Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை ஏன் வேண்டும்? - 6 குடி மராமத்து

ஏரிகள் - குளங்கள் குடி மராமத்து

ரு ஏரி எப்படி அமைய வேண்டும். ஏரியை வடிவமைக்கும் போது ஒரு மன்னன் என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சங்க கால பாடல்கள் ஏராளமாய் சொல்கின்றன.

எட்டாம் நாள் பிறை வடிவில் ஏரியை அமைத்தால் ஏரியின் கரை நீளம் குறைவாக அமைக்கலாம். அதே வேளையில் இந்த வடிவமைப்பில் நீரின் கொள்ளளவும் அதிகம் என்று கூறுகிறார் கபிலர். எத்தகைய ஞானம் அன்றைய புலவர்களுக்கு இருந்திருக்கிறது.

ஒரு அரசன் ஏரியை அமைக்கும் போது அதில் ஐந்து விதமான அம்சங்கள் இருக்கும்படி அமைக்க வேண்டும். அப்படி ஒரு நீர்நிலையை அரசன் உருவாக்கினால் அவனுக்கு சொர்க்கத்தில் ஓர் இடம் காத்திருக்கும் என்கின்றன பாடல்களும் கல்வெட்டும்.


அந்த ஐந்து அம்சங்களை பொதுவாக நமது எல்லா ஏரிகளிலும் குளங்களிலும் பார்க்க முடியும். அப்படிதான் அதனை அமைத்திருக்கிறார்கள்.  சொர்க்கத்தில் ஓர் இடம் பிடிப்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்.

'குளம் வெட்டுதல்' என்பது முதல் அம்சம். அதில் 'கலிங்கு அமைத்தல்' இரண்டாவது அம்சம், எரிக்கான நீரை கொண்டு வரும் 'வரத்துக்கால்', மதகுகளின் அமைப்பு, அதிகமான நீரை வெளியேற்றும் 'வாய்க்கால்' அமைப்பு போன்ற அனைத்தும் மூன்றாவது அம்சம். 'ஆயக்கட்டு' பகுதிகளை உருவாக்குதல் நான்காவது அம்சம். ஊருக்கான 'பொதுக்கிணறு' அமைத்தல் ஐந்தாவது அம்சம்.

பொதுக்கிணறு
பழமையான கிராமங்களில் இந்த எல்லா அம்சங்களுமே இருக்கும். இதில் பொதுக்கிணறு எதற்கென்றால் எப்படிப்பட்ட ஏரிகளும் கடுமையான வறட்சி காலத்தில் வற்றிப் போய்விடும். ஏரியில் குறைவாக இருக்கும் நீரை மதகுகள் வழியாக வயல்களுக்கு பாய்ச்சினால் நிறைய நீர் இழப்பு ஏற்படும். அத்தகைய காலங்களில் கினற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அதைதான் அவர்களும் செய்தார்கள்.

மேலும் கால்நடைகளுக்கும் சலவை தொழில் செய்பவர்களுக்கும் வருடம் முழுவதும் அதிக நீர் வேண்டும். இதற்காகவே ஏரியின் மையப்பகுதியில் ஆழாமாக எப்போதும் தண்ணீர் இருப்பது போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள். சலவைத் தொழிலாளிகள் எப்போதும் அவர்கள் பணி நிமித்தமாக எரிகளிலேயே தொடர்ந்து இருப்பதால் ஏரியை காவல் காக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தனர்.

நீர் சமூகத்தில் எந்தெந்த பிரிவுக்கு என்னென்ன வேலை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும். அதில் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது. அதானால் நீர் மேலாண்மையும் நீர் பகிர்தலும் எந்தவித தொய்வும் இல்லாமல் வெகு சிறப்பாக நடந்தது.

சரி, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, ஏன் சலவைக்குக் கூட நீர் கொடுத்தாகி விட்டது. அப்படியென்றால் ஊர்களில் கிராமங்களில் பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு நீர்..!

விட்டுவிடுவார்களா..!

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய மாந்தர்கள் அல்லவா அவர்கள். மனிதர்களை வாட விட்டுவிடுவார்களா. பிரமாண்டமான கோட்டைகள், அரண்மனைகள் கட்டும் போது கூடவே மழைநீரை சேமித்து வைக்கும் அகழியையும் அமைத்தார்கள். இதை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் அரணாகவும் மாற்றிக்கொண்டார்கள்.

