சனி, ஏப்ரல் 30, 2016

கண்ணை மூடிக்கொண்டு சினிமா பார்த்தவர்கள்


முதல் உலகப்போர் முடிந்திருந்த நேரம். ஆப்ரிக்காவில் பிரெஞ்சுக்காலனி நாடுகள் ஏராளமாய் இருந்தன. பிரெஞ்சுக்காரர்கள் இந்த காலனி நாடுகளில் அடிக்கடி சினிமா காட்சிகளை காட்ட ஏற்பாடு செய்வார்கள். சினிமா அப்போது மேற்கத்திய  நாடுகளுக்கு சொந்தமான ஒன்றாக இருந்தது. 

பெரும்பாலும் அதில் வெள்ளையர்கள்தான் நடித்திருப்பார்கள். வெள்ளையர்களை உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் அடிமை என்பது போலவும் சித்தரித்திருப்பார்கள். சினிமாவில் அதிகமாக காண்பிப்பதும்  வெள்ளயர்களைத்தான். அதிகமாக புகழ்  பாடியதும் வெள்ளயர்களைத்தான்.


இந்த சினிமா காட்சிகள் ஆப்ரிக்காவின் முக்கியப் பிரமுகர்களுக்கும் மற்ற மதத் தலைவர்களுக்கும் போட்டுக்காடப்பட்டன அவர்களில் பெரும்பானவர்கள் மத அடிப்படைவாதிகள். அவர்கள் மதப்படி மனித உருவத்தை இறைவனைத் தவிர மற்றவர்கள் படைக்கக்கூடாது. அப்படி  படைப்பது தடை செய்யப்பட்ட ஒன்று. இருப்பினும் அவர்களால் தங்கள் ஆட்சியாளர்களின் உத்தரவை மீற முடியவில்லை. சினிமா காட்சிக்கு வந்திருந்தார்கள். 

வெப்பம் மிகுந்த அந்த முன்னிரவுகளில் திடீரென்று இரண்டு தூண்களுக்கு இடையே வெண்திரை கட்டுவார்கள். விளக்குகள் அணைக்கப்படும். அதிசயக்கருவி ஒன்றில் இருந்து ஒளிக்கற்றை வெண்திரையில்  பாயும். உடனே ஆப்ரிக்க மதத் தலைவர்களும் மற்றவர்களும் தங்கள் கண்களை  மூடிக்கொள்வார்கள். 

இதனால் திரையில் என்ன காட்டப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தொடர்ந்து சினிமா காட்டப்பட போது அவர்கள் மனதிலும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. தைரியம் மிகுந்த சிலர் படிப்படியாக கண்களை திறந்து லேசாக படம் பார்க்கத் தொடங்கினர். 

திரையில் காட்டப்பட்ட  உருவம் தெரிந்தனவே தவிர அவர்களால் கதையை புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கார், ஒரு ஆண், ஒரு பெண் ,ஒரு குதிரை என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மவுன பிம்பங்களைத்தான் அவர்கள் அன்று பார்த்தனர். இவற்றை இணைத்து கதையை தெரிந்து கொள்ள இயலவில்லை. திகைப்பும் குழப்பமுமே அவர்களுக்கு மிஞ்சியது. தொடர்ந்து சினிமா பார்கத்தொடங்கிய பின்னர் தான் அவர்களுக்கு கதை புரியத் தொடங்கியது. சினிமா பார்க்காமல் கண்களை மூடிக்கொண்ட அந்த இருண்ட கண்டத்திலிருந்தும் கூட பின்னாளில் தரமான சினிமாக்கள் வெளிவந்தன என்பது தனிக்கதை!


வெள்ளி, ஏப்ரல் 29, 2016

பார்வையை கூர்மையாக்க எளிய பயிற்சிண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும் பார்வை 'பளிச்'சென்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற நாட்டினரை காட்டிலும் சீனர்களுக்கு கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் உடற்பயிற்சி போலவே கண்களுக்கு பயிற்சி அளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

கண்களுக்கு என்றே பலவகையான பயிற்சிகளை வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பயிற்சி. முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். பின் இந்த பயிற்சிகள் ஒவ்வொன்றாக செய்தால் போதும். கண்ணாடி இல்லாமலே பார்வை பளிச்சிடும். 

பயிற்சி 1 
தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும் பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும். இப்படி 8 முறை செய்ய வேண்டும். எவ்வளவு தூரத்திற்கு பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு பார்க்க வேண்டும்.

பயிற்சி 2 
மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதை 8 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 3 
கண்களை வலமிருந்து இடமாக கடிகார முட்களைப் போல 8 முறை சுழற்ற வேண்டும். இதேபோல இடமிருந்து வலமாக 8 முறை சுழற்ற வேண்டும்.


பயிற்சி 4 
உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். முதலில் வலமிருந்து இடமாக கண்களால் 8ஐ போடுங்கள். இதையே மாற்றி இடமிருந்து வலமாக செய்ய வேண்டும்.

பயிற்சி 5 
உங்களது கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண் இருப்பதாக பாவித்துக்கொள்ளுங்கள். முதலில் மேலிருந்து கீழாகவும் பின் கீழிருந்து மேலாகவும் கண்களால் 8 போட வேண்டும்.

பயிற்சி 6 
வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை  பார்க்க வேண்டும். இதை 8 முறை செய்ய வேண்டும். இதேபோல இடது கண்ணின் மேல் கார்னரையும் கீழ் கார்னரையும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் கண்களை சிமிட்ட வேண்டும்.

இந்த பயிற்சிகள் முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து மூடிய உள்ளங்கைகளை மெதுவாக எடுக்க வேண்டும். அப்போது கண்களை சிமிட்டிக்கொண்டே கைகளை எடுக்க வேண்டும். பிறகு முழுமையாக எதிரே உள்ளவற்றை பார்க்கலாம்.

பயிற்சிகளை தினமும் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம். 30 முதல் 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலன் உண்டு. கடைசியாக ஒன்று பயிற்சி காலத்தில் மது, புகை கூடாது. இதற்கு கண்ணாடியே போட்டுக்கொள்ளலாம் என்று புகை, மதுப்பிரியர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.வியாழன், ஏப்ரல் 28, 2016

எரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


ரிடத்தில் எரிமலை வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 1815-ல் ஜாவா கடற்கரை பகுதியில் உள்ள 'டோம்போரோ' தீவிலிருந்த எரிமலை வெடித்த பொது, உலகமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரம் பேர் இறந்தார்கள். எண்ணற்ற பறவைகளும், விலங்குகளும் கொல்லப்பட்டன.

எரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக ஒரு பெரிய நகரத்திலிருக்கும் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். 


அதேபோல் அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. எரிமலை வெடிக்கும்போது, ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சக்தி வாய்ந்த பல ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தால் வெளிப்படும் அழிவு சக்தியைவிட, அதிக அழிவு சக்தியை அது வெளிபடுத்துகிறது. 

அப்படி எரிமலை வெடிக்கும்போது, பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்படுவதை உலக மக்கள் கண்டிருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து, மக்கள் தப்பித்துகூட ஓட சந்தர்ப்பம் தராமல் நிறைய உயிர்களை அழித்திருக்கின்றன. 


எரிமலை வெடிக்கும்போது டன் கணக்கில் எடையுள்ள பெரிய எரிகற்கள் ஆகாயத்தை நோக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் பல டன் எடை கொண்ட விஷ வாயுக்களைக் கொண்ட மேக மூட்டத்தை உருவாக்கி, மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன. 

பல எரிமலைகள் ரத்தச் சிவப்பாக காட்சி தரும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது. அதிக வெப்பத்தினால் கொதித்துக் கொண்டிருக்கும். இந்த தீக்குழம்ப்பு சுற்றி இருக்கும் எல்லா இடங்களுக்கும் பரவி அனைத்தையும் எரித்துவிடுகிறது.


இப்படி அழிக்கும் எரிமலைகளும் மனிதனுக்கு சில நன்மைகளை செய்கிறது. பூமிக்கு வெகு அழத்தில் இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் மலைகள் மீதும் சமவெளிகள் மீதும் மிகப் பெரிய அளவில் கொண்டுவந்து சேர்ப்பது எரிமலை வெடிப்பால்தான் நடக்கிறது. இது விவசாயத்தை பெருக்க உதவுகிறது. உலகின் பல இடங்களில் எரிமலை வெளிப்படுத்தும் குழம்பை பயன்படுத்தி நீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றி, அந்த நீராவியை கொண்டு விசையாழிகளை சூழ வைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

பூமிக்கு வெகு ஆழத்திலிருக்கும் பல தாதுப்பொருள்கள் வெளியே தூக்கி எறியப்படுவதால், பல தொழிலகங்களின் உற்பத்திக்கு இவை மூலப்பொருட்களாக பயன் படுகின்றன. எரிமலையின் உதவி இல்லாமல், வெகு ஆழத்தில் இருக்கும் இந்த தாது பொருட்களை மனிதனால் வெளியே எடுத்து வரவே முடியாது. இவையெல்லாம் எரிமலையால் ஏற்படும் பெரும் நன்மைகள்.
செவ்வாய், ஏப்ரல் 26, 2016

பூஜ்யம் தந்த இந்தியா

பூஜ்யத்தை உலகுக்கு அளித்தது இந்தியாதான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பூஜ்யத்தை இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர். பூஜ்யத்தை சூனியம் என்று அழைத்தனர். தொடக்கத்தில் நடுவில் ஒரு புள்ளியை மையமாக கொண்ட வட்ட வடிவமே பூஜ்யமாக குறித்து வந்தனர்.


அரேபியர்கள் இந்தியாவுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். வணிகர்களுடன் ஒரு சில அரபு அறிஞர்களும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்கள் புதிய பிரதேஷங்களின் அறிவு பொக்கிஷங்களை கற்றறிந்தனர். இவர்கள் இந்திய எண் முறையையும் பூஜ்யத்தையும் அரபியர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

அல்-கொவாரிஸிமி என்ற அரேபிய கணித அறிஞர் இந்திய எண் முறையின் எளிமையையும், அதைக் கொண்டு இந்திய கணித அறிஞர்கள் வேகமாக கணக்கிடுவதையும் கண்டார். இவரே இந்திய எண் முறையையும், பூஜ்யத்தையும் அரேபியில் புழக்கத்திற்கு கொண்டு வந்தவர். பின்னாளில், இந்த எண் முறைகள் இந்தோ-அரேபிய எண்கள் என பெயர் பெற்றது.


கிரேக்க எண்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள்  இந்த எண் முறையில் உள்ளன என்பதை அரேபியர்கள் அறிந்து இருந்தனர். அதனால், இந்தோ-அரேபிய எண்களை ஐரோப்பாவுக்கு தெரிவிக்காமல் ரகசியமாக பாதுகாத்து வந்தனர். இந்த முறையில் உள்ள சிறப்பு அம்சத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டது.

12-ம் நூற்றாண்டில் அடிலார்ட் என்ற பாதிரியார் ஒருவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு, கார்டோவா என்ற அரேபிய பள்ளியில் சேர்ந்தார். அவர் அங்கு இந்தோ-அரேபிய எண் முறையையும் கணித நுணுக்கங்களையும் கற்றார். அல்-கொவாரிஸிமியின் கணித நூலை லத்தீனில் மொழி பெயர்த்தார். இந்தோ-அரேபிய எண்ணையும் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினர். இப்படியாக நமது பூஜ்யம் ஐரோப்பா சென்றடைந்தது.


லியனார்டோ பிபோனாக்கி என்ற இத்தாலிய கணித அறிஞரே இந்தோ-அரேபிய எண்களை தற்போதைய புழக்கத்திற்கு கொண்டு வந்தவர். பல இடங்களுக்கு பயணம் செய்த இவர் அங்கெல்லாம் நிலவிய எண் முறையைவிட இந்தோ-அரேபிய எண் முறை சிறந்தது என்று கண்டார். இந்த முறையில் கணக்குகளை எளிதில் தீர்த்துவிட முடிவதையும் அறிந்தார்.

கி.பி.1202-ல் 'லிபர் அபாஸி' என்ற புத்தகத்தை பிபோனாக்கி எழுதினார். அதில் இந்தோ-அரேபிய எண் முறையையும், அதை உபயோகித்து கணக்கிடும் முறையையும் விளக்கினார். ஐரோப்பியர்கள் இந்த எண் முறையை பின்பற்றும்படியும் வேண்டினார்.

15-ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் நிகழ்ந்த மறுமலர்ச்சி இயக்கம், இந்தோ-அரேபியா எண்முறையை உபயோகத்தில் கொண்டு வர தூண்டுகோலாய் அமைந்தது. அச்சு முறையும் இதற்கு உதவியது. ஐரோப்பா முழுவதும் இந்த எண்முறையே பரவியது. கணிதம், அறிவியல் வரலாற்றில் இந்தோ-அரேபிய எண்கள் குறிப்பாக பூஜ்யம் ஒரு மைல் கல்லாகும். திங்கள், ஏப்ரல் 25, 2016

செல்ல நாய்களை அலுவலகம் கூட்டிச் செல்லுங்கள்..!


நாய்களை செல்லமாக வளர்ப்பதற்கு உலகம் முழுவதும் மனிதர்கள் விரும்புகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் நாய்களை கொஞ்சம் நேரம் கூட பிரிந்திருக்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம்.

அமெரிக்க போன்ற நாடுகளில் வேலைக்கு போகும்போது கூடவே நாயை அழைத்துக்கொண்டு போகிறவர்களும் உண்டு. உடனே இதை வைத்து வழக்கம் போல் ஆய்வு செய்திருக்கிறார்கள்.


'வர்ஜினியா காமன்வெல்த் யுனிவர்சிட்டி' என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் அலுவலகத்துக்கு நாய்களையும் அழைத்துச்சென்றால் மன இறுக்கமோ, கவலையோ இன்றி உற்சாகமாக வேலைப்பார்ப்பார்கள் என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்து கூறியுள்ளார்கள். அவர்கள் பார்க்கும் வேலையிலும் எந்த குறையும் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

அலுவலகத்துக்கு தங்களின் வளர்ப்பு நாய்களை அழைத்து வருபவர்கள் தங்கள் வேலைகளை வரிசையாக ஒழுங்குபடுத்தி, மன திருப்தியுடன் வேலை பார்க்கிறார்கள். நாயை அழைத்து வராதவர்கள் மன நெருக்கடியுடன் பணிபுரிவதால் வேலையின் தரம் குறைவாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வேலை செய்யவேண்டிய இடங்களில் உள்ள நாய்கள் நேர்மறையான மனோ பாவத்தை ஒவ்வொருக்கும் வழங்குகின்றன.


நாயை அலைத்துவருபவர்கள் சில நாட்கள் நாயுடன் வராமல் இருந்தால் அப்போது அவர்கள் வேலையை சுமாராக பார்ப்பதாக கண்டுபிடித்து கூறுகிறார் இந்தக் குழுவின் தலைவர் ரான் கடலாப் பார்கர்.

வீட்டிலும் அலுவலகத்திலும் நாய் வளர்க்க வாய்ப்பில்லாதவர்கள் தங்கள் தெரு நாய்களுக்கு உணவு அளித்து அதன் அன்பையும் நன்றிஉணர்வையும் பார்த்தால் நமது மன இறுக்கம் குறையும் என்றும் கூறுகிறார்கள்.


அலுவலகத்துக்கு ஆளுக்கொரு நாயை கூட்டி வந்தால் அந்த நாய்கள் போடும் சண்டையை சமாதனப் படுத்துவதற்கே நேரம் சரியாக போய்விடுமே. பின் எப்படி வேலை நடக்கும்? இதைப்பற்றி ஒருவேளை இன்னொரு ஆய்வு நடத்துவார்களோ என்னவோ..!

ஞாயிறு, ஏப்ரல் 24, 2016

கல்லூரி மாணவிகளின் கலக்கல் அப்ளிகேஷன்கள்


மொபைல் போனில் வெட்டித்தனமாக பொழுதைப் போக்குவதற்கு மட்டுமே கல்லூரி மாணவிகளுக்குத் தெரியும் என்ற மாயயை பொய்யாக்கியிருக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சில கல்லூரி மாணவிகள்.

தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஒவ்வொரு வருடமும் கணினி தொழிநுட்ப வளர்ச்சி சம்பந்தமாக தேசிய அளவில் போட்டி நடைபெறும். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த முறை ஐ.பி.எம். நிறுவனம் இந்த போட்டியை நடத்தியது. இந்தியாவின் பல நகரங்களில் இருந்து 108 மாணவர்கள் பங்கேற்றார்கள். மதுரையிலிருந்து 12 கல்லூரி மாணவிகள் இதில் கலந்து கொண்டார்னர்.

தற்போது பிரபலமாகிவரும் 'கிளவுட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் போனில் சாமானிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சிறந்த அப்ளிகேஷனை உருவாக்கி தரவேண்டும். இதுதான் போட்டியின் விதிமுறை.

இந்த போட்டியின் முதல் இரண்டு இடங்களை தமிழக கல்லூரி மாணவிகளே வென்றனர். அதுவும் மதுரையைச் சேர்ந்த கல்லூரிகள். முதல் பரிசை மதுரை தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்.பத்மப்ரியா, என்.பி.வைஷ்ணவி வென்றனர்.

இரண்டாம் பரிசை மதுரை கல்லூரி (Madura College) மாணவிகள் எல்.கற்பகவள்ளி, பி.காயத்ரி, உமா, மகாலட்சுமி ஆகியோர் கொண்ட குழு வென்றது.

முதல் பரிசை வென்ற ஆர்.பத்மப்ரியா, என்.பி.வைஷ்ணவி
முதல் பரிசு பெற்ற தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பத்மப்ரியவையும் வைஷ்ணவியையும் சந்தித்து அப்ளிகேஷன் குறித்து கேட்டதும், "நாங்கள் உருவாக்கிய அப்ளிகேஷனுக்கு 'ஸ்மார்ட் ஃபார்மிங் ஆப்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறோம். இது விவசாயிகளுக்கு உதவும் ஒரு அப்ளிகேஷன். இதன்மூலம் தொலை தூரத்தில் இருக்கும் தோட்டத்து பம்ப்செட்டுகளை வீட்டில் இருந்தபடியே இயக்கலாம்.

இதன் மூலம் கிணறு அல்லது போர்வெல்லில் இருக்கும் நீரின் அளவை தெரிந்து கொள்ளலாம். அங்கு வரும் மின்சாரத்தின் அளவை தெரிந்து கொள்ளலாம். வானிலை நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம். அதற்கேற்ப மோட்டரை இயக்கும் விதத்தில் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்தோம்.

மண்ணின் ஈரப்பதம், மழையால் தேங்கிருக்கும் நீரின் அளவையும் இதில் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். உட்கார்ந்த இடத்திலிருந்து வயலுக்கு நீர்ப் பாய்ச்சும் வேலையை செய்து முடிக்கும் எங்களின் இந்த கண்டுபிடிப்பே இந்திய அளவில் முதல் பரிசை வென்றது." பெருமையாக சொல்லி முடித்தனர், பத்மப்ரியாவும் வைஷ்ணவியும்.

