நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்,
எனது நீண்ட நாள் ஆசை ஒன்று தற்போது செயல் வடிவம் பெறத்தொடங்கியுள்ளது. அது சுற்றுலா சம்பந்தமான இணையதளம் ஒன்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இப்போது அதற்கான துவக்க வேலைகள் நடந்து வருகின்றன.
முதலில் தமிழகத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவலுடன் 2017-ல் பொதுப்பார்வைக்கு கொண்டு வரவுள்ளேன். அதன்பின் படிப்படியாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளின் சுற்றுலாத் தலங்களை கொண்டு வருவதாக திட்டம். இதற்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தேவைப்படும். அதனால் 2020-ல் தளம் முழுமையடையும். இதுவொரு நீண்ட கால வேலைதான்.
நமது பதிவர்களில் சிலர் பயணம் சம்பந்தமான பதிவுகளை சிறப்பாக எழுதி வருகிறார்கள். பலர் பயணம் பற்றிய தங்கள் அனுபவங்களை அவ்வப்போது இனிமையான பதிவாக வெளியிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட பயணப்பதிவுகள்தான் இந்த இணையதளத்திற்கு தேவை.
பொதுவாக சுற்றுலா இணையதளங்கள் பயணத்திற்கான வழிகாட்டுதல்களை மட்டுமே தரும். ஆனால், இந்த தளத்தில் நமது பதிவர்களின் பயண அனுபவங்களை 'அனுபவம்' என்ற பகுதியில் சேர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது மேலும் கூடுதலான தகவல்களை தரும். ஒரு சுற்றுலாத்தலத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, பரவசம், தொல்லைகள் பற்றி அனுபவத்தில்தான் முழுமையாக சொல்ல முடியும். இது அந்த இடத்தைப் பற்றி வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவும். அதனால்தான் இந்தப் பகுதியை இணைத்துள்ளேன். இது முழுக்க முழுக்க பயண அனுபவத்திற்கான பகுதி.
தங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது இதைத்தான், அது பதிவர்கள் தங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்ட பயண பதிவாக இருந்தாலும் சரி, அல்லது புதிய பதிவாக இருந்தாலும் சரி அதை எந்தவித தயக்கம் இல்லாமல் அனுப்பித் தாருங்கள்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு தங்களின் பதிவுகளையும் அதற்கான படங்களையும் அனுப்பும்படி அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். பதிவுகள் உங்கள் பெயரிலேயே வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவுகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
travelsnext2017@gmail.com
தங்கள் அனைவரின் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தங்களால் மிக அதிகமாக எத்தனை பதிவுகளை அனுப்ப முடியுமா அவ்வளவு அனுப்பி வையுங்கள். அனைத்தும் வெளியிடப்படும். தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.
நன்றி
மிக்க அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார்

நல்லதொரு செயல்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குநல்ல முயற்சி பாரட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குவெங்கட் நாகராஜ், துளசி டீச்சர் ஆகியோருக்கு ஏற்ற தளம், செய்தி!
பதிலளிநீக்குஉண்மையில் அவர்களுக்கான இணையதளம் தான் இது.
நீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
ஸ்ரீ! நான் எங்கள் தளத்தில் பயணப்பதிவுகள் அவ்வளவாக எழுதவில்லையே தவிர, நிறைய இருக்கிறது. சில படங்கள் இல்லாமல் இருப்பதால் எழுதவும் இல்லை. செந்தில் சகோவிற்குத் தெரியும்! ஸோ என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஹஹஹ்
நீக்குகீதா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குவாழ்த்துகள் நண்பரே....
பதிலளிநீக்குதொடருங்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குவாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஇத்தளத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி...
தங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்ததற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!
நீக்குஅற்புதமான முயற்சி. என் வாழ்த்துகள். மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி உங்கள் பார்வைக்கு வர வைப்பதை விட பின்னூட்டத்தில் தெரியப்படுத்தச் சொல்லுங்க. உங்கள் தளத்திற்கு வருபவர்கள் அதனையும் படிக்க உதவியாக இருக்கும். நான் என் சில கட்டுரைகளை அனுப்பி வைக்கின்றேன். இணைப்பு மட்டும் போதுமா? நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் தானே?
பதிலளிநீக்குஇதுவும் நல்ல யோசனையாக இருக்கிறது. நண்பர்கள் அப்படி செய்தாலும் நன்றே. இணைப்பை கொடுத்தால் போதும். நானே எடுத்துக்கொள்கிறேன். தங்கள் பதிவை பயன்படுத்திக்கொள்ள மிக ஆர்வமாய் இருக்கிறேன். தங்களின் பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நீக்குநானும்கூட அங்கிட்டு, இங்கிட்டு போயிருக்கேன் அதெல்லாம் செல்லுமா நண்பரே... ?
பதிலளிநீக்குத.ம.3
தலைவரே, இணையத்தளமே உங்களுடையதுதான். உங்களுக்கில்லாத உரிமையா..? அங்கிட்டு.. இங்கிட்டு.. எங்கிட்டு.. போனதையும் எழுதுங்கள் தலைவரே!
நீக்குஎன்னைத் தாங்கள் நேரில் சந்தித்தபோதே இதனைப்பற்றி என்னிடம் சொல்லியிருந்தீர்கள். நல்லதொரு புது முயற்சி. அனைவருக்கும் பயனளிக்கக்கூடியதும்கூட. வெற்றிபெற என் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆமாம் அய்யா! தங்களிடம் அன்று கூறியது இன்றுதான் நிறைவேற தொடங்கியிருக்கிறது. ஆனாலும் நிறைய தூரம் கடக்க வேண்டியிருக்கிறது.
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!
ஆகா...தமிழ்நாட்டு ஏ.கே.செட்டியார்(ஊர்சுற்றிப்புராணம்), வங்க எழுத்தாளர் ராகுலசாங்கிருத்தியாயன்(வால்காவிலிருந்து கங்கை வரை) போல எதிர்காலத்தில் செந்தில் விளங்க வாழ்த்துகள். நாங்களும் உங்களைப் பின்தொடர ஆசைதான். சுற்றும் வரை கற்றவையே நிலையான கல்வி! நல்ல முயற்சி, வாழ்த்துகள். நானும் எழுதுவேன். நன்றி.
பதிலளிநீக்குஆஹா..! பெரிய பெரிய ஜாம்பவான்களோடு இந்த சாமானியனை ஒப்பிட்டிருக்கிறீர்கள். தங்களுக்கு பெரிய மனசு.
நீக்குதங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அய்யா!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபதிவில் என்ன என்ன ரெஸ்ட்ரிக்ஷன்ஸ், புகைப்படத்தின் தன்மை, கட்டுரையின் நீளம் போன்றவற்றையும் தெரிவித்திருக்கலாம்
பதிலளிநீக்குமிக நல்ல கேள்விகளை கேட்டீர்கள்.
நீக்குபதிவுக்கான அளவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனாலும் சுருக்கமாக இருந்தால் பலரும் வாசிப்பார்கள். படங்களை பொறுத்தவரை இரண்டு படங்கள் கட்டாயம் வேண்டும். அதிகபட்சமாக 5 படங்கள் இருக்கலாம். நல்ல தெளிவான படங்களை மட்டும் அனுப்பவும். படங்கள் 300 KB அளவுக்கு குறைவாக இருத்தல் நலம். தங்களின் பதிவையும் எதிர்பார்க்கிறேன் நெல்லைத் தமிழரே!
வருகைக்கு நன்றி!
நெல்லைத் தமிழன் இது எமக்கான கேள்வி! ஹிஹிஹிஹி...நாங்கதான் ரயில் பெட்டி போல நீ...........ளமான பதிவு எழுதித் தள்ளிடுவோம்...சுற்றுலா என்பதால் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சரிதானே செந்தில் சகோ!!!
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஇரண்டு மூன்று இணைப்பு தருகின்றேன். பிழை திருத்தம், தேவையானது போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குhttp://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_22.html
மிக்க நன்றி நண்பரே, பயன்படுத்திக் கொள்கிறேன்.
நீக்குhttp://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_27.html
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே, பயன்படுத்திக் கொள்கிறேன்.
நீக்குhttp://deviyar-illam.blogspot.com/2014/03/2_26.html
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே, பயன்படுத்திக் கொள்கிறேன்.
நீக்குநல்லதொரு சிறப்பான முயற்சி... தொடர வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குநல்ல முயற்சி@ சுவிஸ் குறித்த என் பகிர்வை படங்களுடன் அனுப்ப முயற்சிக்கின்றேன்.
பதிலளிநீக்குதங்களுக்கு மெயிலிட்டேன். கிடைத்ததோ?
அனுப்பி வையுங்கள். தங்கள் பதில் மெயிலும் கிடைத்தது. மிக்க நன்றி!
நீக்குஅருமையான முயற்சி
பதிலளிநீக்குபாராட்டுகள்!
வாழ்த்துகள்!
மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅருமையான முயற்சி நண்பரே
பதிலளிநீக்குஎனது பதிவுகளை அவசியம் அனுப்பி வைக்கின்றேன்
நன்றி
கட்டாயம் அனுப்பி வையுங்கள் நண்பரே! ஆவலோடு காத்திருக்கிறேன்.
நீக்குதமிழில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு, மொழி, திரைப்படம் முதலான கலைகள் ஆகியவை பற்றித்தான் எல்லாரும் எழுதுகிறார்கள். அறிவியல், சுற்றுச்சூழல், பயணம் போன்றவற்றைப் பற்றிய எழுத்துக்கள் குறைவே. ஆனால், சுற்றுலா பற்றி இவ்வளவு நீண்ட காலம் எடுத்து இத்தனை பெரிய தனி இணையத்தளத்தையே நீங்கள் உருவாக்க முன்வந்திருப்பது பெரும் பாராட்டுக்குரியது! மிகவும் மகிழ்ச்சி! மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குநல்ல முற்போக்கு சிந்தனையுள்ள முயற்சி. அனைவரின் நல்லாதரவுகிடைக்கும்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குநல்ல முயற்சி! நல்வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா!
நீக்குமுதலில் பாராட்டுகள் எங்களிடமிருந்து (இருவரிடமிருந்தும்தான்!!!!!)
பதிலளிநீக்குதுளசி: எழுத முயற்சி செய்கிறேன்....
கீதா: சகோ! நான் சேர்ந்தாச்சு உங்களுக்குக் கை கொடுக்க....நம் இணைய நண்பர்கள் சகோதரிகள் பலர் இருக்க பயமென்....கலக்குங்கள் சகோ!!!! ஊர் சுற்றுவோம் உண்மையிலும்!!! இணையத்திலும்!!!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குகருத்துரையிடுக