Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இன்னமும் மன்னராட்சியுள்ள நாடுகள்


ன்னர்கள் காலமெல்லாம் மலையேறிவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் மகாராஜாக்களும் மகாராணிகளுமே ஆட்சி செய்கிறார்கள். ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 191 நாடுகளில் 28 நாடுகள் இன்னமும் மன்னராட்சியில்தான் உள்ளன. சில நாடுகளில் மன்னர் பதவியும் அதையொட்டிய ஆடம்பரங்கள் மட்டுமே இருக்கின்றன. அதிகாரமெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கிறது.


மற்ற சில நாடுகளிலோ செங்கோல் ஏந்திய மன்னருக்குத்தான் சகல அதிகாரங்களும். உலகில் மிக முன்னேற்றமடைந்த கண்டமாக கருதப்படும் ஐரோப்பாவில் மட்டும் 10 நாடுகள் மன்னர்களின் கையில்தான் இருக்கின்றன. ஆசியா கண்டம் கூட கிட்டத்தட்ட அதேநிலையில்தான் இருக்கிறது. ஆசிய நாடுகளின் அதிபர்கள் சிலர் தங்களை சக்கரவர்த்தி, சுல்தான், அமீர் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

இன்றைக்கும் மன்னராட்சி உள்ள சில நாடுகள்; இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், நார்வே, பெல்ஜியம், ஸ்பெயின், லக்ஸம்பர்க், லீச்ட்ன்ஸ்டெயின், மொனாக்கோ, தாய்லாந்து, ஜப்பான், கம்போடியா, பூடான், புருனே, ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு குடியரசுகள், ஜோர்டான், மலேஷியா, மொராக்கோ, லெசோதோ, சுவாசிலாந்து, டோங்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் 15 நாடுகளில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. எகிப்த், ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான்,  ஈரான், எத்தியோப்பியா, கிரீஸ் போன்ற நாடுகள் அவற்றில் சில. இப்படியாக இன்னமும் மன்னராட்சியின் மிச்சங்களாக இந்த 28 நாடுகள் இருந்தன.

* * * * * * * * * *

டிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கு நம் மக்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை இங்கு வந்த ஒரு ஆங்கிலேய மருத்துவரே தொகுத்து எழுதிய நாவல்தான் 'ரெட் டீ' இந்த ஆங்கில நாவலைத்தான் 'எரியும் பனிக்காடு' என்ற பெயரில் மொழிப்பெயர்ப்பு செய்தார்கள். அந்த நாவலை இயக்குனர் பாலா 'பரதேசி' என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார். 'எரியும் பனிக்காடு' என்ற புத்தகத்தைப் பற்றிய சிறிய காணொலி அறிமுகம். 

'எரியும் பனிக்காடு'




17 கருத்துகள்

  1. புத்தக அறிமுகம் பற்றிய காணொளி அருமையாக உள்ளது.

    இன்றும் மன்னர் ஆட்சி நீடிக்கும் நாடுகள் பற்றிய செய்திகளும் நன்கு அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. அருமையான தகவல்
    தங்கள் தேடலுக்கு எனது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  5. தகவல்கள் அருமை. சௌதி மன்னரை மட்டும், சௌதியின் அரசர்/இரண்டு புனிதப் பள்ளிவாசலின் காப்பாளர், மன்னர் குலத் தலைவர் என்று சேர்த்தே அழைப்பார்கள் (அரச குலம் அல் சாத்). 'புனிதப் பள்ளிவாசலின் காப்பாளர்' என்பதுதான் பெரிய கௌரவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னர்கள் என்றால் அப்படித்தான்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

      நீக்கு
  6. புதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. விரிவான தகவல்களுக்கும், புத்தக அறுமுகத்திற்கு மிக்க நன்றி. எரியும் பனிக்காடு ஏற்கனவே காணொளியில் பார்த்துவிட்டோம்.!!!! அருமை...

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல்.

    சிறப்பான புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை