Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !



நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து ஒரு  வருடம் முடிந்ததுமே அதன் அனுபவத்தை நமது வலைப்பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பணிச்சூழல் காரணமாக அது முடியாமலே போய்விடுகிறது. விரைவில் அது குறித்த பதிவையும், அதில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பது பற்றியும் எழுதுகிறேன். 

தற்போது நான் யூடியூபில் இரண்டு சேனல்கள் நடத்தி வருகிறேன் என்பது அனைவருக்குமே தெரியும்.  ஒன்று SPS MEDIA மற்றொன்று TRAVELS NEXT. இவற்றில் முன்னது அனைத்துவிதமான தகவல்களும் வரும் பொதுவான சேனல். பின்னது சுற்றுலா சம்பந்தமான பதிவுகளை மட்டும் கொண்ட ஒரு சேனல். இதில் இரண்டாவது சேனலுக்குத்தான் இப்போது சிக்கல்  ஆரம்பித்திருக்கிறது. அதுவொரு புது சேனல். இப்போதுதான் வளர்ந்து வருகிறது. அதனால் அதன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

இந்தநிலையில் 2018-ம் ஆண்டு யூடுப் சில புதிய விதிகளை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி இனி ஒரு சேனல் குறைந்தபட்சம் 1000 சந்தாதாரர்களை கொண்டிருக்க வேண்டும். அதோடு 4000 மணி பார்வை நேரம் இருக்க வேண்டும் என்பதே. இதுவொரு கடினமான இலக்குதான். சிறிய யூடுப் படைப்பாளிகளுக்கு இது மிகப்பெரிய நுழைவுத் தேர்வு போல்தான்.

எனது TRAVELS NEXT சேனல் தற்போது 500 சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. 1000 மணி பார்வை நேரம் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் மேல குறிப்பிட்டிருக்கும் இலக்கை அடைந்தால் இந்த சேனல் வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும். இல்லையென்றால் யூடுப் பார்ட்னர் புரோகிராமில் இருந்து டெர்மினேட் ஆகும். அதனை தவிர்ப்பதற்கு நண்பர்களாகிய தங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இந்த சேனலின் லிங்கை கீழே கொடுக்கிறேன். அதுபோக கடைசியாக பதிவேற்றப்பட்ட 'கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சந்தித்த இடம்' என்ற வீடியோவையும் இணைத்துள்ளேன். இந்த சேனலை 'சப்ஸ்க்ரைப்' செய்து சேனலில் நான் சுற்றுலா சம்பந்தமாக பதிவிட்டுள்ள வீடியோக்களை பார்த்து கீழே சேனலின் கமெண்ட் பகுதியில் கருத்துரையிட்டால் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் பார்வை நேரமும் கூடும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த இலக்கை ஒரு மாதத்தில் அடைய முடியும். சுற்றுலா சம்பந்தமான யூடுப் சேனல் எதுவும் தமிழில் இல்லை. அதனால் இந்த சேனல் முடங்கிவிடாமல் தொடர தங்களின் ஆதரவினை சப்ஸ்க்ரைப் மூலமாகவும் வீடியோக்களை பார்ப்பதன் மூலமாகவும் தெரிவியுங்கள்.  இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமே.

தங்களின் ஆதரவுக்கு நன்றி. 

----------------------------------------------------------

இந்த லிங்கை கிளிக் செய்து SUBSCRIBE செய்யுங்கள்.
https://www.youtube.com/c/TRAVELSNEXT அதோடு வீடியோக்களை அதிக நேரம் பார்த்து பார்வை நேரத்தையும் அதிகரிக்க உதவும்படி வேண்டுகிறேன். கூடவே வீடியோ குறித்த தங்களின் விமர்சனங்களை யூடியூப் கமெண்டில் தெரிவிக்கவும். நீங்கள் பார்த்து விமர்சிக்க 30 வீடியோக்கள் இந்த சேனலில் உள்ளன.

---------------------------------------------------------------

சுற்றுலாவில் பாரம்பரிய கட்டடங்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. அந்தவகையில் இந்த அரண்மனை, வரலாற்றின் மிக சமீபத்திய நிகழ்வுகளை நினைவுகூறும் விதமாக இருக்கிறது. அதனாலே இந்த அரண்மனை சுற்றுலாவில் தனியிடம் பிடித்திருக்கிறது. இந்த அரண்மனை பற்றிய விரிவான தகவல்களும் சேதுபதி மன்னர்களின் வரலாறும் இந்தக் காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.






Post a Comment

புதியது பழையவை