• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், பிப்ரவரி 15, 2018

  குண்டானால் குழந்தைப்பேறு பறிபோகும்  உடற்பருமன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். சென்ற தலைமுறை வரை ஓரளவு உடல் பூசியதுபோல் சற்று பருமனாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. உடற்பருமனாக இருப்பவர்களை பார்த்தாலே இவர்களுக்கு என்னென்ன வியாதிகள் இருக்குமோ என்று மக்கள் பேசிக்கொள்ளும் அளவிற்கு உடற்பருமன் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்பு நோய்களை மட்டுமே கொண்டுவருவதாக இருந்த உடற்பருமன் வேறுபல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் போதிய உணவு கிடைக்காமல் மரணமடையும் மனிதர்களை விட உடற்பருமனால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
  இந்த உடற்பருமன் குழந்தைப் பேற்றை எப்படி பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை விரிவாக சொல்கிறது இந்தக் காணொலி.

  2 கருத்துகள்:

  1. உடற்பருமனைப் பற்றி இந்தியப் பெண்களிடம் அவேர்னஸ் இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் அழகுக்கு குறைச்சலாக உடற்பருமனைப் பார்க்கிறார்களே தவிர ஆரோக்கிய நோக்கில் பார்ப்பதில்லை. அந்த அறியாமையைப் போக்க வேண்டும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா !

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்