Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரிக்கும் போது நடந்த பரபரப்பு நிகழ்வுகள்


நமது வலைப்பதிவு நண்பர்கள் எழுதும் பதிவுகள் பலவற்றை படிக்கும்போது அவற்றை காணொளியாக மாற்றும் எண்ணம் ஏற்படும். அப்படி கடந்த மாதம் முத்துநிலவன் அய்யா அவர்கள் தனது வலைப்பூவில் எழுதிய மொழிவாரி மாநிலங்கள் பற்றிய பதிவைப் படிக்கும்போது எனக்கு தோன்றியது. உடனே அய்யாவிடம் இதைப் பற்றி பேசினேன். அவரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தார். அதற்கான பணியில் இறங்கும் முன்னே நான் பணியாற்றும் 'தினத்தந்தி'யிலிருந்து மற்றொரு புத்தகத்தை தயார் செய்து தரும்படி தகவல் வந்தது. அந்த வேளையில் இறங்கியதால் இந்தக் காணொளி ரெடியாக தாமதமாகிவிட்டது. தகவலை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்த அய்யா அவர்களுக்கு நன்றி..!

இனி காணொளி பற்றி...


இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏகப்பட்ட சாம்ராஜ்யங்கள் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரே நாடாக மாற்றிய பின், மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது இந்தியாவை மொத்தமாக ஐந்து மாநிலங்களாக பிரிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் மக்கள் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இப்படி மாநிலங்களை பிரித்தால் அது மத ரீதியாக இந்தியா பாகிஸ்தான் நாடுகள் பிரிந்ததுபோல் மொழி ரீதியில் துண்டு துண்டாகிவிடுமோ என்று ஆட்சியாளர்கள் பயந்தனர். ஆனாலும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதைப்பற்றி விரிவாக இந்தக் காணொளி பேசுகிறது.  




4 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை