விபத்து, மாரடைப்பு, பிரசவம் போன்ற உயிருக்கு போராடும் மனிதர்களை பார்க்கும்போதெல்லாம் நம்மை அறியாமல் நம் கை 108-க்கு போன் செய்யும். அந்தளவிற்கு மக்களின் மனதில் ஒன்றிப்போய்விட்ட ஒரு சேவை 108 ஆம்புலன்ஸ். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு நடைபெறும் அமைப்பின் பின்னால் மிகப்பெரிய வர்த்தக நோக்கம் இருக்கிறது. இதை வைத்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக பார்க்கிறார்கள்.
முதலில் 108 என்பது அரசு நிறுவனம் அல்ல. 108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் பலரும் அதை அரசு நடத்தும் சேவை என்றே நினைக்கிறார்கள். அதில் வேலை பார்ப்பது அரசு வேலை என்று நம்பித்தான் பலரும் அதில் வேலைக்கு சேருகிறார்கள். 108 தனியார் நிறுவனம்தான். முதலில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இதை செய்யத் தொடங்கியது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். தொடங்கிய கொஞ்ச நாளிலே சத்யம் போண்டியாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட, சத்யம் உரிமையாளரின் மைத்துனரான ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டது.
2005-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஹைதராபாத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2008 செப்டெம்பர் 15, அண்ணாதுரை பிறந்த நாளில் அன்றைய முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இப்போது ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், உத்தரகாண்ட், கோவா, தமிழ் நாடு, கர்நாடகா, அசாம், மேகாலயா, மத்தியப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த 15 மாநிலங்களோடு இப்போது புதிதாக ஜம்மு காஷ்மீரும் மேற்கு வங்காளமும் இணைகிறது.
'அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 801 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியா முழுவதும் 7,204 வாகனங்களை இப்படி நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த வாகனத்தில் வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் இல்லாத வசதிகள் இருக்கின்றன. அதி நவீன மருத்துவக்கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் அதோடு சிறப்புப் பயிற்சி பெற்ற அவ்வசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
ஒரு 108 வாகனத்தில் ஒரு ஓட்டுநர், இவரை பைலட் என்கிறார்கள். ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் என இரண்டு பேர் இருப்பார்கள். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் வேலை பார்ப்பார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை. மொத்தம் 12 மணி நேர வேலை.
ஷிப்ட் முடியும்போது ஏதேனும் அவசர அழைப்பு வந்தால் அதையும் முடித்து விட்டுத்தான் இவர்கள் வீட்டுக்கு செல்லவேண்டும். சில நேரம் இதுவே இரவு 12 மணி வரை நீடித்துவிடும். இப்படி கூடுதல் வேலைக்கு கூடுதல் சம்பளமோ அல்லது ஊக்கத்தொகையோ இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. முந்தைய ஷிப்டில் கூடுதல் நேரம் வேலைப் பார்த்ததற்காக அடுத்த ஷிப்டில் தாமதமாக வரமுடியாது. சரியாக காலை 8 மணிக்கு வந்துவிட வேண்டும்.
வேலைக்கு வந்ததும் அவசரகால மருத்துவ பணியாளராக இருப்பவர் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோலவே ஓட்டுநரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வார். எவ்வளவு நெருக்கடியான போக்குவரத்தாக இருந்தாலும் சரி, மோசமான சாலையாக இருந்தாலும் சரி, நெருக்கடிகளை சமாளிப்பது பாதுகாப்பாக வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டும். அதனாலே சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் ஒட்டக்கூடிய இளைஞர்கள்தான் ஓட்டுநராக நியமிக்கப்படுகிறார்கள்.
108 வாகனம் ஒவ்வொரு ஊரிலும் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, பொதுவான இடம் ஆகிய ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி வைப்பார்கள். இந்த ஊழியர்கள் எப்போதும் வாகனத்தினுள்ளே இருக்கவேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடெல்லாம் கிடையாது. இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அவசரகால மருத்துவ பணியாளராக இருக்கும் பெண்கள்தான்.
சாப்பிடுவது, தேநீர் அருந்துவது எல்லாமே ஆம்புலன்ஸ்க்குள்ளேதான். அவசர அழைப்பு வந்தால் உடனே கிளம்பிவிடவேண்டும் என்பதால் இவர்களுக்கு சாப்பாடு எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அடுத்த 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூடியிருக்கும் உறவினர்களை சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள்.
ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் அல்லது உடன் வரும் உறவினர்கள் விருப்பப்படி அவர்கள் விருப்பமான மருத்துவமனைக்கு சென்று சேருக்கிறார்கள். அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். அதற்காக சிறியதும் பெரியதுமாக 12 பதிவேடுகள் இருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், சிறுநீர் மற்றும் பிரசவம் என்றால் பிரசவக் கழிவுகள் அனைத்தையும் இந்த இருவருமே சேர்ந்துதான் சுத்தப்படுத்துகிறார்கள். ஒரு வாகனத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களை கையாளுகிறார்கள். ஒருமுறை கையில் அணிந்து கழற்றினால் கிழிந்துவிடும் மட்டமான கையுறையை அணிந்து கொண்டுதான் இவ்வளவு வேலையும் செய்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்..
நான் இதை அரசு நிறுவனம் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன் நண்பரே
பதிலளிநீக்குஎல்லாம் சரி கடைசியில் சொன்ன கையுறை மனதுக்கு வருத்தமாக இருக்கின்றது தொடர்கிறேன்
த.ம.2
தங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குஇதுபோன்ற ஒவ்வொரு சேவைகளிலும் எத்தனை எத்தனை விஷயங்கள் அடங்கியுள்ளன ! படிக்கும் போதே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமேலும் இதுபற்றி தொடர்ந்து எழுதுங்கள். அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நமக்கு உதவியாய் இருப்பது இந்த திட்டம் !இதில் பணி புரியும் பணியாளர்களுக்கும் எல்லா வகையிலும் உதவ வேண்டியது அரசின் கடமை :)
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குவேதனை நண்பரே
பதிலளிநீக்குநானும் இத்தனை நாளாய் அரசுத் துறையின் சேவை என்றே எண்ணி வந்துள்ளேன்
தம +1
தங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குஇவர்களின் working condition ஐ படித்தால் கண்ணில் ரத்தம் வருகிறது! இப்படிப் பட்ட சூழ்நிலையில் பணிபுரியும் இவர்கள் தங்கள் வண்டியில் பயணிக்கும் நோயாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் அது யார் தவறு?
பதிலளிநீக்குமிகவும் இக்கட்டான சூழலிலும் கருணையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் இதில் ஆறுதல்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
இது அரசு நிறவனம் என்று நினைத்திருந்தேன் .
பதிலளிநீக்குபெரும்பாலானோர் அப்படிதான் நினைக்கிறார்கள்.
நீக்குஇவ்வளவு கடினமான சூழ்நிலையில் சேவை செய்யும் ஊழியர்களை பாராட்டவேண்டும் அரசு இவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும்.
பதிலளிநீக்குதமிழகத்தில் இந்த சேவை ஆரம்பித்த நாள் அண்ணா அவர்கள் பிறந்த நாள் என்றால் அது நவம்பர் 15 ஆக இருக்க வாய்ப்பில்லை.அது செப்டெம்பர் 15 ஆக இருக்கவேண்டும்.
செப்டெம்பர் என்பதுதான் மாறிவிட்டது. திருத்திவிட்டேன்.
நீக்குவருகைக்கு நன்றி அய்யா!
அப்பப்பா. எவ்வளவு சோதனைகள். அனைத்தையும் கடந்து அவர்கள் செயலாற்றும் விதம் பாராட்டத்க்கது.
பதிலளிநீக்குபாராட்டப்பட வேண்டியவர்கள்தான்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
அருமையான எண்ணங்களின் வெளிப்பாடு
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஎல்லாம் தனியார்மயம் தாராளமயம் உலக மயத்தால் வந்த கேடுகளால்தான் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் சேவைப் பணியாளர்களுக்கம் சொல்ல முடியாத துயரங்கள் வந்து சேர்ந்தன
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஎத்தனை இடர்கள்! அத்தனையும் தாங்கித்தான் இந்தச் சேவை தொடர்கிறது ...நல்ல தகவல்கள்
பதிலளிநீக்குகீதா: சென்னை போக்குவரத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் போது நினைத்துக் கொள்வேன்...இதனுள் மருத்துவர்கள் யாரேனும் இருப்பார என்ரு. இப்போது பல அறிய முடிந்தது தங்கள் பதிவிலிருந்து. மகன் ஆம்புலேட்டரி செர்வீல் படிக்கும் காலத்தில் செய்திருந்தாலும்அது வித்தியாசமானது..
எங்கே போச்சு கருத்து காக்கா?
பதிலளிநீக்குகருத்துரையிடுக