• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், ஏப்ரல் 25, 2016

  செல்ல நாய்களை அலுவலகம் கூட்டிச் செல்லுங்கள்..!


  நாய்களை செல்லமாக வளர்ப்பதற்கு உலகம் முழுவதும் மனிதர்கள் விரும்புகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் நாய்களை கொஞ்சம் நேரம் கூட பிரிந்திருக்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம்.

  அமெரிக்க போன்ற நாடுகளில் வேலைக்கு போகும்போது கூடவே நாயை அழைத்துக்கொண்டு போகிறவர்களும் உண்டு. உடனே இதை வைத்து வழக்கம் போல் ஆய்வு செய்திருக்கிறார்கள்.


  'வர்ஜினியா காமன்வெல்த் யுனிவர்சிட்டி' என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் அலுவலகத்துக்கு நாய்களையும் அழைத்துச்சென்றால் மன இறுக்கமோ, கவலையோ இன்றி உற்சாகமாக வேலைப்பார்ப்பார்கள் என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்து கூறியுள்ளார்கள். அவர்கள் பார்க்கும் வேலையிலும் எந்த குறையும் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

  அலுவலகத்துக்கு தங்களின் வளர்ப்பு நாய்களை அழைத்து வருபவர்கள் தங்கள் வேலைகளை வரிசையாக ஒழுங்குபடுத்தி, மன திருப்தியுடன் வேலை பார்க்கிறார்கள். நாயை அழைத்து வராதவர்கள் மன நெருக்கடியுடன் பணிபுரிவதால் வேலையின் தரம் குறைவாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வேலை செய்யவேண்டிய இடங்களில் உள்ள நாய்கள் நேர்மறையான மனோ பாவத்தை ஒவ்வொருக்கும் வழங்குகின்றன.


  நாயை அலைத்துவருபவர்கள் சில நாட்கள் நாயுடன் வராமல் இருந்தால் அப்போது அவர்கள் வேலையை சுமாராக பார்ப்பதாக கண்டுபிடித்து கூறுகிறார் இந்தக் குழுவின் தலைவர் ரான் கடலாப் பார்கர்.

  வீட்டிலும் அலுவலகத்திலும் நாய் வளர்க்க வாய்ப்பில்லாதவர்கள் தங்கள் தெரு நாய்களுக்கு உணவு அளித்து அதன் அன்பையும் நன்றிஉணர்வையும் பார்த்தால் நமது மன இறுக்கம் குறையும் என்றும் கூறுகிறார்கள்.


  அலுவலகத்துக்கு ஆளுக்கொரு நாயை கூட்டி வந்தால் அந்த நாய்கள் போடும் சண்டையை சமாதனப் படுத்துவதற்கே நேரம் சரியாக போய்விடுமே. பின் எப்படி வேலை நடக்கும்? இதைப்பற்றி ஒருவேளை இன்னொரு ஆய்வு நடத்துவார்களோ என்னவோ..!

  17 கருத்துகள்:

  1. நீங்கள் வெளிநாட்டு செய்திகளை அதிகம் கேட்பீர்களோ.. இந்த செய்தியை சில நாட்கள் முன்புதான் நான் கேட்டேன் அது பாடியே இங்கு பதிவாக வந்துவிட்டது

   பதிலளிநீக்கு
  2. இங்கு வீட்டில் வளர்க்கும் நாய்கள் ஒன்று கூடினால் அவைகள் சண்டைகள் போடாது நாம் உட்கார் என்று சொல்லினால் நாள் முழுவதும் நாம் சொன்ன இடத்தில் அசையாமல் இருக்கும்

   பதிலளிநீக்கு
  3. நாய்கள் வீட்டில் வளர்த்தாலே மன இறுக்கம் நிச்சயம் குறையும் இது என் அனுபவ உண்மை

   பதிலளிநீக்கு
  4. நம்ம நாட்டில் வள்ளுன்னு விழும் மேனேஜர்கள் இருக்கும் போது இதெல்லாம் ஒத்துவருமா :)

   பதிலளிநீக்கு
  5. நல்ல யோசனை. நம் நாட்டிற்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. வளர்ப்பு பிராணிகள் , அவற்றை வளர்ப்பவர்களின் மன இறுக்கத்தை குறைக்கும் என்பது உண்மைதான்.

   பதிலளிநீக்கு
  6. மேலை நாடுகளில் வளர்ப்பு பிராணிகள் மோகம், முக்கியமாய் நாய் மோகம் அதிகம். இதற்கு ஒரு சமூகவியல் காரணமும் உண்டு ! பெற்றோர் பிள்ளைகள் கூட வாழ்வின் ஒரு கட்டத்துக்கு பிறகு யாரோ எவரோ என போய்விடும் சூழலில் வளர்ப்பு பிராணிகள் ஒருவிதமான பாச வடிகாலாய், தனிமை போக்கும் துணையாய் அமைந்துவிடுகின்றன !

   நம் சமூகத்தில், சித்த பிரமையுடன் தெருக்களில் தனித்து திரியும் மனிதர்கள் தெருப்பிராணிகளிடம் காட்டும் கருணையை கவணித்தால் இது புரியும் !

   பிரான்ஸ் போன்ற குளிர் நாடுகளில் வளர்ப்பு நாய்களுக்கென ஸ்பெசல் உடைகளெல்லாம் உண்டு ! சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு காப்பீட்டு நிறுவனம், உலகம் அழிந்தப்பின் உங்கள் வளர்ப்பு பிராணிகளை நாங்கள் நன்றாக பராமரிப்போம் என விளம்பரம் செய்ய, உலகமே அழிந்த பிறகு நாய்களும் பூனைகளும் எப்படி வாழும் என்ற எண்ணமெல்லாம் தோன்றாமல் பலர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த வேடிக்கை நிகழ்ந்ததை பத்திரிக்கையில் படித்தேன் !

   நன்றி
   சாமானியன்

   பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யமான செய்தி. இந்தச் செய்திக்கே நான் இரண்டு வோட் போட வேண்டும்! என்ன செய்ய ஒன்றுதான் போட முடிகிறது. ஏனென்றால் எனக்கு நாலு கால் செல்லங்களைப் பிடிக்கும். முதல் படத்தில் இருப்பவர் என் தங்கை போலவே இருக்கிறார்!

   பதிலளிநீக்கு
  8. உண்மை நண்பரே
   செல்லப் பிராணிகள் மன இறுக்கம் நீக்குபவர்கள்தான்
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தவறுதலாக கை பட்டு நீக்கப்பட்டு விட்டது. நண்பர் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். முடிந்தால் மீண்டும் தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    நீக்கு
  10. எங்களது செல்லப்பிராணியையும் நாங்கள் எங்கு சென்றாலுமே அழைத்துச்செல்லுவோம் ஐயா.எனது அம்மா ஊருக்கு சென்றாலுமே நாய்க்குட்டியை அவர்களுடனே அழைத்துச் செல்வார்.உண்மையே நாய்கள் மன இறுக்கத்தை நீக்குகிறது ஐயா.

   நல்ல பதிவு நன்றி ஐயா.

   பதிலளிநீக்கு
  11. நாய் வளர்த்தால் மனம் இறுக்கம் குறைவது அங்கே..! ஆனால் நாயால் பக்கத்து வீட்டாரின் சண்டை சச்சரவால் மன இறுக்கம் கூடுவது இங்கே....நண்பரே...

   பதிலளிநீக்கு
  12. நாய் வளர்த்தால் மனம் இறுக்கம் குறைவது அங்கே..! ஆனால் நாயால் பக்கத்து வீட்டாரின் சண்டை சச்சரவால் மன இறுக்கம் கூடுவது இங்கே....நண்பரே...

   பதிலளிநீக்கு
  13. சகோ செந்தில் ஆஆஆஆஅ என்ன ஒரு பதிவு! சூஊஊஊஊப்ப்பர்ப்பா....இதுக்கு எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போடுவேன்....என்ன சொல்லுவேன்...முதல்வருக்கு நிக்கறீங்களா சொல்லுங்க...திரட்டிடுவோம்....அழகுச் செல்லங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது....


   இந்தச் செய்தி முன்பே தெரியும்...நான் எழுதும் விலங்குகள் மருத்துவம் தொடரில் இதையும் அதாவது விலங்குகளும் மருத்துவர்கள் என்ற பகுதியில் வரும்...எழுதியிருக்கிறேன். ஆம் அங்கெல்லாம் தங்கள் செல்லங்களைக் கொண்டுவ் அருவார்களாம் மகன் சொல்லி இருக்கிறான். நாங்கள் அங்கு இருக்கும் போதே கூட பார்த்ததுண்டு. இந்த ஆய்வு மிக மிக உண்மை....

   எங்கள் வீட்டில் இரண்டுச் செல்லங்கள் இருக்கின்றன....என்ன ஒரு ரிலாக்சேஷன் தெரியுமா...அவர்களைக் கட்டிக் கொண்டால் போதும் நம் மனம் மிகவும் லைட்டாகிவிடும்....

   மட்டுமில்லை இங்கு ப்ளூக்ராசில் டாக்டர்கள் என்று ஒன்று வைத்திருந்தார்கள் இப்போதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை....மனனிலை சரியில்லாதவர்களுக்கும், உடல் நலம் சரியில்லாதவர்களுக்கும், வயதானவர்கள்ம் மனம் தளர்ந்து இருப்பவர்கள் மனவளர்ச்சிக் குன்றிய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் வீட்டிற்கு என்று இவர்களை அனுப்புவார்களாம்...ப்ளூக்ராஸ் வெப் சைட்டில் போனால் தெரியும். ஆனால் யதார்த்தத்தில் அவர்கள் அனுப்புகின்றார்களா என்று தெரியவில்லை...ஆனால் அனுப்பினால் நிச்சயமாக பலன் உண்டு.

   கீதா

   பதிலளிநீக்கு
  14. அங்கெல்லாம் இவர்கள் சண்டை போட மாட்டார்கள்,பயங்கர ட்ர்யினிங்க். உட்கார் என்றால் உட்கார்வார்கள். ஸ்டே தேர்...கொயட் என்று சொன்னால் ஆடாமல் அசையாமல் அமைதியாக அடுத்த கட்டளை வரும் வரை காத்திருப்பார்கள். இங்கு அப்படி அல்ல ட்ரெய்னிங்க் கொடுக்கின்றார்கள்..ஆனால் சில இடங்களில் அதிகமான தண்டனைகள் கொடுப்பதாகவும் தெரிகின்றது..மட்டுமல்ல இங்கு வளர்ப்பவர்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வோ இல்லை அவற்றை எப்படி வளர்க்க வேண்டும் என்பதோ தெரிந்திருப்பதில்லை. படித்தவர்கள் கூட. இரண்டாவது அவர்களை வளர்ப்பதற்குச் சில செலவுகள் இருக்கும் அதைச் செலவு செய்ய எல்லோராலும் முடியாது. எனவே இங்கெல்லாம் இவர்கள் சண்டை போடுவார்கள்தான். இங்கு தெருவிலும் இருக்கின்றார்கள் இல்லையா அதனால் சண்டைகள் இருக்கும். வெளிநாடுகளில் தெருவில் இவர்களைக் காண முடியாது. கண்டாலும் நேரே இவர்களின் காப்பகத்திற்குச் செய்தி போய்விடும் அடுத்த நிமிடம் வந்துவிடுவார்கள். ப்ளூக்ராஸ் போல இல்லை...

   மகன் அங்கு சென்றிருந்த கால்நடைக்கல்லூரியில் (நார்த் கரோலினா, ஒரெகன் கால்நடைக் கல்லூரியில் பணிபுரிபவர்கல் எல்லோரும் தங்கள் செல்லங்களைக் கொண்டு வந்துவிடுவார்களாம். அங்கு அவர்களுக்கு என்று தனி அறைகள் இருக்கின்றனவாம், வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு இங்கு க்ரீஷ் இருக்கு இல்லையா அது போல. அங்கு இவர்களைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருப்பார்களாம். வளர்ப்பவர்களும் இடையில் சென்று பார்த்துவிட்டுக் கொஞ்சிவிட்டு வருவார்களாம்...அழகு இல்ல?)
   இதைப்பற்றி நிறைய எழுதலாம்...சகோ...உங்கள் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.

   கீதா

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்