Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1


'கும்கி' திரைப்படம் வந்தபோது எழுதிய கட்டுரை இது. உண்மையில் ஒரு கும்கி யானையை எப்படி பயிற்று விக்கிறார்கள் என்பதன் தேடல். அப்போது கும்கி யானைகளைப் பற்றி புகைப்பட ஆவணம் மேற்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். அவரிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். இனி அந்தக் கட்டுரை... 

* * * * *

வருக்கு போட்டோ எடுக்க யாரும் கற்றுத் தரவில்லை. கல்லூரி ஓவியப்போட்டியில் முதல் பரிசாகக் கிடைத்த ரூ.1,500-ல் தான் முதன் முதலாக ஒரு ஸ்டில் கேமராவை விலைக்கு வாங்கினார். ஐந்து வருடங்கள் முடிவதற்குள் கைதேர்ந்த புரொஃபஷனல் போட்டோகிராபராக மாறினார். 

ஆர். செந்தில்குமரன்
இது நடந்தது 2003-ல். அதற்குப் பின் 10 வருடங்களில் 11 சர்வதேச விருதுகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார். இன்றைக்கு டிராவல், வைல்ட் லைஃப், கமர்ஷியல் என்று பல தளங்களில் அசத்தும் போட்டோகிராஃபர். தற்போது 'கும்கி' என்ற ப்ராஜெக்ட் செய்து வருகிறார். அவரின் பெயர் ஆர். செந்தில்குமரன்.

அவரை சந்தித்து அவரது தொழில் பற்றியும் 'கும்கி' ப்ராஜெக்ட் பற்றியும் பேசினேன், "போட்டோகிராஃபி எனக்கு விருப்பமான ஒன்று. ஒளி பற்றிய புரிதல் எனக்கு இயல்பாகவே இருந்தது. ஒளியைக் கையாள தெரிந்தாலே நல்ல போட்டோக்களை எடுக்க முடியும். ஆரம்பத்தில் விளம்பரத்திற்கான கமர்ஷியல் போட்டோக்களை மட்டுமே எடுத்து வந்தேன். நண்பர் டி.எஸ்.மணி வைல்ட் லைஃப் பற்றிச் சொல்லச் சொல்ல அதன்மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டது. 

முதன் முதலாக தேக்கடி சென்று அங்குள்ள பறவைகள், பட்டாம்பூச்சிகளை மட்டும் படமெடுத்தேன். அதன்பின் ஏற்பட்ட ஆர்வத்தால் உலகின் பல காடுகளுக்கு சென்று விலங்குகளைப் படம் எடுத்து வருகிறேன். 

கடந்த 3 வருடங்களாக யானைகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். ஒரு வருடமாக 'கும்கி' யானைகள் பற்றிய டாக்குமென்ட்ரி எடுத்து வருகிறேன். இது முடிய இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். 

காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு காட்டு யானைகள் எப்போதும் ஒரு தொந்தரவாகவே இருக்கும். வயல்கள் அழிப்பதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் அவைகளின் வாடிக்கையாக இருக்கிறது. இவற்றை விரட்ட மனிதன் பலவகை முயற்சிகளை செய்து வருகிறான். அந்த முயற்சிகள் பலவற்றில் யானைகள் காயம் அடைந்தன. மனிதர்கள் இறந்தனர். யானைக்கும் மனிதனுக்குமான இந்த போராட்டத்தை சுமுகமாக மாற்றுவதற்கு வனத்துறை ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதுதான் யானையை வைத்தே யானையை விரட்டுவது. 

சரி, நாம் வளர்க்கும் கோயில் யானைகளை வைத்து விரட்டலாமே என்றால், அது முடியாது. கோயில்களில் இருக்கும் யானைகள் எல்லாமே பெண் யானைகள்தான். அது மட்டுமல்ல, பிறந்ததில் இருந்து மனிதர்களை பார்த்தே வளர்வதாலும், ஒரே இடத்தில் கட்டிப்போட்டு இருப்பதாலும் அவைகள் பலம் குறைந்து மென்மையாகி விடுகின்றன. காட்டு யானைகளை நேரில் பார்த்த மாத்திரத்திலேயே இவைகள் கதி கலங்கி போய்விடும்.


அந்த நிலையில் உருவானதுதான் காட்டு யானைகளை வைத்தே காட்டு யானைகளை விரட்டுவது என்ற திட்டம். இதற்காக காடுகளில் அடிபட்டு கிடக்கும் யானைகளைக் கொண்டு வந்தார்கள். அவற்றிற்கு மருத்துவம் செய்து பழக்கப்படுத்தி, அதிலிருந்து பலசாலி யானைகளை தேர்ந்தெடுத்தார்கள். அவற்றை 'கும்கி' என்று அழைத்தார்கள். 

கும்கிக்கு ஆண் யானைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். நல்ல வாட்டசாட்டமான ஆண் யானைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றுக்கு நீளமான தந்தம் இருக்கும். தந்தம் என்பது யானைக்கு தனி கம்பீரத்தை கொடுப்பது. நீண்ட பெரிய தந்தம் கொண்ட யானையைப் பார்த்து மற்ற யானைகள் பயம் கொள்ளும். 

இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கும்கி யானைகள் முழுவதுமாக குணமடைந்தபின், அவற்றுடன் பாகன்கள் நெருங்கிப் பழகத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் அவர்களை பக்கத்தில் வரவிடாமல் யானை விரட்டியடிக்கும். அதையும் மீறி மெல்ல மெல்ல அருகே செல்வார்கள். முதலில் இனிப்பான கரும்புத் துண்டுகளை கொடுத்து பழக்கப்படுத்துவார்கள். காட்டில் கரும்பு கிடைக்காது. முதன்முதலில் இனிப்பை சுவைக்கும் யானை அந்த சுவைக்கு மயங்கும். அடிமையாகும். தொடர்ந்து வெல்லம் கொடுப்பார்கள். இப்போது இன்னும் கொஞ்சம் மயக்கம் கொள்ளும். ஆனாலும் காட்டு யானைகள் சாமானியப் பட்டவைகள் அல்ல. அவ்வளவு எளிதில் மனிதனுக்கு வசப்படாது.

பின் எப்படி வசப்படுத்துகிறார்கள்?

                                                                                                                   
இதன் தொடர்ச்சி...

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2






20 கருத்துகள்

  1. ஒளி பற்றி செந்தில் குறிப்பிடிருந்தது அருமை...
    தொடர்வோம்
    இப்போ எப். பி யில்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. வித்தியாசமான கட்டுரை...தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. யானைகளைப் பற்றிய சுவாரஸ்யமான பதிவு. மேலும் தொடரட்டும் .... ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. தொடருங்கள் நண்பரே ....
    ஆவல் கூடியுள்ளது...

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. கும்கி
    அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு தொடர்கிறேன் நண்பரே...
    த.ம.4

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை