• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், ஜனவரி 04, 2017

  ஒரு பழத்துக்காக 14 உயிர்கள்..!


  ன்றைக்கு விலங்குகள் உயிருக்கு கூட பெரும் மதிப்பிருக்கிறது. ஆனால், அன்றைய மனித உயிர்களுக்கு கொஞ்சமும் மதிப்பில்லை. உலகின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்றாக கருதப்பட்ட ஆட்டமோன் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதில் துருக்கியை ஆண்ட இரண்டாம் முகம்மது மன்னருக்கு மிகப்பெரிய பங்குண்டு. இவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யம் 400 ஆண்டுகள் நிலைத்து நின்றது. இவர் கி.பி.1451 முதல் 1481 வரை ஆட்சி செய்தார். 

  இரண்டாம் முகம்மது
  சுல்தான் முகம்மது ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது சுவை மிகுந்த முலாம் பழம் ஒன்றை சுவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அரசாங்க பணி ஒன்று குறுக்கிட்டது. அதனால் சாப்பிட்ட பழத்தை அப்படியே விட்டுவிட்டு அலுவலலை கவனிக்க சென்றுவிட்டார். ஒரு 10 நிமிடத்தில் அந்த வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் சாப்பிட வந்தார். அப்படி வந்த போது தான் சாப்பிட்டு மீதி வைத்துப்போயிருந்த முலாம் பழத்தை காணவில்லை. மன்னருக்கு கடும் கோபம். 


  அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த 14 பணியாட்களையும் அழைத்தார். எல்லைமீறி கோபத்தில் கர்ஜித்தார். "நான் சாப்பிட்டுவிட்டு மீதி வைத்துப்போயிருந்த முலாம் பழம் எங்கே?" என்று கேட்டார். பணியாட்கள் பயந்து நடுங்கினர். அனைவரும் தங்களுக்கு அதைப்பற்றி தெரியாது என்றும், தங்கள் யாரும் அதை பார்க்கவில்லை என்றும் நடுநடுங்கியபடி கூறினர். மன்னரின் கோபம் உக்கிரம் கொண்டது. 


  அரண்மனை வைத்தியரை அழைத்துவர கட்டளையிட்டார். கூடவே மற்றொரு முலாம் பழம் கொண்டுவரவும் ஆணையிட்டார். அரண்மனை வைத்தியர் வந்தார். அவரிடம் மன்னர், "நான் சாப்பிட்ட முலாம் பழத்தை இங்கிருக்கும் 14 பேர்களில் யாரோ ஒருவன்தான் திருடி சாப்பிட்டிருக்கிறான். யாரென்று கேட்டால் ஒருவரும் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால், எனக்கு யார் திருடியது என்று கண்டுபிடித்ததாக வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? இவர்களின் வயிற்றை அறுத்து, யார் முலாம் பழத்தை தின்றது என்று கண்டுபிடியுங்கள்." என்று ஆணையிட்டார். 

  மன்னரின் ஆணையை தட்ட முடியுமா? அங்கு இருந்த 14 பணியாளர்களின் வயிறும் உயிரோடு அறுக்கப்பட்டது. குடல், இரைப்பை என்று எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தும் முலாம் பழத்தின் சிறு துண்டு கூட யார் வயிற்றிலும் இல்லை. வயிறு மட்டும் அறுக்கப்பட்ட அந்த மனிதர்கள் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து போனார்கள். இந்த உத்தரவு நிறைவேற்றப்படும்போது மன்னர் புதிதாக கொண்டு வந்திருந்த முலாம் பழத்தை ரசித்து சாப்பிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

  யார் வயிற்றிலும் முலாம் பழம் இல்லை என்று தெரிந்ததும், "இவர்கள் சாப்பிடவில்லை. போலும்..!" என்று அலட்சியமாக கூறி மன்னர் எழுந்து போனார். பாதி தின்று வைத்த ஒரு முலாம் பழத்திற்காக 14 உயிர்களை கொன்றது நமக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும், அன்றைக்கு மனித உயிர்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை என்பதையே இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் காட்டுகின்றன.   10 கருத்துகள்:

  1. மனித உயிர்களின் வயிறு உயிரோடு அறுக்கப்பட்ட விஷயம் கேட்க வயிற்றெரிச்சலாக உள்ளது. மிகவும் கொடுமையோ கொடுமை இது.

   பதிலளிநீக்கு
  2. படிக்கும்போது வயிற்றைக் கலக்கிறது.

   பதிலளிநீக்கு
  3. மிக கொடூர குணம் கொண்டவனாக இருந்திருக்கிறானே!

   பதிலளிநீக்கு
  4. மிகக் கொடூரம்! சாடிஸ்ட்! இப்படிப் பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்தான்....

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்