 இரண்டாம் பரிசை வென்ற எல்.கற்பகவள்ளி, பி.காயத்ரி, உமா, மகாலட்சுமி
அடுத்து இரண்டாம் பரிசு பெற்ற மதுரை கல்லூரி மாணவிகள் கற்பகவல்லி, காயத்ரி, உமா, மகாலஷ்மி ஆகியோர் கொண்ட குழுவை  சந்தித்த போது, "நாங்கள்  உருவாக்கிய அப்ளிகேஷனின் பெயர் 'பார்க்கிங் ஏரியா ஆப்' இன்றைக்கு எல்லா நகரங்களிலும் வாகனங்களை பார்கிங் செய்வது மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. எங்களது அப்ளிகேஷனை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து கொண்டால் போதும் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கு வாகனங்களை பார்கிங் செய்வதற்கான இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை அடைவதற்கான ரூட் மேப் எல்லாமே வந்துவிடும்.

மேலும் ஒவ்வொரு நகரிலும் வாகனம் நிறுத்துவதற்கு தங்கள் நிலத்தை வாடகைக்கு விடத் தயாராக இருக்கும் உரிமையாளர்கள், பார்கிங்கிற்கு இடம் தேடும் வாகன உரிமையாளர்களையும் இணைக்கவும் இந்த ஆப்ஸ் பயன்படும்." என்று தற்போதைய பெரும் பிரச்சனைக்கு சுமூக தீர்வு தந்துள்ளார்கள் இந்த மாணவிகள்.

பயிற்சியாளர் மணிமாலா
இவர்களுக்கெல்லாம் பயிற்சி தந்து அவர்களை பரிசு பெரும் அளவிற்கு உயர்த்தியவர் மணிமாலா. இவரும் இவரது சகோதரர் செந்தில்குமார் ஆகிய இருவரும் இணைந்து தான் இந்த பயிற்சியை கொடுத்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து metoomentor.org என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

"இன்று ஆண்ட்ராய்ட், கூகுள், பயர் பாக்ஸ் என்று பல கணினி தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இவை எதுவுமே நமது பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப்படுவதில்லை. இந்த கருத்தை எனது அண்ணன் செந்தில்குமார் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தெரிவிக்க அவர்களும் இலவசமாக பயிற்சியளிக்க முன்வந்தார்கள். அதில் முதல் கட்டமாக மதுரை போன்ற டயர் 2 வகை நகரங்களின் கல்லூரி மாணவிகளுக்கு தொழிநுட்ப மேம்பாடு பயிற்சியை இலவசமாக கொடுக்கிறோம். 2014-ல் தான் தொடங்கினோம். தொடங்கிய ஒரு வருடத்தில் 200 மாணவிகளை தொழில் நுட்ப படைப்பாற்றல் திறன் கொண்டவர்களாக உருவாக்கியுள்ளோம்." என்று பெருமிதத்தோடு கூறுகிறார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்துவரும் மணிமாலா. இவரின் முயற்சிக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கும் நமது வாழ்த்துக்களைக் கூறி விடைப்பெற்றோம்!சனி, ஏப்ரல் 23, 2016

ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் இந்திய விவசாயிகள்..!

பஞ்சாப் விவசாயி
க்கள் ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் காலங்களில் நடைபெறும். ஆனால், மித மிஞ்சிய மனிதனின் ஆசைக் கூட குடிபெயர வைக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பஞ்சாப் விவசாயிகள். 

இந்தியாவிலேயே விவசாயத்தில் செழுமையும் தன்னிறைவும் கொண்ட ஒரே மாநிலம் பஞ்சாப்தான். அப்படிப்பட்ட அந்த மாநில விவசாயிகள்தான் தங்களின் விளைநிலத்தை விற்றுவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறுகிறார்கள். இதன் பின்னணியில் செழுமையும் பேராசையும்தான் இருக்கிறது. 

கதிரடித்தல்
பஞ்சாப்பில் விளைநிலங்களின் விலை நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிறது. அங்கு ஒரு ஏக்கர் விளைநிலம் 20 லிருந்து 30 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் போட்டிப்போட்டு இந்த நிலத்தை வாங்குகிறாகள். அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அதனால், இங்கு விவசாய நிலங்கள் எல்லாம் படுவேகமாக வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. அதிக பணத்திற்கு ஆசைப்படும் விவசாயிகள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள சொந்த நிலத்தை விற்பனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று குடியேறி விடுகிறார்கள். 


ஆஸ்திரேலிய இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் மக்கள் தொகை 128 கோடி என்றால் அங்கு 2.40 கோடிதான். அங்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அங்கிருக்கும் விவசாயிகள் 500, 1000 ஏக்கர் நிலங்களை வைத்து பிரமாண்டமாக விவசாயத்தை செய்து வருகிறார்கள். அங்கு நிலங்களின் விலையும் மிகக் குறைவு. 

ஆஸ்திரேலியாவின் இயந்திர விவசாயம்
பஞ்சாப்பில் 5 ஏக்கர் நிலத்தை விற்றால் போதும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம். அங்கு 85 சதவீத விளைநிலங்கள் பயிரிடப்படாமல் சும்மாவே கிடக்கிறது.  இந்தியாவில் இருந்து சென்று ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினால் உடனே அந்த நாட்டு அரசு அங்கேயே வாழ்வதற்கான குடியுரிமையை வழங்கி விடுகிறது. ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது. எப்படியாவது தங்கள் பூமியை உணவு உற்பத்தி களஞ்சியமாக மாற்ற துடியாய் துடிக்கிறது. 


இந்தியாவோ நிலங்களை எல்லாம் வீடுகளாக கட்டி கான்கிரீட் காடாக நாட்டை மாற்ற போட்டிப் போடுகிறது. மேலும், பஞ்சாப்பில் விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்சினை இருக்கிறது. சரி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றால் அவர்களின் நிலம் எல்லாம் சிறிது சிறிதாக இருக்கிறது. அதனால் இயந்திர வேளாண்மையும் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதுவும் அவர்கள் வெளியேற ஒரு காரணம். 


ஆனால், ஆஸ்திரேலியா அப்படியல்ல. அங்கு நிலங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை. அங்கு இயந்திரம் இல்லாமல் விவசாயம் என்பதே சாத்தியம் இல்லாதது. விதைப்பது முதல் அறுப்பது வரை எல்லாமே இயந்திரங்கள் தான். பண்ணை இயந்திரங்களை வைத்தே எல்லா வேலையையும் முடித்துவிடலாம். காய்கறி மற்றும் பழவகைகள் பயிரிட ஏற்றதாக அந்த மண் இருக்கிறது. 


ஆஸ்திரேலியா விவசாயத்திற்கு ஏற்ற தேசம். விவசாயம் மட்டுமல்லாமல் அதன் உபதொழில்கள் ஆன பால் பண்ணை வைத்து, ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரீஸின் போன்ற உயர்ரக பசுக்களை வளர்க்கவும் ஏற்ற இடம். பஞ்சாபிகள் ஏற்கனவே கடுமையான உழைப்பாளிகள். கேட்கவா வேண்டும் தங்களின் சொந்த நிலங்களை விற்று விட்டு ஆஸ்திரேலியாவுக்கு பறக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் ஆஸ்திரேலியா ஒரு பெரிய பஞ்சாப்பாக மாறி உலக நாடுகள் அனைத்துக்கும் உணவளிக்கலாம்..! 

வியாழன், ஏப்ரல் 21, 2016

நகைச்சுவையின் மற்றொரு அடையாளம்

ருசில திறமைசாலிகள் அவர்கள் காலத்தில் கொண்டாடப்படாமல் போவதற்கு மற்றவர்களின் மிதமிஞ்சிய புகழ் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். நகைச்சுவையின் உச்சக்கட்டத்தில் சார்லி சாப்ளின் கோலோச்சிய காலக்கட்டத்தில் அவரைப் போலவே ஒரு திறமையான நடிகர் சினிமாவில் இருந்தார். அவர் பெயர் பஸ்டர் கீட்டன். 

பஸ்டர் கீட்டன்
நாடக குழுவில் வேலைப்பார்த்த ஒரு தம்பதியருக்கு மகனாக 1895-ல் இவர் பிறந்தார். தன்னுடைய மூன்று வயதிலேயே மேடை ஏறிய இவர். அதன்பின் மேடையை அமைக்கும் நிர்மாண வேலையில் ஈடுபட தொடங்கினார். 1917-ல் நாடகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சினிமா பக்கம் திரும்பினார். 

அவர் ஹாஸ்பிட்டாலிட்டி
சார்லி சாப்ளினைப் போலவே இவரும் தன்னுடைய முதல் படத்தை தானே நடித்து, தானே இயக்கி, தானே கதையும் எழுதி உருவாக்கினார். 1920 முதல் 1923 வரை 19 படங்களை உருவாக்கி வெளியிட்டிருந்தார். எல்லாமே துண்டு ரீல் எனப்படும் சிறிய படங்கள். முழுநீளப் படம் என்றால் அவர் 1923-ல் வெளியிட்ட 'தி த்ரீ ஏஜஸ்' படத்தைச் சொல்லலாம். இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 

தி த்ரீ ஏஜஸ்
அதே ஆண்டில் இவர் உருவாக்கிய மற்றொரு படம் 'அவர் ஹாஸ்பிட்டாலிட்டி' என்பது. இதில் தென் அமெரிக்காவில் ரயில் பாதை அமைக்கும் காலத்தில் அங்கு வேலை செய்யும் ஒரு குடும்பத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். நடிப்பிலும் கதை அமைப்பிலும் பிரமாதப்படுத்தி இருக்கும் கீட்டனுக்கு இதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. 

ஷெர்லக் ஜூனியர்
மூன்றாவதாக கீட்டன் எடுத்த படம் 'ஷெர்லக் ஜூனியர்'. ஐரோப்பாவின் மிகப் பெரிய கலைப்படம் என்று பெயர் எடுத்தது. யதார்த்த படங்களின் முன்னோடி என்று இதைச் சொல்லலாம். நகைச்சுவையிலும் வித்தியாசமான நவீன கலை வெளிப்பாட்டை இந்த படத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்தார். 

1928-ல் இவர் உருவாக்கிய 'தி கேமரா மேன்' என்ற படம் கீட்டனின் சொந்த வாழ்க்கையையே சொன்னது. 1933-ல் பேசும் படங்கள் வரத் தொடங்கின.  மௌன படங்களில் சாதனை புரிந்த கீட்டனுக்கு பேசும் படத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்வதில் பெரும் தடுமாற்றம் இருந்தது. 

தி கேமரா மேன்
அளவற்ற மதுவுக்கு அடிமையாகி இருந்த காரணத்தால் ஸ்டுடியோக்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப அவரால் நடக்க முடியவில்லை. அவரின் ஒப்பந்தங்கள் தொடர்ந்து ரத்தாகிக் கொண்டே இருந்தன. சார்லி சாப்ளின் போலவே இவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவாதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கினார். இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்த போதும் அவர் காலத்தின் சிறந்த கலைஞராக மதிக்கப்பட்டார்.  ஷெர்லக் ஜூனியர் (1924)புதன், ஏப்ரல் 20, 2016

சீதனமாக வந்த நகரம்

ந்தியாவின் மிகப் பெரிய நகரம். வர்த்தகத்தின் தலைநகரம். உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இரண்டாவது பெரிய நகரம் என்று ஏகப்பட்ட பெருமைக்கு சொந்தமானது இந்த மும்பை நகரம். இந்த நகரம் பிரிட்டனுக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட ஒரு நகரம் என்றால் நம்பமுடிகிறதா? வேறுவழியில்லை, நம்பித்தான் ஆகவேண்டும்.  

இந்தியா கேட்
'மும்பை' என்ற பெயர் 'மும்பா தேவி' என்ற பெண் தெய்வத்தின் பெயரில் இருந்து வந்தது. மராத்திய மொழியில் 'அய்' என்பது அம்மாவைக் குறிக்கும். 'மும்பா அம்மா' என்பதை மராத்திய மொழியில் அவர்கள் மும்பை என்று அழைத்தார்கள். 16-ம் நூற்றாண்டில் மும்பையைக் கைப்பற்றிய போர்த்துக்கிசீயர்கள் 'பொம்-பே' என்று அழைத்தார்கள். போர்த்துக்கிசீய வார்த்தையான 'பொம்' என்பது 'நல்ல' என்று அர்த்தத்தை தரும். 'பே' என்பது வளைகுடாவைக் குறிக்கும். நல்ல வளைகுடா என்பதை அவர்கள் 'பொம்பே' என்று அழைத்தார்கள். 

தாஜ் ஹோட்டல்
மும்பை என்பது 7 தீவுகளின் தொகுதி. மும்பை, பரேல், மச்சாகாவ், மாகிம், கொலாபா, வோர்லி, ஓல்டு வுமன் என்ற இந்த ஏழு தீவுகளில் பெரியது மும்பைதான். இது பெரும் பாரம்பரிய வரலாறு கொண்ட நகரம். மகத பேரரசரான அசோகர் மும்பையை ஆட்சி செய்திருக்கிறார். கி.பி.150-ல்  கிரேக்கத்தின் புவி ஆய்வாளரான தலாமியா இதனை 'ஏழு தீவுகளின் கூட்டம்' (ஹெப்டானீசியா) என்று அழைத்தார். அதன்பின் பல ஆட்சியாளர்கள் மும்பையை ஆண்டனர். கி.பி.1348-ல் குஜராத் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த தீவுகளை அவர்களுடன் சேர்த்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட கி.பி.1494 வரை குஜராத் சுல்தான்களுக்கும், பாமினி சுல்தான்களுக்கும் இந்த தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போர் நடந்தன. 

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
அதனைத் தொடர்ந்து கடற் கொள்ளையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கி.பி.1534 டிசம்பர் 24-ல் போர்ச்சுகிசீயர்கள் குடியேற்றமும் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் பேசின் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள கட்டாயப்படுத்தினர். அதன்படி 7 தீவுகளும், அருகில் இருந்த மூலோபாயா நகரமும் போர்ச்சுகிசீயர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு ரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதில் ஆர்வமாக இருந்தனர். அதற்காக பல தேவாலயங்களை உருவாக்கினார்கள். 

தீவுகளை இணைக்கும் பாலம்
இந்த நிலையில் கி.பி.1661-ம் ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸுக்கும், போர்ச்சுக்கலின் அரசர் நான்காம் ஜானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் இந்த 7 தீவுகளும் வரதட்சணையாக சார்லஸுக்கு போர்ச்சுக்கல் மன்னர் வழங்கினார். இப்படிதான் மும்பை பிரிட்டீஷார் கைகளுக்கு வந்தது. 

கி.பி.1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு 10 பவுண்ட் என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த தீவுகளை ஏலத்தில் எடுத்து கொண்டது.  கி.பி.1661-ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை கி.பி.1675-ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது.கி.பி.1687-ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து மும்பைக்கு மாற்றியது. 

வேல்ஸ் அருங்காட்சியகம்
இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது. மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது. அதன்பின் கி.பி.1869-ல் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது. அதன்பின் அதன் வளர்ச்சி தங்குதடையில்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.  

துறைமுகம்


திங்கள், ஏப்ரல் 18, 2016

சித்திரைத் திருவிழா பார்க்கலாம் வாங்க..!

மிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது. 

நண்பர் குணா அமுதனின் திருவிழா படங்கள் ஒவ்வொன்றும் கவிதை. அந்த கவிதையை கொண்டு படங்களுடன் கூடிய சிறிய திருவிழா பதிவு இது. 

சித்திரைத் திருவிழாவின் நிகழ்வுகள் இங்கே படங்களுடன்.

கொடியேற்றம்
திருவிழாவின் தொடக்கம் இந்த கொடியேற்றம்தான். கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு மேலேறும் தத்துவத்தை எளிமையாக உணர்த்துவதே கொடியேற்றத்தின் நோக்கமாகும். உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் ஆயத்தமாக இருப்பதையும் கொடியேற்றம் அறிவிக்கிறது.முதல் நாள்
கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம் 

சங்கொலியுடன் ஊர்வலம் தொடக்கம்
சித்திரைத் திருவிழா முதல் நாள் அணிவகுப்பு
யானை முகன் முன்னே போக...
காமதேனு பின் தொடர்கிறாள்!
சிறுமிகளின் கோலாட்டம்..
இசைப் பாடலுடன் இளம் பெண்கள்...
இது பெண்களின் தாண்டியா...
கள்ளர் வேடமிட்ட பக்தர்கள்
 சிம்ம வாகனத்தில் மீனாட்சி
கற்பகவிருட்ச வாகனத்தில் சொக்கர் மற்றும் பிரியாவிடை


நோக்கம்
இறைவன் உலகின் ஆதாரம் என்பதை குறிக்கும் காட்சி இது. கர்ப்பக விருட்சகம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். மக்கள் எந்த வரம் கேட்டாலும் இங்கு கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம் கூடிவிடும் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்ம வாகனத்தில் வருவதாய் இதன் நோக்கமாக உள்ளது.

* * * * *

இரண்டாம் நாள்
அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்

மங்கள மேளத்துடன் இரண்டாம் நாள் வீதி உலா
கரகாட்டம்..
கையில் கிளியுடன் மீனாட்சி வேடத்தில் ஒரு பெண்
அன்ன வாகனத்தில் மீனாட்சி உலா..
                                    கருட வாகனத்தில் மீனாட்சி உலா..
சங்காரக் கோலத்தில் சிவபெருமான் பூத வாகனத்தில் வலம்

தள்ளாத வயதிலும் பக்தர்களின் வியர்வையை விசிறியால் விரட்டும் முதியவர்

சாமானியர்களின் பங்களிப்பு இல்லையென்றால் திருவிழா சுவைக்காது


நோக்கம்
ஐந்து பூதங்களையும் மனிதன் அடக்கி வாழ்வில் முத்தி பெற வேண்டும் என்பதற்காக அய்யன் பூத வாகனத்திலும், நீரும் பாலும் கலந்திருந்தாலும் நீரை விடுத்து பாலை மட்டும் பருகும் அன்னம் போல் நல்லதும் கேட்டதும் கலந்திருக்கும் இந்த உலகில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக அம்மன் அன்ன வாகனத்திலும் வலம் வருவதாக ஐதீகம். 

* * * * *

மூன்றாம் நாள் 
ராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு

சப்பர உலா!
காமதேனு வாகனத்தில் மீனாட்சி
ராவண கைலாச பர்வதம் வாகனத்தில்..

இராவணன் உடம்பின் மேல் உள்ள கைலாச பர்வதத்தில் சொக்கர் -பிரியாவிடையும் , காமதேனு வாகனத்தில் மீனாட்சியும் மாசி வீதி உலா...

* * * * *

நான்காம் நாள்
தங்கப் பல்லக்கில் பவனி 

நான்காம் நாள் உற்சாகம் ஆரம்பம்.. 
வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சொக்கர் ,பிரியாவிடை மற்றும் மீனாட்சிதங்கப்பல்லக்கு உலா வரும் சொக்கர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சியின் அருளாசி ....தங்கப்பல்லக்கு உலா... மக்கள் வெள்ளத்தில் !

உள்ளம் உருக ஒரு பிரார்த்தனை
நோக்கம்
இந்த பல்லக்கில், சாமியின் திரு உருவங்கள் திரை சீலை மறைந்திருக்கும்.. நமது எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை உணர்த்துவதுதான் இந்த திரைச்சீலை ..

படங்கள் : குணா அமுதன் 


இத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்

பாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...