வேலூர் கோட்டையும் அகழியும்
இதைப்போலவே பெரிய கோயில்களை கட்டும்போது அதில் விழும் மழைநீரை கோயிலுக்கான தெப்பக்குளங்களில் சேரும் விதமாக அமைத்தார்கள். இதுபோக குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு தனிக் குளங்கள் என்று ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தார்கள். இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

கோடையில் இந்தக் குளங்களும் சில சமயங்களில் வற்றிப் போகும். வருடம் முழுவதும் நிலத்தடி நீர் நல்லநிலையில் சேமிக்கப்படுவதால் சில நாட்களுக்கு மட்டும் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வார்கள்.


இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டது. இதற்கு 'குடி மராமத்து' என்று பெயர். அதாவது குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து பரமாரித்துக் கொள்ளும் முறை. வாரத்தில் ஒரு நாள் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த குளங்களை சுத்தப்படுத்துவார்கள். இதனால் குளங்கள் தூய்மையாகவும் உயிர்ப்போடும் இருந்தன.

இப்படி ஊர்மக்களையும் உணவளிக்கும் விவசாயத்தையும் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்ட தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றினார்கள்..?

அதையும் அடுத்துப் பார்ப்போம்.

                                                                                                                             -தொடரும்  



38 கருத்துகள்

  1. அன்புள்ள அய்யா,

    அன்றைய மன்னர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைத்ததோ என்னவோ தெரியாது...! வாழும் போதே நீர் மேலாண்மையில் பூமியையே சொர்க்கமாக மாற்றிச் சென்றிருக்கிறார்கள்.

    தங்களின் தொடர் பல அரிய தகவல்களை அறியவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. படங்கள் அனைத்தும் நன்று.

    இன்றைய மன்னர்கள் இதையெல்லாம் பார்த்தால் நாடு நலம் பெறும். மன்னர்களை மந்திரிகளே பார்க்க முடிவதில்லை! மன்னனை தேர்ந்தெடுக்கும் மக்களாவது பார்த்து தெரி(ளி)ந்து கொள்ளட்டும்.

    நன்றி.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய மன்னர்களுக்கு நரகத்தை விட கொடிய இடம் ஒன்றை உருவாக்கவேண்டும்.
      முதல் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  2. படிக்கப் படிக்க வியப்பு ஏற்படுகிறது நண்பரே
    எப்படி இருந்திருக்கிறோம்
    ஆனால் இப்போது
    இந்நிலை மாறவேண்டுமே
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் அதிசயிக்க வைக்கின்றன நண்பரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அதிசயத்தைத்தான் நாம் அழித்துக்கொண்டிருக்கும் நண்பரே!

      நீக்கு
  4. அருமையான தொடர்ப் பதிவு
    இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  5. என்றுமே வற்றாத கிணறு மற்றும் நீர் நிலைகள் போன்று, படிக்கப்படிக்க, சுவாரஸ்யமான செய்திகளைக் கொடுத்து, வாசகர்களின் தாகம் தீர்த்து வருகிறீர்கள். பாராட்டுகள்.

    தொடரட்டும் தங்களின் இதுபோன்ற பயனுள்ள + சமுதாய விழிப்புணர்வு ஊட்டிடும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  6. எத்தனை அறிவுடன் திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறர்கள் நம் முன்னோர்கள்..... அதை அழித்து விட்டு இன்று திண்டாடுகிறோம்.....

    விடுபட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்.... அதிக வேலை காரணமாக வலைப்பக்கம் வருவது குறைந்து இருக்கிறது. படித்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது படித்து கருத்திடுங்கள் நண்பரே!

      நீக்கு

  7. குடிமராமத்து பற்றி இன்னொரு செய்தி. அவசியம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் வந்து அந்த குளத்தை தூர் வாரி சுத்தப்படுத்தும் வேலையில் பங்கு கொள்ளவேண்டும். அப்படி வர முடியாதவர்கள் அவர்கள் சார்பில் யாராவது ஒருவரை பணியில் அமர்த்தி அவருக்கு ஒரு நாள் கூலியைக் கொடுக்கவேண்டும். உங்கள் ஊரில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தது கூட, பொது மராமத்து வேலைக்காகத்தான்.

    சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருவதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அய்யா!
      திருவிளையாடலில் இருந்து எடுத்துக் காட்டியது சிறப்பு.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  8. அறிய வேண்டிய செய்திகளைப் பெருமளவில் தாங்கிய இந்தத் தொடரின் பின்னால் இருக்கும் உங்களின் வாசிப்பும் உழைப்பும் வியக்க வைக்கிறது நண்பரே!
    கணினியில் முன்போல அதிகம் வர முடிவதில்லை என்றாலும் அலைபேசியில் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்தே வருகிறேன்.
    அதிலிருந்து உடனுக்குடன் கருத்திட முடியவில்லை.
    மன்னியுங்கள்.

    நாளிதழில் ஏதேனும் இத்தொடரை எழுதிவருகிறீர்களா..?

    பலர்க்கும் பயன்படுமே..!

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!
      இந்த தொடர் 'அக்ரி-டாக்டர்' என்ற விவசாய நாளிதழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

      நீக்கு
  9. எவ்வளவு யோசித்து செய்திருக்கிறார்கள்? நாம் ஜனநாயகத்தால் கெட்டோம்.
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜனநாயகத்தால் கெடவில்லை. ஆங்கிலேயர்களால் கெட்டோம்!

      நீக்கு
  10. அந்தத் சதிகார தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றிய விபரத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே.......

    பதிலளிநீக்கு
  11. அந்தத் சதிகார தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றிய விபரத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே.......

    பதிலளிநீக்கு
  12. வலைப்பக்கம் அதிகமாக வர இயலவில்லை. தொடர் கட்டுரையின் இந்தப் பதிவும் படங்களும் செய்திகளும் அருமை. ஆவலை தூண்டுகிறது. முதிய பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவற்றையும் படித்து கருத்திடுங்கள் நண்பரே! காத்திருக்கிறேன். வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. நம் முன்னோர்களின் உழைப்பும் திட்டமிடலும் எப்படி இருந்திருக்கின்றது பாருங்கள்! இதைப் பாடத்திட்டமாக அல்லது நூலாகக் கொண்டுவந்து மாணவர்களும் படிக்க உதவலாம். அத்தனைத் தகவல்கள் இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயம் இது போன்ற மேன்மையான பாரம்பரியத்தை பாடமாக வைக்க வேண்டும். அதேபோன்று உண்மையான வரலாற்றையும் பாடமாக மாற்ற வேண்டும். வெள்ளையனை உயர்வாக காட்டும் அவர்கள் எழுதிய வரலாறையும் மாற்ற வேண்டும். சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் ஆகியும் இன்னமும் அவர்களை பிரபு என்று அழைக்கும் கல்விதான் நம்மிடம் உள்ளது.

      நீக்கு
  14. அன்றைய மன்னர்கள் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்திப் பாடுபட்டார்கள். ஆனால் இன்று?

    குடிமராமத்து எவ்வளவு அழகான செயல்முறை... பொதுமக்களுக்கு பொறுப்புகளைப் பிரித்துக்கொடுக்கும்போது பொறுப்புணர்வு அதிகரிக்கிறது. அத்துடன் அதற்கான பலனையும் அனுபவிக்கமுடிகிறதே.. அருமையானதொரு தொடர்பதிவு.. இன்றைக்கு இணையத்தில் கிணறு ஒன்றின் படத்தைத் தேடினாலே கிடைப்பது அபூர்வமாக உள்ளது. ஆனால் பொதுக்கிணற்றின் படத்தை இங்கு காண்கையில் மகிழ்வாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிமராமத்து ஒரு அருமையான செயல்முறை. எப்போது நீர்நிலைகள் அரசின் கைகளில் வந்ததோ அன்றே அதன் அழிவு தொடங்கிவிட்டது.

      நீக்கு
  15. வணக்கம்
    ஒவ்வொரு தகவலும் சிறப்பு.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. அறிவின் புதையல்...நதியோடு நீங்கள் கொண்ட பயணம் புரிகிறது....

    பதிலளிநீக்கு
  17. ஆஹா! நிரம்ப விடயம் அறிய முடிகின்றது.முதல் படத்தினை பார்த்து ஏரியின் நடுவே கிணறு ஏன் என யோசித்துக்கொண்டே படித்தால் அதற்கான விளக்கம் அருமை.

    தொடருங்கள்...!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை