூஜ்யம் பற்றி தெரியப்படுத்தியமைக்கு நன்றி...
    அருமையான பதிவு நண்பரே...

    பதிலளிநீக்கு
  13. பூஜ்யம் இந்தியாவிலிருந்து தான் அரேபியா சென்றது என்றறிந்திருந்தேன். அதன் பயணம் குறித்த விரிவான விளக்கங்களை இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி செந்தில்!

    பதிலளிநீக்கு
  14. அனைவராலும் பூஜிக்கப்பட்டுள்ளது நமது பூஜ்யம் என்பதை அறிய மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை