வெள்ளி, நவம்பர் 29, 2019

மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரிக்கும் போது நடந்த பரபரப்பு நிகழ்வுகள்


நமது வலைப்பதிவு நண்பர்கள் எழுதும் பதிவுகள் பலவற்றை படிக்கும்போது அவற்றை காணொளியாக மாற்றும் எண்ணம் ஏற்படும். அப்படி கடந்த மாதம் முத்துநிலவன் அய்யா அவர்கள் தனது வலைப்பூவில் எழுதிய மொழிவாரி மாநிலங்கள் பற்றிய பதிவைப் படிக்கும்போது எனக்கு தோன்றியது. உடனே அய்யாவிடம் இதைப் பற்றி பேசினேன். அவரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தார். அதற்கான பணியில் இறங்கும் முன்னே நான் பணியாற்றும் 'தினத்தந்தி'யிலிருந்து மற்றொரு புத்தகத்தை தயார் செய்து தரும்படி தகவல் வந்தது. அந்த வேளையில் இறங்கியதால் இந்தக் காணொளி ரெடியாக தாமதமாகிவிட்டது. தகவலை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்த அய்யா அவர்களுக்கு நன்றி..!

இனி காணொளி பற்றி...

புதன், நவம்பர் 06, 2019

இந்த சிவாலயம் ஓர் ஆன்மிக அற்புதம்
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்,

கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக கூடடஞ்சோறில் எந்தவொரு பதிவும் எழுதவில்லை. இதற்கு நான் காரணமில்லை. தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். இதனால் வலை நண்பர்களின் பதிவுக்குக்கூட கருத்திட முடியவில்லை.  இந்தக் கோளாறை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நமது வலை சித்தரும் நிறைய வழிமுறைகளை சொல்லிப்பார்த்தார். ஒன்றுமே எடுபடவில்லை.

நேற்று நமது நண்பர் நீச்சல்காரனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன முறையில் செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை. பின்னர் எனது வலைப்பக்கத்தில் இருந்த சில plugin-களை update செய்தவுடன் எல்லாமே சரியாகிவிட்டது.

செவ்வாய், ஏப்ரல் 02, 2019

கோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா?


பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா?

ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா? தனக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருக்கிறது. அதில் ஒருவர் கோயில் கட்ட நினைத்தால், கட்ட முடியமா? என்று கேட்டால் அது முடியாது என்கிறார்

ஞாயிறு, மார்ச் 31, 2019

நீட் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு இனி மதிப்பெண்கள் குறையாது!


மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வான 'நீட்'டில் தவறாக விடையளிக்கும் கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். இதனால் பல மாணவர்களும் சரியான விடைதெரியாத கேள்விகளை அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால், இனி விடைதெரியாத கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் பெரும் அபூர்வமான டிப்ஸை

ஞாயிறு, மார்ச் 24, 2019

ஜீரணக் கோளாறை சரி செய்யும் ஓர் ஆசனம்இன்றைய இளைஞர்கள் பலருக்கும் நெஞ்செரிச்சல் என்ற ஒரு கோளாறு ஏற்படுகிறது. இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது ஜங்க் ஃபுட். அத்தகைய உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதே எல்லா பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகிறது. இது நாளடைவில் உணவு செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த ஆசனம் அந்த பாதிப்பை சரி செய்து மேலும் பல உடல் ஆரோக்கியத்தை தருகிறது.

செவ்வாய், மார்ச் 19, 2019

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் - அறியப்படாத அபூர்வ தகவல்கள்
பங்குனி உத்திரம் முருகனுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. முருகனின் அனைத்து திருக்கோயில்களில் இந்தத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இது முருகனுக்கு மட்டும் உகந்த திருவிழாவா?

வெள்ளி, பிப்ரவரி 08, 2019

ஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறுதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த வீர விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு மட்டும் எப்போதும் தனியிடம் இருக்கிறது. அந்த மனிதரின் பெயர் அழகாத்தேவன். மதுரைக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டி என்ற கிராமம்தான் இவர் பிறந்த ஊர். அங்கு இவர் காளையை அடக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையுடன் இவருக்காக ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

வெள்ளி, ஜனவரி 25, 2019

சர்க்கரை நோய் முற்றிலும் குணமடைய...சர்க்கரை நோயின் தாய்வீடு என்று இந்தியா பெயரெடுத்துள்ளது. அத்தனை சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். மருத்துவம் பெருமளவில் வர்த்தகம் ஈட்டுவது இந்த நோய் மூலம்தான். இந்த நோயை எளிதில் நிவர்த்தி செய்ய எளிமையான ஒருமுறையை

வியாழன், ஜனவரி 24, 2019

சீனப் பயணமும் கருந்தேள் வறுவலும்..!
பதிவுலகில் உணவுக்கென்றே தனிப்பாதை அமைத்து அதில் ராஜநடை பயின்றவர் சுரேஷ் குமார். 'கடல்பயணங்கள்' வலைப்பூவை அறியாத உணவுப்பிரியர்கள் இருக்க முடியாது. பல நாடுகளுக்கும் சென்று, பலவித உணவுகளை சுவைத்து அதை சுவைபட எழுத்தில் கொண்டு வருபவர். அப்படிப்பட்ட இனிய நண்பரை காணொளி மூலம் பேசவைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணம். அந்த எண்ணம் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்த ஆண்டு அதிக வாசிப்பு

சமீபத்திய பதிவு

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

அது ஏப்ரல் மாதம் முதல் வாரம். 2020 ஆண்டு. கொரோனா  என்ற கண்ணுக்குத் தெரியாத அசுரன் மொத்த உலகையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்த காலம். இ...