Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வேகத்திற்கு தடையில்லாத உலகின் அதிவேக டிராக்


ட்டுப்பாடு சிறிதும் இல்லாமல் நினைத்த வேகத்தில் வாகனத்தை ஓட்டவேண்டும் என்பது இளைஞர்களின் ஆசை மட்டுமல்ல, சில முதியவர்களுக்கும் கூட இந்த ஆசை இருக்கிறது. அதற்கு நமது சாலைகள் பயன்படாது. நினைத்த வேகத்தில் வாகனத்தை இயக்க எதிரில் எந்த வாகனமும் வரக்கூடாது. வளைவுகள் தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அப்படியொரு இடம் இருந்தால் மட்டுமே நாம் நினைத்த வேகத்தில் வாகனத்தை இயக்க முடியும். 


காட்டுத்தனமான வேகத்திற்கு தோதாக ஒரு பெரிய மைதானம் உள்ளது. இதன் பெயர் போனவில்லி என்பது. அமெரிக்காவில் உட்டா மாநிலத்தில் இருக்கிறது. இந்த காய்ந்த நிலம் முடிவில்லாமல் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. சுட்டெரிக்கும் வெயில்தான் இந்த இடத்தின் சூழல். இந்தப் பிரதேசம் வேகப்பிரியர்களின் புனித பூமி. 

1914-ம் ஆண்டு டெடி டெட்ஸ்லாப் என்பவர் முதன் முதலாக தனது 'பென்ஸ் ஸ்போர்ட்ஸ்' காரை இங்கு 226.76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிக்காட்டினார். இதன்பின்தான் போனவில்லி உப்பு பரப்பில் ரேஸ் வாகனங்களை ஓட்டலாம் என்பது உலகுக்கு தெரிய வந்தது. ஆமாம், போனவில்லியின் தரை மண்ணால் ஆனது அல்ல. அது முழுவதும் உப்பு பரவிய நிலப்பரப்பே.!

டெடிக்கு அடுத்தபடியாக 1935-ல் மால்கம் என்பவர் உலகில் முதன் முறையாக 480 கிலோ மீட்டர் என்ற வேகத்தின் புதிய உச்சத்தை தொட்டார். இதற்குப்பின் போனவில்லி வேகத்தில் உலக சாதனை நிகழ்த்தும் இடமாக மாறியது. பலரும் அதிகபட்ச வேக சாதனைகளை விதவிதமான வாகனங்களில் இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள். 

இந்த இடம் உப்புத் தரையாக இருப்பதால் மழைப் பெய்தால் உடனே உப்பு கரைந்து உப்பு சதுப்புநிலம் போல் மாறிவிடும். அதனால் மழைக்காலங்களில் இங்கு ரேஸ் போட்டிகள் எதுவும் நடைபெறாது. அமெரிக்காவின் கோடை காலமான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இங்கு ஏராளமான போட்டிகள் நடைபெறும். 

ரேஸ்கார்கள் செல்லும் பாதையின் தரத்தை கண்காணிக்கவும், ரேஸ் டிராக்குகளுக்கான 10 மைல் தூரத்தை அளந்து ஒதுக்கவும் மாகாண அரசே உதவி செய்கிறது. 10 மைல் தூரத்தைக்கொண்ட நேரான பாதையில் வாகனத்தை ஓட்டி மகிழ உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்கு குவிகிறார்கள். விமானம் பறக்க உதவும் ஜெட் இன்ஜின் பொருத்திய கார்களை இங்கு பார்ப்பது வெகு சாதாரணம்.   

திரஸ்ட்-எஸ்.எஸ்.சி.
இங்கு வரும் பெரும்பாலான கார்கள் 30 அடி நீளத்தில் பைபர் கிளாஸ் என்ற பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கார்களாகவே இருக்கும். இது பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியும். அசுர வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் ஜெட் விமான பைலட்டுகளே. திரஸ்ட்-எஸ்.எஸ்.சி. என்ற ஜெட் விமான இன்ஜின் பொருத்தப்பட்ட காரை ஆன்டி கிரீன் என்ற ஜெட் பைலட் மணிக்கு 1,228 கி.மீ. வேகத்தில் சென்ற அசாதாரண வேகத்தை இதுவரை உலகில் யாரும் முறியடிக்கவில்லை. இது கிட்டத்தட்ட ஒலியின் வேகத்துக்கு இணையானது. ஒலி ஒரு மணி நேரத்தில் 1236 கி.மீ. தொலைவை அடையும். இது நிகழ்ந்தது 1997 அக்டோபர் 15-ம் தேதி.

உலகம் முழுவதும் ஏராளமான ரேஸ் ட்ராக்குகள் இருந்தாலும் அதி வேகமாக செல்லக்கூடிய உலகின் ஒரே இடம் இதுதான்.  

* * * * * * * * * *


சாகித்திய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயனின் 'கோபல்ல கிராமம்' புத்தகம் பற்றிய அறிமுகம். காணொலியை கண்டு கருத்திடுங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள். 




19 கருத்துகள்

  1. தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    அருமையான கண்ணோட்டம்
    பயனுள்ள ஒளிஒலி (வீடியோ)

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான புத்தக அறிமுகம்.....

    வாழ்த்துகள்.

    வேகம்.... பலருக்கும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஆகா
    இப்படியும்இவ்வளவு வேகத்தில் ஓட்ட தளம்இருககிறதா
    வியப்புதான்நண்பரே

    பதிலளிநீக்கு
  4. அதி வேகமான தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. காணொளிக் காட்சிகள் மிக அழகாக ரஸிக்கும்படி காட்டப்பட்டு, கதைச்சுருக்கமும் மிகவும் பிரமாதமாக நூலை வாங்கி வாசிக்கும் ஆவலைத்தூண்டும்படிச் சொல்லப்பட்டுள்ளன.

    ஸ்பெஷல் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. கீதா: வேகம் ஆம் சகோ எனது தோழி சமீபத்தில் உட்டா மானிலத்திற்குச் சென்று வந்தார் அப்போது போனிவிலி பற்றிச் சொன்னார். என்மகனும் சொன்னான்...ஆனால் அவன் சென்றதில்லை. தோழி சென்ற சமயம்செம வெய்யில் என்றார். பாலைநிலம் போல இருக்கு என்றால் ஊரே அப்படித்தான் இருப்பதாகவும் சொன்னார்.

    நல்ல விரிவான தகவல். சிறப்பானதொரு புத்தக அறிமுகம் மற்றும் விமர்சனம் வழக்கம்போல் அருமை...பகிர்கிறோம்..



    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் கருத்தும் மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது. மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  8. வித்தியாசமான தடம் பற்றி அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை