Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மூன்று விதமான பாலைவனங்கள்



பொதுவாக பாலைவனங்கள் மனித வாழ்க்கைக்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதிலும் செடிகளோ, உயிரினங்களோ வளர முடியாத பாலைவனங்களில் மக்கள் சுத்தமாக வசிப்பதில்லை. மற்ற பாலைவனங்களில் மிகச்சிறிய அளவில் மக்கள் வசிக்கிறார்கள். பாலைவனங்களை மூன்று வகையாக பிரிக்கிறார்கள் புவியியல் வல்லுனர்கள்.

அரேபியன் பாலைவனம்
முதல் வகை வெப்ப பாலைவனங்கள். இவை பெரும்பாலும் வெப்பமண்டலத்தில் காணப்படும் பாலைவனங்களே. ஆப்பிரிக்காவில் உள்ள அரேபியன் பாலைவனம், நமீப் பாலைவனம், காலஹாரி பாலைவனம் இவற்றிற்கு உதாரணம்.

கோபி பாலைவனம்
இரண்டாவது வகை பாலைவனங்கள், குளிர் பாலைவனங்கள் எனப்படுகிறது. இவை கடல்மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும். மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இப்படிப்பட்ட பாலைவனங்கள் உருவாகும். பகலில் அதிகமான வெப்பமும் இரவில் கடுமையான குளிரும் இருக்கும். வருடத்திற்கு 25 செ.மீ.க்கும் குறைவான மழைதான் பெய்யும். இத்தகைய காலநிலை காரணமாக ஏராளமான செடி, கொடிகள் இங்கே வளர்கின்றன. மத்திய ஆசியாவில் இருக்கும் கோபி பாலைவனம் தென் அமெரிக்காவில் உள்ள பட்டகோனியன் பாலைவனம் இந்த வகையை சேர்ந்த பாலைவனமாகும்.

அண்டார்டிகா
மூன்றாவது வகை, துருவப் பாலைவனங்கள் ஆகும். அண்டார்டிகா, யூரேஷ்யா, வட அமெரிக்காவின் வட பகுதி, க்ரீன் லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்கள் இந்த இனத்தை சேர்ந்தவையாகும். இந்த பாலைவனங்களும் வருடத்திற்கு 38 செ.மீ.க்கும் குறைவான மழையையே பெறுகிறது. இதுவும் கூட பனிப்பொழிவு போலத்தான் இருக்கும்.
வெப்ப பாலைவனங்களைப் போல இதில் மணற்பரப்பு அதிகமாக காணப்படாவிட்டாலும் பாறைகள் அதிகமாக இருக்கும். குறைவான அளவிலே உயிரினங்கள் இங்கு வாழும். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை விட மிகவும் வறண்ட பகுதியே அண்டார்டிகா.


பொதுவாக எல்லா பாலைவனங்களிலும் தட்ப வெப்ப நிலையை பார்த்தல். அதிகபட்ச வெப்பநிலை 58 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதே போல் குளிரும் வாட்டி எடுக்கும். மிகக் குளிர்ந்த நிலை மைனஸ் 88 டிகிரி. அதற்கும் கீழே கூட செல்லும். பாலைவனங்களில் 259 செ.மீ.க்கும் மேல் எப்போதும் மழை பெய்வதில்லை.

உலகில் இருக்கும் சில பிரபலமான பாலைவனங்கள் பெயர்கள் இங்கே. சஹாரா பாலைவனம், தார் பாலைவனம், ஆஸ்திரேலிய பாலைவனங்கள், கோபி பாலைவனம், கிரேட் விக்டோரியா பாலைவனம், காலஹாரி பாலைவனம், நமீப் பாலைவனம், மொஜாவி பாலைவனம், நேகேவ் பாலைவனம், கரா கும் பாலைவனம், கிரேட் பேஸின் பாலைவனம், கிரேட் ஸால்ட் லேக் பாலைவனம், கைசில் கிம் பாலைவனம், கிப்ஸன் பாலைவனம், அட்டகாமா பாலைவனம், கிழக்கு பாலைவனம், தக்ல மக்கான் பாலைவனம், கவிர் பாலைவனம், சோனோரன் பாலைவனம், படகோனிய பாலைவனம், சிரியன் பாலைவனம், அரேபியன் பாலைவனம் போன்ற பல பாலைவனங்கள் இருக்கின்றன.




22 கருத்துகள்

  1. பாலைவனங்கள் என்றால் வெப்பத்தோடு மட்டுமே தொடர்புடையது என நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமை நான் ஒரு பாலைவன ப்ரியன்
    த்க்ல மக்கான் என்றால் உள்ளே வந்தால் திரும்பி போகமாட்டாய்,கலகாரி நமிபியா
    அட்டகோமன் சோனரியன் அமெரிக்காவில
    நியூ மெக்சிகோ உள்ளது

    பதிலளிநீக்கு
  3. அருமை நான் ஒரு பாலைவன ப்ரியன்
    த்க்ல மக்கான் என்றால் உள்ளே வந்தால் திரும்பி போகமாட்டாய்,கலகாரி நமிபியா
    அட்டகோமன் சோனரியன் அமெரிக்காவில
    நியூ மெக்சிகோ உள்ளது

    பதிலளிநீக்கு
  4. பாலைவனங்கள் பற்றிய அரிய பெரிய தகவல்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான தகவல்கள் செந்தில் ஜி

    பதிலளிநீக்கு
  6. பாலைவனம் என்றாலே மணல் மட்டும்தான் என்றே இதுநாள் வரை எண்ணி வந்துள்ளேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. எனக்குத் தெரிந்தது எல்லாம் பாலைவனம் என்றால் வெப்பம் என்பதுதான். உங்கள் பதிவின் மூலம் குளிர் பாலைவனமும் உண்டு என்பதனைத் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. பாலைவனங்கள் கடுமையான குளிர் நிறைந்தவை என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஒரு திருத்தம். உலகின் மிகப் பெரிய பாலைவனம் சஹாரா (3.5 million Sq.m ) அல்ல. அண்டார்க்டிகா (5.5 million Sq.m ).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் குளிர் பாலைவனங்களை விட்டுவிட்டேன். தகவலுக்கு நன்றி நண்பரே!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. சிறப்பான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை