Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை ஏன் வேண்டும்? - 4

ரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அந்த கரைகளை எப்போதும் வலுவாக அமைக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அந்தக் கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச் சுவர் ஒன்றை அமைப்பார்கள். இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும். இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு.


ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள். மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை.

சமீபத்தில் வீராணம் ஏரியில் புதிதாக ஒரு மதகை அமைப்பதற்காக ஏரிக்கரையை கொஞ்சம் உடைக்க வேண்டியிருந்தது. இன்றைய நவீன இயந்திரங்களை கொண்டு கூட அந்தக் கரையை உடைக்க முடியவில்லை. பாறைப் போன்று கரை இறுகியிருந்தது. 

களிமண் இல்லாமல் கரை அமைக்க எப்படி முடியும்? என்று அகலத் திறந்த கண்களை வெளிநாட்டினர் இன்னமும் மூடவில்லை. 

இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது. அது ஏரியின் தரைப் பகுதியில் சேரும் சகதியை வெளியேற்றுவது. ஏரிக்கு வரும் நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறு சகதியையும் சேர்த்தே கொண்டு வந்துவிடும். இவைகள் அதிகம் சேர்ந்தால் ஏரி தூர்ந்து போய்விடும். மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால் இவற்றை ஏரியில் சேரவிடக் கூடாது எனபதில் மிக கவனமாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.

இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள் நம்மவர்கள். அதற்குப் பெயர் 'குமிழி'. இதுவும் ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான். இது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைத்திருப்பார்கள். ஒரு மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்த குமிழி இருக்கும்.


இந்த குமிழி பெரிய தொட்டிப் போன்ற அமைப்பில் இயங்கும். பெரிய நகரங்களில் சாலைகளைக் கடக்க நாம் பயன்படுத்தும் சுரங்கப் பாதை போல் இருக்கும். இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும் வெளிவாயில் ஏரிக்கு வெளியே பாசனக் கால்வாயிலும் இருக்கும். இதை வேண்டும்போது திறக்கவும் மூடவும் முடியும்.

ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இந்த குமிழியை திறந்து விடுவார்கள். சேறோடித்துளை மூலம் தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும் சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். வண்டல் மண் பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதனால் ஏரியின் தளத்தில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான தூர்வாரும் தொழிநுட்பம்.  

ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயர்கள் அதன் அருமை தெரியாமல் அவர்களது ஆட்சிகாலத்தில் குமிழி தேவையற்ற ஒன்று என்று நிறைய ஏரிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதன்பின் ஏரியில் வண்டல் மண்ணும் சேறும் சேரத்தொடங்கின. மதகுகள் சகதியால் அடைத்துக் கொள்ளத் தொடங்கின. ஏரிகளின் மரணத்திற்கு முதல் அச்சாரம் இது. இதோடு ஆங்கிலேயர்களின் நீர்நிலையை பாழ்படுத்தும் கடமை முடிந்துவிட வில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.      

அதைப் பற்றியும் பார்ப்போம்.

                                                                                                                             -தொடரும் 



24 கருத்துகள்

  1. மிகவும் அருமையான + பழமையான + நம் நாட்டு நீர் மேலாண்மைத் தொழில்நுட்பத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா!
      தங்களின் உற்சாகமான பின்னூட்டம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது.

      நீக்கு
  2. அருமையாக எழுதிவருகின்றீர்கள் செந்தில்குமார். நிறைய வாசிப்புப் பணியும் நடந்துள்ளது போல் தெரிகின்றது! ஆதாரங்களைத் திரட்டியுள்ளீர்கள். எப்படி எல்லாம் இருந்த நமது நீர்நிலைகள் மோசமாகி இருக்கின்றன பாருங்கள். வேதனைதான். இதை எல்லோரும் வாசிக்க வேண்டும். குறிப்பாக நமது தலைவர்களும். தொடர்கின்றோம்.

    கீதா: செந்தில் சகோ இந்தக் குமிழி எங்கள் ஊர் குளத்தின் (கோயில்) நடுவில் இருக்கும். குளத்தின் அருகில் மேட்டில் தார்ச்சாலை சென்றாலும் சாலையின் மறுபுறம் பெரிய வாய்க்கால் செல்லும். வாய்க்கால் இறுதியில் ஒரு பெரிய குளம்/ஏரியில் சென்று கலக்கும். குளத்திற்கும் இந்த வாய்க்காலிற்கும் இடையில் போக்குவரத்து உண்டு. இதைத் திறந்தால் குளத்து நீர் குறைந்தால் வாய்க்காலில் இருந்து குறிப்பாகக் கோடைகாலத்தில் திறந்துவிடப்படும். பின்னர் அடிவழி மண் எல்லாம் வாய்க்காலில் கலக்கும். இப்படி மாறி மாறி தண்ணீர் புதிதாக வந்து கொண்டிருக்கும். வாய்க்காலிற்கும் எங்கள் ஊரில் இருக்கும் பெரியாற்றுடன் இணைப்பு உண்டு. இந்த வாய்க்காலில் இருந்து சிறு சிறு வாய்க்கால்கள் மறு பக்கம் இருக்கும் வயல்களுக்குப் பாசனம் செய்ய ஓடிக் கொண்டிருக்கும். இந்த வாய்க்கால்கள் ஓடிக் கொண்டே இருப்பதால் வண்டல் மண் மட்டும் தான் பெரும்பாலும். வயல்களின் நடுவில் இவை. பெரியாற்றில் தண்ணீர் பெருகினால் அந்தத் தண்ணீர் இந்தப் பெரிய வாய்க்காலில் வந்துவிடும் இந்த வாய்க்காலில்ருந்து சிறியவாய்க்கால்கள், பின்னர் பெரிய வாய்க்கால் முடியும் பெரிய தாமரைக் குளம்/ஏரி, இது சுசீந்திரம் வரை நீண்டு இருக்கும். ஊரின் கீழூரில் உள்ள தாமரைக் குளம் மற்றும் இந்த வாய்க்காலிலுருந்து பிரியும் மற்றுமொரு கால்வாய் அடுத்துள்ள சிறு கிராமத்திற்குப் போகும் போவது மட்டுமல்ல அதிலிருந்து பிரியும் வாய்க்கால்கள் அங்குள்ள வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் என்று இப்படி எல்லாம் இணைந்து பல கிராமங்களை இணைத்து நீர்ப்போக்குவரத்து இருந்துக் கொண்டே இருக்கும். மழைக்காலத்தில் இவை அனைத்தும் நிரம்பி ஓடும். இரு பருவ மழையிலும் எங்களுக்கு மழை உண்டே.(கன்னியாகுமரி ஆயிற்றே..)மிகப்பெரியபுயலின் போது மட்டுமே ஆறு உடைப்பெடுத்து ஊருக்குள் நீர் வந்ததுண்டு. மற்ற படி எங்கள் ஊர் எப்போதும் நீர்வளத்தில்தான். எல்லா வீடுகளும் கிணறு உள்ள வீடுகள். கிணறுகளுக்கும் இந்தக் குளத்திற்கும் வாய்க்காலிற்கும் அடி வழி போக்குவரத்து உண்டு. வீட்டின் பின்னால் வேறு வாய்க்கால் உண்டு.அது கழிவு நீர் வாய்க்கால் வயலுக்குச் செல்லும். ஆனால் ப்ளாஸ்டிக் கிடையாது. நீங்கள் சொல்லச் சொல்ல இவை எல்லாம் நினைவில் வந்து சென்றது. ஆனால் இன்று என் கிராமத்தின் வயல்களும் காங்கிரீட் ஆகி வருகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம்போல் மிக விரிவான பின்னூட்டம் திகைக்க வைக்கும் விவரங்கள். மிக்க நன்றி சகோ. பல விவரங்களை அறிந்து கொண்டேன்.

      நீக்கு
  3. பண்டைக் காலத்தில் நம்மை ஆண்டவர்கள்
    பொது நலனோடு சிந்தித்தார்கள்
    இன்றோ நம்மை ஆள்பவர்கள்
    சுய நலனோடு......
    தம +1

    பதிலளிநீக்கு
  4. நிறைய சுவாரஸ்யமான தகவல்கள். இப்போது நீர்நிலைகளை பொக்ளின் கொண்டு சிதைத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. குமிழி தொழில் நுட்பத்தை,இன்றைக்கும் செயல்படுத்த முன் வருவார்களா ,இன்றைய அதிகாரிகள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளைக்காரன் என்ன சொன்னானோ அதை அப்படியே பயன்படுத்துபவர்கள் நம் அரசியல் வாதிகள், அவர்களுக்கு நம் முன்னோர்களின் அருமை பெருமைகள் தெரியாது.அதற்கு உண்மையான வரலாறை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும். ஆங்கிலேயன் தன்னை உயர்த்திக்காட்ட எழுதிய சரித்திரத்தை படிக்கும் நம் மக்கள் நமது உன்னதங்களை மறந்து போனார்கள்.

      நீக்கு
  6. இப்படியான பழந்தமிழர் தொழில் நுட்பத்தை குலைக்கத்தான்..உள்நாட்டு துரோகிகளுடன்.. தனியார் மயம், தாரளமயம், உலக மயத்தை கொண்டு வந்து இப்படி மக்களை அழிக்கிறார்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. நம் முன்னோர்களின் அற்புத நுட்பங்கள் வியக்கவைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் வியக்க வைத்தவர்கள்தான். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  8. நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவியல் திறமைப்பற்றிய அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    குமிழி பற்றி நன்றாக விளக்கிச் சொலலி இருக்கிறீர்கள். எங்கள் ஊர்ப் பக்கத்தில் குளத்திற்குப் போய் குமிழியை திறந்து விட்டேன் என்றும் உள்ளே படுத்துக்கொண்டே சென்றேன்... மீன் பிடித்தேன் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    த.ம.8

    பதிலளிநீக்கு
  10. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. பல புதிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி.. நீர்மேலாண்மை குறித்த நம்மக்களின் அன்றைய தொழில்நுட்பமும் உத்திகளும் அசரவைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    இப்படியான தொழில்நுட்பம் வியப்பாக உள்ளது... இந்த காலத்தில் எங்கே இருக்கு.கண்வைத்தது போல செய்கிறார்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை