இதை வாசிப்பதற்கு முன் முந்தைய பதிவை வாசித்தால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
கடந்த பதிவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் படும்பாட்டை பற்றி பார்த்தோம். அதேவேளையில் இலவசமாக சேவை வழங்கி வரும் இந்த ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் எப்படி லாபம் ஈட்டுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசு இந்த நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் லாப, நஷ்டம் இல்லாமல் சேவை நோக்கத்தோடு அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செய்து கொள்ளும் உடன்படிக்கை. அரசு லாபமில்லாமல் சேவை மனப்பான்மையோடு நடப்பதில் பிரச்சனையில்லை. ஆனால், தனியார் நிறுவனம் எப்படி சேவை மனப்பான்மையோடு நடக்கும்?
அதுவும் இலவசமாக சேவை செய்யும் ஒரு தொழிலில் எப்படி லாபம் பார்க்க முடியும்? என்று நமக்கு தோன்றலாம். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக ஆண்டுதோறும் பராமரிப்பு தொகையாக ரூ.4,200 கோடியை அரசு ஜி.வி.கே.யின் நிறுவனத்துக்கு கொடுக்கிறது. அதோடு அரசின் பங்களிப்பு முடிவதில்லை.
108-ல் ஏற்றப்படும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபருக்கும் தலா ரூ.1,500-ம், பிரசவம் என்றால் ரூ.2,000-மும் அரசு ஜி.வி.கே.யின் நிறுவனத்துக்கு வழங்குகிறது. இதற்காகவே பிரசவ கேஸ்களை அதிகம் ஏற்றுங்கள் என்று இந்த ஊழியர்களுக்கு நிறுவனம் உத்தரவு போட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு மாரடைப்பு, ஒரு பிரசவம் என்று அழைப்பு வந்தால் 108 பிரசவத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால் அதில் ரூ.500 கூடுதல் வருமானம் உண்டு.
இப்படி ஒரு வருடத்திற்கு லாபமாக சுளையாக பராமரிப்பு தொகை என்ற பெயரில் ரூ.4,200 கோடியை வாங்கிக் கொள்ளும் 108 நிறுவனம். இதுபோக மேற்கொண்டும் வருமானம் ஈட்டுகிறது.
ஒரு சின்ன வரவு செலவு:
ஒரு மாதத்திற்கு ஒரு 108 வாகனத்திற்கு ஆகும் செலவு
எரிபொருள் ரூ. 20,000
பராமரிப்பு ரூ. 5,000
2 பைலட்டுகள் சம்பளம் ரூ. 14,000
2 மருத்துவ பணியாளர் ரூ. 16,000
விடுமுறைக்கான மாற்று
பணியாளர் சம்பளம் ரூ. 7,000
மருந்து செலவு ரூ. 2,000
இதர செலவுகள் ரூ. 4,000
------------------
மொத்தம் ரூ. 68,000
------------------
800 வாகனங்களுக்கு 800 X 68,000 = ரூ. 5,44,00,000
ஒரு வருடத்திற்கு 12 X 5,44,00,000 = ரூ.65,28,00,000
இது செலவு கணக்கு. இனி வரவு பற்றி பார்ப்போம்.
சராசரியாக ஒரு வாகனத்திற்கு 8 பாதிக்கப்பட்டவர்கள் என்ற கணக்கில் மொத்தமுள்ள 800 வாகனத்திற்கு மொத்தம் ஒருநாளைக்கு 6,400 கேஸ்கள்.
பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ச தொகை ரூ.1,500.
ஒரு நாளைக்கு 6,400 X 1,500 = ரூ. 96,00,000
ஒரு மாதத்திற்கு 30 X 96,00,000 = ரூ. 28,80,00,000
ஒரு வருடத்திற்கு 12 X 28,80,00,000 = ரூ.345,60,00,000
ஆக, ஒரு வருடத்திற்கு மொத்த வரவு செலவு மற்றும் லாபம்.
வரவு ரூ.345,60,00,000
செலவு ரூ. 65,28,00,000
-------------------------
லாபம் ரூ.280,32,00,000
-------------------------
இப்படியாக ஒரு வருடத்திற்கு பராமரிப்பு தொகையாக ரூ.4,200 கோடியும் அதுபோக வருடத்திற்கு லாபமாக ரூ.280 கோடியும் கிடைக்கிறது. இது தமிழகத்துக்கு மட்டுமான லாபம். இன்னும் 16 மாநிலங்களையும் சேர்த்தால் லாபம் விண்ணைத்தொடும்.
மொத்தமாக ரூ.4,480 கோடியை ஒவ்வொரு வருடமும் அரசு வெறும் லாபமாக மட்டும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தருவதற்கு பதில், ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், நல்ல வாகன பராமரிப்பும் அளித்து அரசே ஏற்று நடத்தலாமே. ஏன் செய்யவில்லை?
ஏனென்றால் தனியார் நடத்தினால்தான் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வருமானம் அதிகம் கிடைக்கும். அரசே நடத்தினால் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதுபோக இன்னும் சில காரணங்களும் உண்டு. இன்றைய நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் பல தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன.
பின்குறிப்பு:
இந்த கணக்கு பணியாளர்கள், அதிகாரிகள் சொல்லிய விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையான வரவு செலவில் லேசான மாற்றங்கள் இருக்கலாம்.
பிரமிப்பான தகவலும் அதேநேரம் வேதனையாகவும் இருக்கின்றது யாருக்கும் மக்களைப் பற்றிய கவலை கிடையாது என்பது தெரிந்ததே....
பதிலளிநீக்குமுதல் பதிவின் இணைப்பு இல்லை நண்பரே
த.ம.1
இணைப்பை சரி வைத்துவிட்டேன் நண்பரே!
நீக்குமுதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!
ஆத்தாடி...! தலை சுற்றுகிறது...!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குகேட்கும்போதே தலை சுற்றுகிறதே! நிச்சயம் இது பற்றி அரசு பொதுக் கணக்கு தணிக்கையாளர் (Comptroller and Auditor General) ஏதேனும் சொல்லியிருக்கவேண்டுமே?
பதிலளிநீக்குபணம் என்ற ஒன்று இருக்கும்வரை எந்த கணக்காளரும் வாய்திறக்க மாட்டார்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
அருமையான அலசல்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குஉயிர்காக்க உதவுவதிலும் ஊழலா...கொள்ளையா...வேதனைதான்...
பதிலளிநீக்குஇப்படிஎல்லாம் நடக்குது பாருங்க மக்கள் தான் ஏமாளிகள்
பதிலளிநீக்குகருத்துரையிடுக